வயநாடு. ஜூலை 30 , 2024 . நள்ளிரவைக் கடந்தும் மேகங்கள் அழுது வடிந்து கொண்டிருந்தன. குளிரும் மழையும் அம்மக்களுக்குப் புதிதல்ல என்றாலும், அன்றைய பேய்மழை ஏற்படுத்தப் போகிற நாசத்தை, அப்போது ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கேரளத்தில் குறுகிய தூரத்திற்குப் பாயும் ஆறுகள்...
Author - ராஜ்ஶ்ரீ செல்வராஜ்
கொட்டும் மழையில் சொட்டச் சொட்ட நனைந்தபடி போட்டியாளர்கள் செய்ன் நதியில் வலம் வர, பாரிஸில் ஜெகஜோதியாகத் தொடங்கியிருக்கிறது 2024 ஆண்டுக்கான ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள். ஜூலை 26 ஆம் தேதி அந்நாட்டு நேரப்படி மாலை 7 .30 மணியளவில் நிகழ்வுகள் ஆரம்பமாகின. சுமார் நான்கு மணி நேர நிகழ்ச்சிகளுக்குப்...
புனேவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கும் அவருடைய பதினைந்து வயது மகளுக்கும் அண்மையில் ஜிகா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவின் புனே, கோலாப்பூர், சங்கம்னர் பகுதிகளில் ஜிகா வைரஸ் காய்ச்சல் கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகிறது. பருவ ல மாற்றங்களின் போது ஏற்படும் நோய்த்...
மும்பை ஐ.ஐ.எம்.-இல் இந்த ஆண்டு சேர்க்கையில், மாணவிகள் அதிக அளவில் இடம்பிடித்துள்ளனர். அதுவும் கடந்த ஆண்டைவிட இரண்டு மடங்கு அதிகமாக. அனுமதிக்கப் பட்ட 518 பேரில் 245 பேர் பெண்கள். இது அந்தக் கல்வி நிறுவனத்தின் வரலாற்றில் புதிய மைல்கல். இதே போன்றதொரு எண்ணிக்கை அடிப்படையிலான ஆய்வறிக்கை ஒன்று...
கடந்த வாரம் சென்னை கீழ்க்கட்டளை, போரூர், மேடவாக்கம் பகுதிகளில் மிஸ்டர் பீஸ்ட் என்ற பெயரில் மிகப்பெரிய விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. இரண்டரை லட்சங்களை அதற்கு உபயமாக அளித்தவர்கள், தமிழ் யுடியூபர்கள். காரணம் இல்லாமல் இல்லை. ஜேம்ஸ் ஸ்டீபன். ஜிம்மி டொனல்டுசன் என்னும் பெயர் கொண்ட மிஸ்டர்...
டெல்லியைக் கைப்பற்ற உத்தரப் பிரதேசம் முதல் படி. கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களிலும் அனாயாசமாக வாரிச் சுருட்டிய பா.ஜ.க., இம்முறை அடி சறுக்கியிருக்கிறது. ஏற்பட்ட சேதங்களுக்குக் காரணகர்த்தாக்களாக இருப்பவர்களில் ஒருவர்தான் ‘நமஸ்காரம் தோஸ்த்தோன்’ என்று தொடங்கும் காணொளிகளில் வரும் துருவ். வடமாநில தேர்தல்...
கணக்கு வராத தன் உறவுக்காரப் பிள்ளைக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கத் தொடங்கியபோது அது பின்னாளில், 190 நாடுகளில் 56 மொழிகளில் கோடிக்கணக்கான மாணவர்கள் பயிலும் ஓர் இணையக் கல்வித் தளமாக மாறும் என்பதை சல்மான்கான் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கமாட்டார். இல்லை…. இவர் பாலிவுட்டின் மான் வேட்டைக்காரர்...
“கடந்த எட்டு வருடங்களில் என் வாழ்வில் நடந்த அனைத்து நல்ல விஷயங்களும், நான் 2016-இல் எடுத்த ஒற்றை முடிவின் பலன்களாக விளைந்தவைதான். ஆம்…. அப்போதுதான் என்னுடைய வலைத்தளப் பக்கத்தைத் தொடங்கினேன்.” ஐந்தரை மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டிருக்கும் யு டியூப் பிரபலம் அலி அப்டால் கூறியவை இவை. 29...
சில தினங்களுக்கு முன் சென்னையில், உடல் பருமனைக் குறைப்பதற்கான அறுவை சிகிச்சையின்போது 26 வயதான ஹேமச்சந்திரன் என்பவர் உயிரிழந்தார். மருத்துவ வசதிகள் மற்றும் சிகிச்சை முறைகளைப் பற்றிப் போதிய தெளிவு இல்லாததாலும் மருத்துவமனையின் அலட்சியத்தாலும் ஏற்பட்ட விபரீத விளைவுதான் அது. அறுவைச் சிகிச்சைகள் எப்படி...
ஏப்ரல் 27 , 2024. உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா அடங்கிய அமர்வில் வழக்கு விசாரணை. பதஞ்சலி நிறுவனங்களின் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அது. ‘தொடர்ந்து மக்களைத் தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை வெளியிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டித்து, நிறுவனம் சார்பாக...