2024ஆம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்ஸில் பெண்களுக்கான ஐம்பது கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஐம்பது கிலோ எடைப் பிரிவில்`நூறு கிராம்`எடை அதிகமிருந்தார் என்பது காரணம். இந்திய அளவில் இந்த நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மல்யுத்த வீரர்கள்...
Author - பிரபு பாலா
2024ஆம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்ஸில் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் பதினைந்து பிரிவுகளில் உள்ளன. இந்த ஆண்டு துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இரண்டு வீரர்கள் இந்திய ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்திருக்கிறார்கள். ஒருவர் துருக்கி நாட்டைச் சேர்ந்த வீரர் யூசுப் டிகேக். துப்பாக்கி சுடுதல் போட்டியில்...
மீண்டும் அமராவதி நகரத்தை ஆந்திராவின் தலைநகரமாக அறிவித்து அதை நிர்மாணிக்க மத்திய அரசிடம் 15000 கோடி, கோரினார் சந்திரபாபு நாயுடு. அவர் கேட்ட நிதியை அளிக்க மத்திய அரசு சம்மதித்துள்ளது. நெரிசலைக் குறைக்கவும் நாட்டின் மத்தியப் பகுதியில் முதலீட்டை மேம்படுத்தவும் தென் கொரியா சேஜோங்கைத் தலைநகரமாக மாற்றியது...
நிலவில் ஒரு குகை இருப்பதற்கான புதிய ஆதாரங்களை விஞ்ஞானிகள் முதல் முறையாகக் கண்டறிந்துள்ளனர். அந்தக் குகை தரைமட்டத்திலிருந்து கீழ் நோக்கி நூறு மீட்டர் அளவு ஆழம் உள்ளதாக இருக்கும். மனிதர்கள் தங்குவதற்கு ஏற்றதாக அந்தக் குகை இருக்கலாம் என்று அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். நிலவின் தரைப்பரப்புக்கு அடியில்...
2023-24-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி (Defence Production) புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பாதுகாப்பு உற்பத்தி என்பது போர்க் கருவிகள் மற்றும் அதற்குத் தேவையான பாகங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வது. மேக் இன் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியான பாதுகாப்பு புதிய மைல்கற்களைத் தாண்டியுள்ளது...
நான்கு தலைமுறைகள் மனிதர்கள் வாழ்ந்த, நூறாண்டுகளைத் தொடவுள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களின் ஆயுள் முடிவுக்கு வரவுள்ளது. இதனால் அங்கு வாழும் சுமார் எண்ணூறு குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. மாஞ்சோலை என்றாலே 1999-ஆம் ஆண்டு நடந்த தாமிரபரணிப் படுகொலைதான் பெரும்பாலானவர்களுக்கு...
மே 15, அதிகாலை. போர்கும் (Borkum) சரக்குக் கப்பலை ஸ்பானியக் கடற்கரையில் சிலர் நிறுத்தினார்கள். வேறு வழியில்லாமல் கார்டேஜினா நகரக் கடற்கரையிலிருந்து சிறிது தொலைவில் நின்றது அந்தக் கப்பல். பாலஸ்தீனியக் கொடிகளை அசைத்து கப்பலை நிறுத்திய எதிர்ப்பாளர்கள் இந்தக் கப்பல் இஸ்ரேலுக்கு ஆயுதங்களைக் கொண்டு...
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் நாட்டையே அதிர வைத்திருக்கின்றன. விஷச்சாராயம் அருந்திய அறுபது பேர் மரணம். நூற்று தொண்ணூற்று எட்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னட செய்தித் தொலைக்காட்சிகளிலும் இச்சம்பவம் பற்றிய விவாதங்கள் நடைபெறுகின்றன...
கடந்த ஆண்டு மூளைப் புற்றுநோயால் (Glioblasma) பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மருத்துவப் பேராசிரியர் ரிச்சர்ட் ஸ்கோலியர் தன்னுடைய சொந்த ஆராய்ச்சியின் மூலம் சுயசிகிச்சையை மேற்கொண்டு புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளார். இந்தப் புற்றுநோய் பாதித்தவர்கள் அதிகபட்சம் பன்னிரண்டு மாதங்கள் மட்டுமே...
1991-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள லண்டன் வங்கியில் வைக்கப்பட்டிருந்த நூறு டன் தங்கம் சமீபத்தில் திரும்ப இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது. கடந்த வாரம் ஒரு சிறப்பு சரக்கு விமானம் இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்தது உயர்மட்ட அதிகாரிகள் சிலருக்கு மட்டுமே தெரியும். ரகசியமாகக் கொண்டுவரப்பட்டது என்பதற்காக...