ஊட்டி குளிருக்குச் சூடாக சூப் குடிக்கலாம் என்று ஒரு சூப் கடைக்குப் போனோம். கடை வாசலில் நான்கு கல்லூரி மாணவர்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள். “டேய் இங்கே வேண்டாம்டா. நாம் அந்த அண்ணன் கடைக்குப் போய் போண்டா சூப் குடிக்கலாம் வாங்கடா.” “எந்த அண்ணன்டா?” “பஸ் ஸ்டாண்டு தாண்டி ஒரு அண்ணன் மஷ்ரூம் கடை...
Author - சிவசங்கரி வசந்த்
பேப்பரைத் திறந்தாலே கொலைச் செய்தி. மாமியாருக்குக் கத்திக் குத்து. மாமனாரைக் கொன்று ஃப்ரிஜ்ஜில் ஒளித்து வைத்த மருமகள் கைது. நடுத்தெருவுக்கு வந்த நாத்தனார் சண்டை. உலக்கையால் மண்டையில் போட்டு, சாக்குப் பையில் அடைத்து கூட்ஸ் ரயிலில் வீசிய துணிகரம். பார்க்கிறோம் அல்லவா? மாமியார் குடும்பத்தாருடன்...
கனம் கோர்ட்டார் அவர்களே, இங்கு வழக்குத் தொடர்ந்திருக்கும் என் கட்சிக்காரரின் பெயர் செவ்வாய் தோஷம். இந்தப் பெயரால் என் கட்சிக்காரர் அனுபவித்த துன்பங்கள் ஏராளம். இந்தப் பெயரை அவருக்கு வைத்தது அவரது தாத்தா. அவர் ஒரு தீவிர செவ்வாய் எதிரி. செவ்வாய்க்கிழமை அப்பாயின்ட்மெண்ட் ஆர்டர் வந்தது என்ற ஒரே...
உங்க ஊரில் மயில் குரைத்ததா? எங்கள் ஊரில் யானை ஊளையிட்டது. ‘கோட் – வேர்ட்’ கரெக்ட் என்று கூறி பெட்டிகளை மாற்றிக் கொண்டு எவ்வளவு கம்பீரமாக வாழ்ந்து வந்தார்கள் கள்ளக் கடத்தல்காரர்கள். சென்ற நூற்றாண்டோடு அவர்களின் பொற்காலம் முடிந்துவிட்டது. கோட் – வேர்ட் கடத்தல்காரர்களை விட அதிக அளவு அர்த்தமற்ற சொற்கள்...
அவர் யார் என்று தெரியாது. அவரது பெயர் தெரியாது. அவரது மொழி தெரியாது. அம்முதிய பெண்மணி தரையில் அமர்ந்து ஒரு கல்லைத் தொட்டுக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார். அக்காட்சியைப் பார்த்த எங்களால் அவரைக் கடந்து செல்ல முடியவில்லை. அம்முதியவர் அமர்ந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த இடம் துபாய் எக்ஸ்போ...
‘புலி வருது, புலி வருது’ என்று பொய்யாகப் பயமுறுத்திய பையனின் கதை நம் எல்லோருக்கும் தெரியும். அதுபோலவே ‘புலி ஜெயிக்கப் போகிறது, புலி ஜெயிக்கப் போகிறது’ என்ற கதையை வருடா வருடம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இதுவரை புலி ஜெயித்தபாடில்லை. பாண்டா (Panda) தான் தொடர்ந்து ஜெயித்து வருகிறது. பாண்டா...
இம்மாதத் தொடக்கத்தில் கொரோனாவை விட அதிதீவிரமான ஒரு வைரஸை சீனாவில் உற்பத்தி செய்திருக்கிறார்கள். அந்த வைரஸைக் கண்டு மேலை நாட்டு மக்களுக்கு எந்த பயமும் இல்லை. சீனர்கள் பாம்பைத் தலை முதல் வால் வரை பார்ட் பார்ட்டாகச் சமைத்துச் சாப்பிடுவது போல அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் இந்த வைரஸை வைத்து விதவிதமான...
பதினொரு ஆண்டுகளுக்கு முன்பு ஓர் ஏப்ரல் மாதத்தில் நான் அபுதாபிக்குக் குடிபெயர்ந்தேன். நல்ல கத்திரி வெயிலின் வெப்பம் தெரிந்தது. நமக்கெல்லாம் கத்திரி வெயில் ஆரம்பம் என்று பேப்பரில் பார்த்த உடன் வத்தலும் வடகமும் தான் நினைவிற்கு வரும். மழைநீர் வீணாகும் போது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். அவ்வளவுதான். ஆனால்...
எனக்கு ஒரு தோழி இருக்கிறாள். அவளிடம் உங்கள் வீட்டுக் குளிர் சாதனப் பெட்டி பற்றிய தகவல்களை மட்டும் சொன்னால் போதும். உங்கள் கணவர் எப்படிப்பட்டவர் என்பதைக் கட்டம் போட்டுக் காட்டி விடுவாள். எத்தனை கதவுகள் கொண்ட குளிர் சாதனப் பெட்டி என்பதை வைத்து தான் கணவரது மனம் எத்தனை விசாலமானது என்பதை தீர்மானிப்பாள்...
உண்மை என்பதொரு தயிர் சாதம். யார் வேண்டுமானாலும் எளிதாகச் சமைத்து விடலாம். எந்தவித முயற்சியும் பயிற்சியும் தேவையில்லை. ஆனால் பொய் என்பது பிரியாணி மாதிரி. சரியான மசாலாக்களை சரியான விகிதத்தில் சரியாக நேரத்தில் சேர்த்தால்தான் சுவையான பிரியாணி கிடைக்கும். தெருவுக்கு ஒரு பிரியாணி மாஸ்டர் இருப்பதை நீங்கள்...