நவராத்திரிப் பண்டிகை ஆகட்டும், புதுமனைப் புகுவிழாவாகட்டும்… முன்பெல்லாம் அதற்கான அழைப்பிதழ்கள் தபால் மூலம் அனுப்பப்படும். பெரும்பாலும் அஞ்சல் அட்டைகள். இன்று நம்மில் பலருக்கு நம் நெருங்கிய நண்பர்கள், சொந்தங்களின் முகவரியே தெரியாது. எல்லாம் செல்பேசித் தொடர்புதான். அவர்களும் வரும் தபாலைப்...
Author - தி.ந.ச. வெங்கடரங்கன்
“உங்கள் நண்பர் யாரென்று சொல்லுங்கள், உங்களைப் பற்றி நான் சொல்கிறேன்” என்பார்கள். அதையே இன்றைக்கு இப்படிச் சொல்லலாம், “உங்கள் செல்பேசியின் முகப்புப் பக்கத்தைக் (ஹோம் ஸ்கிரீன்) காட்டுங்கள் நீங்கள் யாரென்று சொல்கிறேன்”. இந்த விஷயத்தில் பயனர்கள் இரண்டு வகை. முதல் வகை, அழகாக நகைக்கடை கண்ணாடித்...
விஜய் அல்லது அஜீத் – உங்களுக்கு யாரைப் பிடிக்கும் என்கிற கேள்விக்கு ஒருமித்த பதில் வராது. அதுபோலத் தான் கணினியின் இயங்கு தளங்களில் சிறந்தது விண்டோஸா அல்லது லினிக்ஸா என்று கேட்டால் இரு பதில்களும் வரும். இந்தச் சிக்கல்களைத் தவிர்த்து எளிதான ஆனால் கணினிப் பயன்பாட்டில் கவனிக்க வேண்டிய சிலவற்றைப்...
முகமது-பின்-துக்ளக் சினிமாவில் அறுநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சுல்தான் துக்ளக்காக வரும் சோ, அழகாகத் தமிழ் பேசுவார். திடுக்கிட்டு, “உங்களுக்கு எப்படித் தமிழ் தெரியும்..?” என்று கேட்டால், “என் காலத்திலேயே நான் ஓர் தமிழ் மேதாவி என எல்லோருக்கும் தெரியும்” என்று கிண்டலாகச் சொல்லுவார். அதுபோல...
நூறு ஆண்டுகள் கடந்தும் கணித மேதை ராமானுஜனின் சில கையெழுத்துக் குறிப்புகளை இன்னும் விளங்கிக் கொள்ள முடியவில்லை. அப்படியொரு எழுத்து. இருக்கட்டும். நாமெல்லாம் மேதைகள் இல்லை. இருந்தாலும் அன்றாட வாழ்வில் பல விஷயங்களை, தொலைபேசி எண்களை, முகவரிகளை, தேதிகளைத் தினமும் குறித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது...
‘புதிய வானம், புதிய பூமி எங்கும் பனிமழை பொழிகிறது’ என்று பாடி ஆடிக்கொண்டே சிம்லாவை வலம் வரும் எம்.ஜி.ஆரின் கையில் இருக்கும் அந்த சிவப்புப் பெட்டியை யாரும் மறந்திருக்க முடியாது. அவர் போவது அவரது சொந்த மாளிகைக்கு. அங்கே அவருக்குத் தேவையான அனைத்தும் – மாற்று துணி உட்பட – தயாராக இருக்கும்...
பூமியில் இன்று ஆண்டவன் இல்லாத சந்து பொந்துகள் சில இருக்கலாம். ஆனால் ஆண்டிராய்ட் இல்லாத இடமே இல்லை. ஆன்ட்ராய்ட் செல்பேசியில் பலரும் பயன்படுத்தும் செயலிகளில் அதிகம் தெரியாத, ஆனால் பயனுள்ள பல வசதிகள் உண்டு. பார்க்கலாம். கூகிள் போட்டோஸ் எனக்குப் படங்கள் எடுப்பது என்றால் உயிர். அதை உடனடியாக நண்பர்களோடு...
ஒரு போட்டி. உங்கள் பர்ஸில் இந்த நொடி எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை உங்களால் சரியாகச் சொல்ல முடியுமா..? அன்றாடம் பல முறை பர்ஸை எடுக்கிறோம், ஆனாலும் அந்தளவு கவனிப்பதில்லை. அது போலவே தினம் பத்திலிருந்து, இருபது முறை நாம் அனைவரும் செல்பேசியில் இருக்கும் வாட்ஸ்-ஆப் செயலியைப் பயன்படுத்துகிறோம்...
பேகசஸ் ஒட்டுக்கேட்பு வழக்கு என்று கூகுளில் ஒரு நிமிடம் தேடிப் படியுங்கள். அல்லது இந்தக் கட்டுரையைத் திரும்ப ஒருமுறை. பிறகு இந்தக் கட்டுரைக்கு வாருங்கள். இந்த வழக்கில் உச்சநீதி மன்ற உத்தரவின் பேரில் ஆய்வு மேற்கொண்ட தொழில்நுட்பக் குழு, ஐந்து செல்பேசிகளில் மால்வேர் பதுங்கியிருக்கிறது; ஆனால் அவை...
அரண்மனை (2014) திரைப்படத்தில் பால்சாமியாக வரும் நடிகர் சந்தானத்தை நினைவிருக்கிறதா? அதில், பெரிய ஜமீன் சொத்துக்கு வாரிசு என நிரூபிக்க இருந்த ஒரே ஆதாரம் அவரது ஆயாவின் பழைய போட்டோ. அதில் ‘ஏதோ’பட்டு அழிந்துவிட அதைத் தேடி, பேய் மாளிகைக்கு வந்து படாத பாடு படுவார். இதுபோல உங்களுக்கு நடக்காமல் இருக்க...