நாளொன்றுக்கு ஆயிரத்து இருநூறு சொச்சம் விமானங்கள் விண்ணில் ஏறும் / தரை இறங்கும். கொஞ்சம் மெனக்கெட்டுக் கணக்கு பார்த்தால், நிமிடத்திற்கு ஒரு விமானம் வருவதும் போவதுமாக இருக்கும். 2023 – 24 ஆண்டில் மட்டும் 7 .2 கோடி பயணிகள். இது டெல்லி விமான நிலையத்தின் கணக்கு மட்டும் தான். நாட்டின் பிற...
Author - ராஜ்ஶ்ரீ செல்வராஜ்
பத்து வயது சிறுமியின் பிறந்தநாள் கொண்டாட்டம். சிறுவர்கள், பெரியவர்கள் என குடும்பமே கூடியிருக்கிறது. வாழ்த்துக்களுடன் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டு உண்கின்றனர். அடுத்த சில நிமிடங்களில் பிறந்த நாள் கொண்டாடிய அந்த சிறுமி மயங்கிவிடுகிறார். மற்றவர்களுக்கு வாந்தி, மயக்கம். அச்சிறுமியை...
ஐதராபாத்தில் ஒரு சிறிய கிரிக்கெட் மைதானம். இரு அணிகளுக்கு இடையேயான பரபரப்பான ஆட்டம். அடுத்தடுத்து ‘நான்கு’ மற்றும் ‘ஆறு’ என ரன்கள் அதிகமாகிக்கொண்டே போக, பந்து வீச்சாளர் சொதப்புகிறார் என மைதானத்தில் முணுமுணுப்புகள். கேப்டன், அந்த பந்து வீச்சாளரிடமிருந்து பந்தை வாங்கி தானே...
ஸ்ரீ சித்த கங்கா மடம். கர்நாடகத்தின் தும்கூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற இடம். பாறைகளாலும், குன்றுகளாலும் சூழப்பட்ட இராமலிங்க, சிவகங்கே மலைத் தொடர்கள். 15-ஆம் நூற்றாண்டிலிருந்து லிங்காயத்தவர்களின் மத போதனைகள் கற்பிக்கப்பட்டு வரும் ஆசிரமம். இங்கு தான் கர்நாடகாவின் ஆட்சி அரியணையைப் பற்றிய முக்கிய...
குஜராத்தின் ஜாம்நகரே ஜாம் ஆகும் அளவிற்குத் தனது மகன் ஆனந்த்தின் திருமண விழாவை (திருமணத்தை அல்ல, அதற்கு முந்தைய விழாவை) நடத்தி முடித்திருக்கிறார் முகேஷ் அம்பானி. உலகெங்குமிருந்து தலைவர்கள், பிரபலங்கள் வந்திறங்கப்போகிறார்கள் என தற்காலிகமாக ஜாம் நகர் விமான நிலையத்திற்குச் சர்வதேச அந்தஸ்துகூடத்...
ஒரு சாதாரண நாளில் கோயமுத்தூர் வடவள்ளியிலிருந்து ஈஷா யோகா மையத்தை முக்கால் மணி நேரத்தில் அடைந்துவிடலாம். ஆனால், மகா சிவராத்திரி அன்று முழுதாக ஆறு மணி நேரம் ஆனது. முன்னும் பின்னும் பல மைல் தூரத்திற்கு இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள். நூற்றுக்கணக்கில் பேருந்துகளும் அணிவகுத்திருக்க...
வருடம் 2015 . டெல்லியைச் சேர்ந்த சாகெத் மற்றும் அவனீத் shopclues என்னும் இணைய வர்த்தக நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். இருவரும் கல்லூரிக் காலத்து நண்பர்கள். அப்போது நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட (உபயோகப்படுத்தப்பட்டவற்றைச் சீரமைத்து, மேம்படுத்தி விற்பது) பொருள்களுக்கென்று தனியாக ஒரு...
கடற்கொள்ளையர் பற்றிய செய்திகளும் இந்தியக் கடற்படை வீரர்களின் சாகசங்கள் குறித்தும் கொள்ளையர்களால் பிடிக்கப்பட்ட கப்பல்களை அவர்கள் மீட்டுக் கொடுத்த செயல்கள் குறித்தும் சமீப காலமாகச் செய்திகள் அடிக்கடி வரத் தொடங்கியுள்ளன. நமக்கு ராணுவம் அளவுக்குக் கடற்படை அவ்வளவு நெருக்கமல்ல என்பதால் அது குறித்து...
பிப்ரவரி பதினைந்தாம் தேதி, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடான ஜப்பான் Recession எனப்படும் பொருளாதார மந்தநிலையில் இருப்பதாக அறிவிப்பு வெளியானது. கூடவே, அது நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்ட செய்தியும். ஒரு நாட்டின் மொத்த உற்பத்தி அளவைக் குறிக்கும் ஜி.டி.பி. தொடர்ந்து இரண்டு நிதிக் காலாண்டுகளாகச்...
மாலத்தீவின் ஜனாதிபதி முய்ஸு சீன அதிபரோடு கைகுலுக்கிய கையோடு இருபது ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுவிட்டு வந்து சில தினங்கள்தான் இருக்கும். சியாங் யாங் ஹாங் 3 என்று பெயரிடப்பட்ட சீனக் கப்பல், இந்தியப் பெருங்கடல் பகுதியில் வளைய வந்துகொண்டிருந்தது. நிச்சயம் அது ராணுவக் கப்பல் இல்லை. சீன ஆராய்ச்சிக்...