மருந்தியல் துறையில் ஒரு மருந்து கண்டுபிடிக்கப் பல விசயங்கள் தேவைப்பட்டாலும், தேவையான மிக முக்கியமான விசயம் டார்கெட் (Target) எனப்படும் இலக்கு. இலக்கு ஒன்று இருந்தால்தான் அந்த இலக்கினைத் தாக்கி அழிக்க மருந்துகள் கண்டுபிடிக்க முடியும். புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் சவாலாக உள்ள ஒரு விசயம்...
Author - ராஜிக் இப்ராஹிம்
நமது உடலில் ஓடும் இரத்தத்தில் பல்வேறு இரகசியங்கள் பொதிந்துள்ளன. அவற்றுள் இளமை திரும்புவதற்கான காரணிகளும் அடங்கும். மனிதன் உட்படப் பல்வேறு விலங்குகளின் உடலில் ஓடும் குருதியின் திரவப் பகுதி பிளாஸ்மா (Plasma) எனப்படும். இளம் வயது விலங்கின் பிளாஸ்மாவினை முதிர்ந்த விலங்குகளுக்கு அளிக்கும்பொழுது அந்த...
இந்த ஆண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு (Nobel Prize for Physiology or Medicine) அமெரிக்காவினைச் சார்ந்த உயிர்வேதியியல் விஞ்ஞானி (Biochemist) காடலின் காரிகோ (Katalin Karikó) அம்மையாருக்கும் நோய் எதிர்ப்பு அறிவியல் விஞ்ஞானி (Immunologist) ட்ரூ வெய்ஸ்மேன் (Drew Weissman) அவர்களுக்கும் இணையாக...
2018-ஆம் ஆண்டிலிருந்து கேரளாவை மூன்று முறை கதிகலங்க வைத்துவிட்டுச் சென்ற ஒரு வைரஸ், நான்காவது முறையாக மீண்டும் தனது அடுத்த ஆட்டத்தினை ஆடத் துவங்கியுள்ளது. முதன் முதலாக 1999-ஆம் ஆண்டு மலேசியாவில் சுங்காய் நிபா என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நிபா வைரஸ் (Nipah virus) தான் அது. இரண்டு துணை வகைகள்...
உயிரியல் தொழில்நுட்பம் கடந்து வந்துள்ள பாதை மிக நீண்டது. அது செல்ல வேண்டிய தூரமும் இன்னும் நிறைய உள்ளது. சொல்லப்போனால், கடந்து வந்த பாதையை விட மிகச் சுவாரசியமாக இருக்கப் போகின்றது இனி கடக்க இருக்கும் பாதை. இத்தொடரின் இறுதி அத்தியாயமான இதில், உயிரியல் தொழில்நுட்பத்தின் மூலம் நாம் எதிர்காலத்தில் என்ன...
மருந்து நிறுவனங்கள் எவ்வாறு ஆரம்பிக்கப்படுகின்றன? நான் ஓர் உயிரியல் சார்ந்த துறையில் நிபுணத்துவம் பெற்றவன் அல்லது ஓர் எம்பிஏ பட்டதாரி அல்லது எனக்குத் தொழில்முனைவில் ஆர்வம். நான் நினைத்தால் ஒரு மருந்து நிறுவனத்தினை ஆரம்பித்துவிடலாமா? ஏன் முடியாது. கண்டிப்பாக முடியும். ஒரு பெட்டிக்கடை ஆரம்பிப்பது...
மருந்துகள், சந்தையிலிருந்து வெளியேற்றப்படும் காரணங்கள் சென்ற அத்தியாயத்தில் விளக்கியுள்ள அனைத்துக் கட்டங்களையும் தாண்டிய ஒரு மூலக்கூறே மருந்தாக மாற்றம் பெறும். இதில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் இந்த மூலக்கூறு தோல்வி அடையலாம். இன்னும் சொல்லப்போனால் மருந்தாக மாற்றம் பெற்று நோயாளிக்கு அளிக்க...
மருந்து உருவாகும் கதை பெரும்பான்மையான நேரங்களில் ஒரு மருந்து கண்டுபிடிப்பிற்கான அடித்தளம் அதாவது கீழ்நிலை ஆய்வுக் கட்டம் (Discovery phase) பல்கலைக்கழகங்களிலோ, ஆய்வு நிறுவனங்களிலோ அல்லது சிறிய உயிர்தொழில்நுட்ப நிறுவனங்களிலோ இடப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் பெரு மருந்து நிறுவனங்களில் இந்நிகழ்வுகள்...
மருந்துகள் கண்டுபிடிக்கப்படும் கதை கோவிட் பெருந்தொற்றின் ஆரம்பக் காலக்கட்டங்களில் பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பு எப்பொழுது கோவிட் வைரஸிற்கு எதிரான தடுப்பு மருந்து அல்லது மருந்து கிடைக்கும் என்பதாகவே இருந்தது. எதிர்பார்த்ததுபோலவே கூடிய விரைவில் தடுப்பு மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டு அவை...
க்ரிஸ்பர் தெரபி மருத்துவ உலகிற்கு உயிரியல் தொழில்நுட்பம் வழங்கியுள்ள மற்றொரு நன்கொடை க்ரிஸ்பர். இந்த க்ரிஸ்பர் பற்றி மேலோட்டமாக ஏற்கனவே சில அத்தியாயங்களில் நாம் பேசியுள்ளோம். இப்போது சற்று விரிவாகப் பார்த்துவிடலாம். நமது உடலில் நோயெதிர்ப்புச் சக்தி உள்ளது போல உலகில் உள்ள அனைத்து உயிரிகளுக்கும்...