1 .40 பில்லியின். ஜனவரி 17 ஆம் தேதிப்படி சீனாவின் மக்கள் தொகை. இது கடந்த ஆண்டின் எண்ணிக்கையை விட இரண்டு மில்லியன் குறைவு. ஒரு காலத்தில் அதிகரிக்கும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த திணறிய அதே சீனாவில் தான் இப்போது தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக ஜனத்தொகை சரிந்து வருகிறது. குழந்தை பிறப்பு விகிதமும்...
Author - ராஜ்ஶ்ரீ செல்வராஜ்
நார்னியா திரைப்படத்தில் அலமாரிக்குள் இருந்து ஒரு ராஜ்ஜியம் விரியும் காட்சியை வைத்திருப்பார்கள். வெளியுலகத்தோடு தொடர்பில்லாதவொரு மாயாஜாலம் பொருந்திய மர்ம பேரரசு. நூற்றாண்டுக் காலமாக அந்த இடத்தைக் குளிர்காலத்தில் வைத்து ஆட்செய்யும் கொடுங்கோல் என்ற வகையில் அதன் கதை இருக்கும். வட கொரியா, நிஜ உலகத்தின்...
கிட்டத்தட்ட வாடிவாசலில் அவிழ்த்து விடப்படும் ஜல்லிக்கட்டுக் காளையின் மனநிலையில் தான் ஈரான் இருந்திருக்கவேண்டும். சிரியா, ஈராக், பாகிஸ்தான் என அருகிலுள்ளவர்களைக் கடந்த வாரம் சகட்டுமேனிக்கு முட்டி தள்ளியிருக்கிறது. பாகிஸ்தானின் பலோசிஸ்தான் பகுதியில் ஜனவரி 16-ஆம் தேதி ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்...
நியூசிலாந்தின் இளம் எம்பி, மைபி கிளார்க் கடந்த டிசம்பரில் டெல்லி லோக்சபாக் கூட்டத்தில் நிகழ்ந்த கலர்ப் புகை புஸ்வாண சம்பவம் நினைவிருக்கும். பொதுவாகவே நாடாளுமன்றங்களில் வினோதமாக எது நடந்தாலும் அது உடனே பரவலான கவனத்தைப் பெறும். அப்படியொன்றுதான் சென்ற வாரம் நடந்தது. இங்கில்லை… நியூசிலாந்தில்...
நவ கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் நிற்பதைப் போன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளின் தேர்தல்கள் இந்த ஒரே ஆண்டில் நிகழவிருக்கின்றன. பூமிப்பந்தில் இருக்கும் மக்களில் பாதிப்பேர் தங்கள் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் வாக்குகளை அடுத்தடுத்த மாதங்களில் அளிக்கவிருக்கிறார்கள். ஒன்றுமில்லை…. நம் ஊரில் ஒரு...
1947 பிரிவினையின் போது இந்தியா- பாகிஸ்தான் இரு பக்கமும் சேரமாட்டேன் என்று முரண்டு பிடித்து வந்தார் மன்னர் ஹரிசிங். ஒரு புறம் இந்தியா, மன்னருக்கு நல்லது கெட்டதுகளை எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, பக்கவாட்டில் பாகிஸ்தான் படைகளோடு எல்லை தாண்டியது. காஷ்மீரைக் கைப்பற்றுவதற்காக முன்னேறிக்...
தென்னகத்தில், வடகிழக்குக் காற்று நிலத்திலிருந்து கடலுக்கு வீசும் போது அதன் ஒரு பகுதி வங்காள விரிகுடாவிலிருந்து ஈரப்பதத்தை எடுத்து, மழையைத் தாங்கும் மேகங்களைக் கொண்டுவருகிறது. இது அக்டோபர் – நவம்பர் மாதங்களில் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசத்தின் தெற்குப்...
டெல்லி உச்ச நீதி மன்றத்தில் நீதிபதி சஞ்சய் கிஷான் கவுல் உள்ளடங்கிய அமர்வு முன்பு டெல்லியின் காற்று மாசு குறித்த விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தது. நவம்பர் பத்தாம் தேதி நடந்த இந்தக் கூட்டத்தில், ‘ஒவ்வொரு வருடமும் இந்த நேரத்தில் பிரச்சினை மோசமடையும் என்று தெரியுமல்லவா? இருந்தும் ஏன் பயனுள்ள...
நம் முன்னோர்கள் கிட்டத்தட்ட மாதத்தின் அனைத்து நாள்களையும் ஏதாவதொரு காரணம் சொல்லிப் பண்டிகை, நோன்புகளாக மாற்றியிருந்தார்கள். வாழ்நாளின் ஒவ்வொரு தினத்தையும் கொண்டாட்டமாக மாற்றவேண்டும் என்பது தான் அவர்களது எண்ணமாக இருந்திருக்க வேண்டும். இப்போது அப்படியல்ல. வருடாவருடம் அரசாங்கம் வெளியிடும் பண்டிகைக்...
அக்டோபர் 9, 2023. புது டெல்லியில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், தனது அதிகாரிகளுடன் வந்திருந்தார். ‘நடைபெறவிருக்கும் ஐந்து மாநிலத் தேர்தலுக்கான தேதிகளை அறிவிப்பதற்காகத்தான் இந்தக் கூட்டம்’, என்று பேசத் தொடங்கி ஒவ்வொரு மாநிலத்திற்கான தேர்தல் நாளை...