பின்னணிப்பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார். நாற்பது வருடங்களுக்கும் மேலாக, மூன்று தலைமுறைகளுக்கு இசையை வழங்கிய அவரது குரல் காற்றோடு கலந்தது. ஜெயச்சந்திரன் அடிப்படையில் ஒரு தாளவாத்தியக்காரர். மிருதங்கக் கலைஞர். இளவயதிலேயே மேடையேறி, தன் தனித்திறனை வெளிப்படுத்தி கேரள அரசின் பரிசு பெற்றவர். சுவாரசியமான...
Author - சிவராமன் கணேசன்
சென்னைப் புத்தகக் கண்காட்சி களைகட்டியிருக்கிறது. இம்முறை புத்தாண்டுக்கு முன்னரே ஆரம்பித்து பொங்கலுக்குள் நிறைவு பெறும் புதிய அட்டவணையோடு. எப்போது வேண்டுமானாலும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தை உருவாக்குவேன் என்று மிரட்டிக்கொண்டிருந்த காலநிலையை எதிர்த்து வென்றது அதன் முதல் வெற்றி. தொடக்கவிழாவிற்காக...
இந்த வருடத்தின் முதல் நாளே கொண்டாட்டத்தோடு தொடங்கியது. புதிய தலைமுறை டிஜிடல் இதழில் என்னுடைய குறுநாவல் ‘சக்ரவியூஹம்’ ஜனவரி ஒன்றாம் தேதி முதல் வெளிவந்தது. பல புதிய வாசகர்கள், தீவிர விமர்சனங்கள் எனப் பல புதிய திறப்புக்களைக் கொடுத்தது. பிரபலமான ஓர் ஊடகத்தில் எழுதுவதன் பலனை நன்கு புரியவைத்தது...
தபேலா கலைஞர் ஜாகிர் உசேன் கடந்த வாரம் காலமானார். தபேலா என்ற தாளவாத்தியக் கருவிக்குத் தனித்த அடையாளம் தந்தவர். தமது 73 வது வயதில் அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் இசையாகிப் போனார். அவர் ஓர் இசைக் குடும்பத்தில் பிறந்தவர். பிறந்தபோதே அவரது தந்தையான அல்லா ரக்கா குரேஷிக்கு உடல்நிலை மோசமாயிருந்தது. அவர்...
சென்னையின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றான மார்கழி கர்நாடக இசைவிழா இந்த வாரம் தொடங்கியிருக்கிறது. நூற்றாண்டுத் தொடர்ச்சி கொண்ட இத்திருவிழாவை ஆண்டுதோறும் கலைஞர்களும், ரசிகர்களும் ஆவலோடு எதிர்நோக்கியிருக்கிறார்கள். இந்து மதத்தில் மார்கழி மாதம் இசைக்கும், பக்திக்கும் உகந்த மாதமாக ஆண்டாள் மற்றும்...
சிபில் ஸ்கோரில் வெளிப்படைத்தன்மை இல்லை என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டியிருக்கிறார். இதனால், வாடிக்கையாளர்களின் கடன் விவரங்களில் குழப்பம் இருப்பதாக கார்த்தி பேசியிருக்கிறார். மனிதரின் பாவ புண்ணியக் கணக்குகளை சித்திரகுப்தன் குறித்துவைப்பதாக நம்பிக்கையுண்டு...
புதியதாகக் கட்டப்பட்டுள்ள பாம்பன் ரயில் பாலம் பாதுகாப்புக் குறைபாடுகளுடன் கட்டப்பட்டிருக்கிறது என்று ஆய்வு முடிவு வந்திருக்கிறது. மடித்த வலது கையில் புத்தகமும், இடது கையின் ஆட்காட்டி விரல் நீண்டும் இருக்கும் அறிஞர் அண்ணா சிலை போன்று இந்திய வரைபடத்தின் வலது ஓரத்தில் அமர்ந்திருக்கிறது ராமேஸ்வரம் தீவு...
29. இனி உலகின் மிகச் சக்திவாய்ந்த நிறுவனம். நுட்ப உலகின் அசைக்கமுடியாத முன்னத்தி ஏர். பல துறைகளிலும் முதலீடுகளையும், ஆய்வுகளையும் நிகழ்த்திக்கொண்டிருக்கும் முன்னணி ஆளுமை. பயனாளர்களுக்கு அன்றாடம் நுட்பம், பொழுதுபோக்கு, தகவல், என பல விதங்களில் வரம் அருளும் தேவன். எல்லாவற்றிற்கும் உச்சத்தில்...
தேடிக் கண்டடைதல் என்பது ஆதிமனிதன் காலத்திலிருந்தே மானுடத்தின் அடிப்படை இச்சை. ஒவ்வொன்றாகத் தேடித் தேடித்தான் அது தன் பரிணாமத்தைப் புதுப்பித்துக்கொண்டது. தேடிய அனைத்தையும் அடைந்துவிட்ட பிறகும், தேடுவதற்கு ஏதுமில்லையென்றாலும், புதிய தேடல்களை உருவாக்கிக் கொள்கிறான் நவீன மனிதன். ஏழு கடல் ஏழு மலை...
28. வென்ற கதை ஒரு கல்லூரிச் செயல்திட்டமாகத் தொடங்கப்பட்டது. தன் முதல் அலுவலகத்தை கார் கேரேஜில் தொடங்கியது. இரண்டு மாணவர்களின் விளையாட்டுச் செய்கை என்று வர்ணிக்கப்பட்டது. ஏகப்பட்ட எதிர்ப்புகளைக் கண்டது. ஆனாலும் திடமாக, தீர்க்கமாகத் தனக்கென ஒரு தனிப்பாதையை வகுத்துக்கொண்டு வலுவாக வளர்ந்தது. இன்று உலகை...