மனிதக் குடலில் வாழும் நுண்ணுயிரிகளின் தொகுப்பு (The Human Gut Microbiome) மனித நுண்ணுயிர்த் தொகுப்பு, குறிப்பாக மனிதனின் குடல் பகுதியில் வாழும் நுண்ணுயிர்களின் தொகுப்பு மற்றும் அதனுடன் இணைந்த மனித உடல்நலத்தின் மீதான ஆர்வம் விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் மத்தியில் கடந்தசில வருடங்களாக அதிகரித்து...
Author - ராஜிக் இப்ராஹிம்
அவங்க நல்லவங்களா? கெட்டவங்களா? ஆள் பாதி ஆடை பாதி என்பது பழமொழி. ஆடை இல்லையேல் அவன் முழு மனிதன் கிடையாது. உண்மையில் மனிதர்களை முழுமையாக்குவதில் முக்கியப் பங்கு ஆடைகளை விட நுண்ணுயிரிகளுக்கே அதிகம். ஆம். ஆடை இல்லாமல் கூட உயிர் வாழும் மனிதர்கள் இப்புவியில் உண்டு. நுண்ணுயிரிகள் இல்லாமல் எம்மனிதராலும்...
ஒரு புதிய வகைத் தடுப்பு மருந்து செயலிழக்கச் செய்யப்பட்ட அல்லது கொல்லப்பட்ட பாக்டீரியாவினைத்தான் சாதாரணமாக நோய்த் தடுப்பு மருந்து தயாரிக்கப் பயன்படுத்துவர். ஆனால் ஏப்ரல் 13, 2023 அன்று வெளியாகியுள்ள புகழ்பெற்ற ‘சயன்ஸ்’ பத்திரிக்கையில் (Science Journal) சற்று வித்தியாசமான முறையில் தயார் செய்யப்பட்ட...
புற்றுநோய்த் தடுப்பு மருந்துகள் தடுப்பு மருந்துகள் நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்களுக்கு எதிராக மட்டும்தான் கண்டுபிடிக்க இயலுமா? இல்லை. புற்றுநோய்களுக்கும் தடுப்பூசிகள் உண்டு. நாம் ஏற்கனவே பார்த்ததுபோல் தடுப்பூசி என்பது செயலிழக்கச் செய்யப்பட்ட ஒரு நோய்க் காரணியையோ அல்லது ஆண்டிஜென் எனப்படும் நோய்க்...
தடுப்பு மருந்து கண்டுபிடிக்க இவ்வளவு வழிகள் இருக்கும்பொழுது, மேலும் தடுப்பு மருந்து மூலம் நோய்களைத் தடுப்பதில் கடந்த காலத்தில் மிகச் சிறந்த வெற்றிகள் பலவற்றினை நாம் பெற்றிருக்கும்பொழுது, பிறகு ஏன் எல்லா நோய்களுக்கும் நம்மால் தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்கமுடியவில்லை? அதற்குப் பல்வேறு காரணங்கள்...
வரும் முன் காப்போம் இதுவரை இம்யூனோதெரபி சம்பந்தமாக நாம் பார்த்து வந்த அனைத்துமே புற்றுநோய்க்கான மருந்துகள். அதாவது நோய் வந்தபின் அதனைத் தீர்க்க அல்லது நோயின் அறிகுறிகளை மட்டுப்படுத்த அல்லது நோயாளிகளின் வாழ்நாளினைச் சிலகாலம் நீட்டிக்க உதவும் காரணிகள். நோய் வந்தபின் அதனுடன் போராடுவதைவிட நோயே வராமல்...
கார்-டி செல் தெரபி டிசிஆர் தெரபியில் உள்ள ஒரு மிக முக்கியமான சவால் எந்தப் புற்றுநோய்க்கு எதிராக இந்த டிசிஆர் செல்கள் செயல்பட வேண்டுமோ, அந்தப் புற்றுநோய்க்கான ஆண்டிஜென்கள் எம்ஹெச்ஸி புரதங்களால் அடையாளம் காட்டப்பட வேண்டும். புற்றுச் செல்களில் இந்த எம்ஹெச்ஸி புரதங்கள் மட்டுப்படுத்தப்பட்டு...
டிசிஆர் தெரபி புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் சென்ற அத்தியாயத்தில் பார்த்த டிஐஎல் எனப்படும் சிகிச்சை முறை ஒரு முக்கிய மைல்கல். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் சற்று முதிர்ந்த நிலையில் உள்ள தோல் புற்றுநோய்க்கான சிகிச்சை முறையில் இதன் பங்கு இன்றியமையாதது. இருப்பினும் இந்த வகைச் சிகிச்சையில் உள்ள...
அடாப்டிவ் செல் சிகிச்சை (Adoptive Cell Therapy or ACT) இம்யூனோதெரபியில் குறிப்பிடத்தகுந்த மற்றொரு வகைச் சிகிச்சை முறை இந்த அடாப்டிவ் செல் சிகிச்சை (ஆக்ட்). இந்த வகை இம்யூனோதெரபி சிகிச்சை முறை மூன்று வகையாகத் தயாரிக்கப்பட்ட டி-செல்களில் ஏதேனும் ஒன்றினைக் கொண்டு அளிக்கப்படுகின்றது. அவை (அ) டியூமர்...
வாசிப்பின் எளிமைக்காக நமது உடலுக்குள் வரும் அல்லது ஏதோவொரு காரணத்தினால் உடலிலேயே ஏற்படும் நோய் உண்டாக்கும் பொருட்களை இனி ‘நோய்க் காரணிகள்’ என்றே அழைப்போம். அவை கிருமிகளாக இருந்தாலும் சரி அல்லது புற்றுச் செல்களாக இருந்தாலும் சரி. இவ்வளவு வலுவான நோயெதிர்ப்பு மண்டலம் நம்மிடமிருந்தும் பிறகு ஏன் சில...