பலருக்கும் குளியல் அறையில்தான் பாட வரும் என்று கேலியாகச் சொல்லுவார்கள். ஆனால், உண்மையிலேயே கழிப்பறையில் இருந்த போது தோன்றிய யோசனையானது இன்று பெரிதும் புகழப்படும் ஒரு செயலியாக வளர்ந்திருக்கிறது. அதைப் பற்றிப் பார்க்கலாம். ஆப்பிள் நிறுவனம் ஒவ்வோர் ஆண்டும் ஐபோனில் அதிகமாகப் பதிவிறக்கம் செய்யப்பட்ட...
Author - தி.ந.ச. வெங்கடரங்கன்
ஒரு காலத்தில் நம் வாழ்வின் முக்கியமான தருணங்களை நினைவில் வைத்துக் கொள்ளப் பெரிதும் உதவியவை புகைப்படங்கள். இன்றைக்கு அதுவே செல்பேசியில் எண்ணிமப் படங்களாக உருமாறிவிட்டன. பத்து ஆண்டுகளுக்கு முன்பும் செல்பேசியில் நூற்றுக்கணக்கான படங்கள் எடுக்கப்பட்டாலும் அவற்றைப் பாதுகாப்பது மிகக் கடினமாகவே இருந்தது...
இரயில் நிலையத்தின் கிடங்கு ஒன்று. அங்கே அனுமதியில்லாமல் சுவரோவியம் வரைகின்ற பையனைப் பிடிக்க ஓடி வருகிறார் பாதுகாவலர். உடன் அவருடைய நாயும். வழி எங்கும் பொற்காசுகள் சிந்தியிருக்கிறன. இப்படியான ஓர் ஓட்டம் கடந்த பத்தாண்டுகளாக நிற்காமல் போய்க் கொண்டேயிருக்கிறது என்றால் நம்ப முடியுமா? இதைப்...
அமெரிக்காவில் இருக்கும் கோடிக்கணக்கான பதின் பருவத்தினருக்குத் தற்போதைய மிகப் பெரிய கவலை, 19 ஜனவரி 2025 அன்று வரவிருக்கும் ‘டிக் டாக்’ செயலிக்கான தடை. இந்தியாவில் திறன்பேசி வைத்திருக்கும் முக்கால்வாசி நபர்கள் ஒவ்வொரு நாளும் பல மணி நேரங்களைச் செலவழிக்கும் யூ-ட்யூப் ஷார்ட்ஸ் (YouTube Shorts) செயலியின்...
“இசை ஒரு மகத்தான வரப்பிரசாதம்” என்று சொன்னார் நெல்சன் மண்டேலா. அப்படியான இசையைப் பல்லாயிரம் ஆண்டுகள் நேரடியாகக் கேட்டோம், பின்னர் ஒலித்தட்டு, ஒலிநாடா, குறுவட்டு என்று மாறி இன்று பெரும்பாலும் இசையை நாம் கேட்பது செல்பேசி செயலிகள் மூலமாக. அதில் பிரபலமாக இருப்பது ஸ்பாட்டிஃபை செயலி. இது அமெரிக்கத்...
“இரண்டு சுமாரான தயாரிப்புகளைச் செய்வதை விட, ஒரு சிறந்த தயாரிப்பைச் செய்வது மேல், அதற்குத் தேவையானது முழுக் கவனம் என்று எனது முதல் மேலாளரிடம் இருந்து கற்றுக் கொண்டேன்”. இதைச் சொன்னவர் நெட்பிளிக்ஸ் இணைய ஒளிபரப்பு நிறுவனத்தின் நிறுவனருமான ரீட் ஹேஸ்டிங்ஸ் (Reed Hastings). சீனா, சிரியா, ரஷ்யா, மற்றும்...
சமீபத்தில் இந்தியாவின் மிகப் பெரிய உணவு செயலி நிறுவனம் ஓர் விளம்பரத்தைக் கொடுத்திருந்தது. எங்கள் நிறுவனரிடம் நேரடியாக வேலை செய்யத் தலைமைப் பணியாளரைத் தேடுகிறோம். முதல் வருடத்திற்குச் சம்பளம் ரூபாய் இருபது இலட்சம். அதை நாங்கள் கொடுக்க மாட்டோம். எங்களிடம் வேலை செய்ய நீங்கள் கொடுக்க வேண்டும். இந்த...
உக்ரைன் என்று சொன்னவுடன் தோன்றுவது இரண்டாண்டுகளுக்கும் மேலாக அங்கே நடக்கும் போர். ஆனால் அதற்கு முன்பிருந்தே, உக்ரைனில் பிறந்த ஒரு கணினிப் பொறியாளரின் படைப்பின் மூலமாகத் தான் இன்றைக்கு உலகில் இருக்கும் முந்நூறு கோடிக்கும் அதிகமானவர்கள் அவர்களின் வாழ்வில் வரும் பிறப்பு, இறப்பு, காதல், சண்டை என்று...
அக்டோபர் 6ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் நடந்த இந்திய விமானப் படை சாகச நிகழ்வு அதிகம் பேர் கண்டுகளித்த வான் சாகச நிகழ்ச்சி என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்துள்ளது. இந்திய விமானப் படையின் சாகசக் காட்சிகள் ஒவ்வொன்றும் அருமையாக இருந்தன. பல இலட்சம் மக்கள்...
கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலின் பழிக்கு-பழி கொலைகள் நாடுகளைக் கடந்து எல்லைகளைக் கடந்து தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்களை அழிக்க பேஜர் தாக்குதல்களைச் செய்தது இஸ்ரேல் நாட்டின் உளவுத் துறை என்று...