இந்த வாரம் அறிவியல் செய்திகளில் ‘சூப்பர் கண்டக்டர்’ என்ற பதம் பல தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றது. எல்லா அறிவியல் பத்திரிகைகளிலும் அட்டைப்படங்களில் இந்த வாசகம் பெரிய எழுத்துகளில் பொறிக்கப்பட்டிருந்தது. ‘சூப்பர் கண்டக்டர்’ என்ற வார்த்தையைக் கேட்டவுடனேயே ரஜினிகாந்த்தின் முகம்தான் முதலில் நினைவுக்கு...
Author - சிவராமன் கணேசன்
அவனைப் பார்ப்பது அது முதன்முறையல்ல. இந்த இரண்டு நாள்களில் அதிகம் அவனைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். புதிதாக வந்திருக்கிறான். வெள்ளைச்சட்டை, சாம்பல் நிறத்தில் பேண்ட் யூனிஃபார்ம். பழைய மகாபலிபுரச் சாலையிலிருக்கும் அந்தப் பணக்காரப் பள்ளியாக இருக்கலாம். சிரிக்கும்போது சட்டென விழுந்து நிறையும்...
வாராவாரம் கோலாகலமாகச் செயற்கை நுண்ணறிவுச் செய்திகள் ஒவ்வொன்றாக வந்துகொண்டே இருந்தன அல்லவா… இந்த வாரம் செய்திகளுக்கே டிவிஸ்ட் வைத்து புதிய தகவலொன்றை வெளியிட்டார் கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை. கூகுள் செய்திகள் சேகரிப்புக்காக மட்டும் பிரத்யேகமாக செயற்கை நுண்ணறிவுச் (AI) செயலி...
கூகுள், ஓப்பன் ஏ.ஐ. ஆகிய உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் இரண்டுமே மிக இயல்பாக மனிதர்கள் போலவே பேசும் உரையாடல செயலிகளைக் கொண்டுவந்து விட்டன. சந்தேகமின்றி இதுவோர் ஒலிப்புரட்சிதான். கூகுள், “சவுண்ட் ஸ்ட்ரோம்” “(SoundStorm) என்று பெயரிடப்பட்ட தங்களது புதிய ஒலிச் செயலியை வெளியிட, ஓப்பன் ஏஐ...
சமீப நாள்களில் எலான் மஸ்க் என்ற பெயரைக் கேட்டவுடனே நமட்டுச் சிரிப்புடன் சிலரும், ஏளனச் சிரிப்புடன் பலரும் கடந்து செல்வதைப் பார்க்கிறோம். மிகக்குறிப்பாக அவர் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கி அதனைத் தன் விரல் நுனிகளால் ஆட்டிவைத்து நாளொரு விதியும், பொழுதொரு வீண் கீச்சுக்களுமாய்ப் பயன்படுத்த ஆரம்பித்த...
ஆதியில் “செயற்கை நுண்ணறிவு” (Artificial Intelligence – AI) என்ற பதம் மனித குலத்துக்கு முதலில் அறிமுகமானபோது அது மிகுந்த ஆறுதலளிக்க கூடிய சொல்லாகத்தான் இருந்தது. வேலையில் உதவும் இன்னொரு கரம் போல, பொருள் அறிந்து கொள்ள உதவும் அகராதி போல, சொற்பிழைகளை நீக்கும் ஆசிரியர் போல, எளிய கணக்குகளைத் தீர்க்க...
உலகளாவிய திரையுலகம் பாகிஸ்தானியர்களை இரண்டு வகைகளில் காட்சிப்படுத்தும். ஒன்று அவர்கள் ஆகப்பெரிய தீவிரவாதிகளாக இருப்பார்கள். அல்லது மிகப்பெரிய வில்லன்களுக்கு உதவும் கம்ப்யூட்டர் ஹேக்கர்களாக. இதில் பாகிஸ்தானின் தீவிரவாத முகமென்பது உலகறிந்த பழைய செய்தி. பத்தாண்டுகளுக்கு முன்னால் அதன் ஹேக்கிங்...
மழை வலுத்திருந்தது. மின் நிலையத்தில் போதிய ஏற்பாடுகளைச் செய்துவிட்டுக் கிளம்புவதற்குள் நன்கு இருட்டியிருந்தது. ஒரு சுற்று மேலணைக்குச் சென்று பார்வையிட்ட பிறகு வீட்டிற்குச் செல்லலாமா என்று யோசித்தேன். “இந்தக் கனமழை இரவில், காட்டுச்சாலையில் பயணம் போகும் அந்த சந்தோஷத்தை ஏன் இழக்கிறாய்” என்றது மனது...
சென்ற வாரம், கஞ்சன்ஜங்கா சிகரத்தை அடையும் விழைவில் பயணித்த லூயிஸ் ஸ்டிட்சிங்கர் என்கிற ஜெர்மானிய மலையேற்ற வீரர், காணாமல் போனார். அவரைத்தேடும் முயற்சிகள், தேர்ந்த நேபாள மலையேற்ற வீரர்களாலும், மலைப்பழங்குடியினக் குழுவாலும் முன்னெடுக்கப்பட்டன. அதே நேரத்தில் மலையடிவாரத்தில் வசிக்கும், சிக்கிம்...
நாட்டின் அனைத்து ஆண்களும், பெண்களும் அங்கீகரிக்கப்பட்ட 28 சிகை அலங்காரங்களில் ஒன்றைத் தவிர வேறொன்றை கிராஃபிக்ஸில்கூட நினைத்தும் பார்க்கக்கூடாது, மைக்ரோவேவ் அடுப்பைப் பயன்படுத்தினால் சிறைத்தண்டனை. சொந்ததேச இசை தவிர வேறொன்றைக் கேட்டால் மரண தண்டனை. அரசாங்க அலுவலகத்தில் தூங்கினால் தூக்குத் தண்டனை, ஒரு...