அரண்மனை (2014) திரைப்படத்தில் பால்சாமியாக வரும் நடிகர் சந்தானத்தை நினைவிருக்கிறதா? அதில், பெரிய ஜமீன் சொத்துக்கு வாரிசு என நிரூபிக்க இருந்த ஒரே ஆதாரம் அவரது ஆயாவின் பழைய போட்டோ. அதில் ‘ஏதோ’பட்டு அழிந்துவிட அதைத் தேடி, பேய் மாளிகைக்கு வந்து படாத பாடு படுவார். இதுபோல உங்களுக்கு நடக்காமல் இருக்க...
Author - தி.ந.ச. வெங்கடரங்கன்
செல்பேசியின் மூலமாகவே இன்று வங்கிப் பரிமாற்றங்கள் தொடங்கி, ஷாப்பிங், சினிமா பார்ப்பது வரையில் அனைத்தையும் செய்து பழகிவிட்டது. அந்தச் சிறிய திரையைப் பலமணி நேரம் கண்ணும் கையும் வலிக்கப் பயன்படுத்துவது கடினம் என்பதும் நமக்குப் புரிந்துதானிருக்கிறது. இதற்கு நமக்குத் தேவையான மாற்று, ஒரு மடிக்கணினி...
ஜெர்மனிக்கு வடக்கே, நார்வேக்குத் தெற்கே இருக்கும் ஒரு சிறிய நாடு, டென்மார்க். இங்கே, பத்தாம் நூற்றாண்டில் ஆட்சியில் இருந்த மன்னர் ஒருவரின் பெயர், ஹரால்ட் புளூடூத். இவர் அருகில் இருக்கும் தீவுகளுக்குச் செல்ல வசதியாகப் பல பாலங்களை அமைத்தார். அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்காதீர்கள். இன்று...
சில வாரங்களுக்கு முன் புதிய செல்பேசியை வாங்கியவுடன் செய்ய வேண்டிய அவசியமான டெக்னிகல் சடங்குகளைப் பற்றிப் பார்த்தோம். அது மட்டும் போதுமா? புதியது வந்துவிட்டதால் பழையதை அப்படியே தூக்கிப் போட்டுவிடலாமா? ஒன்று, பழைய செல்பேசியை அப்படியே உள்ளே வைத்துவிடுவோம்; இல்லை கடைக்காரரிடம் ஒரு சில நூறு...
புது போன் வாங்க கடைக்குப் போகிறோம். போன காரியம் முடிந்தது என்று போனை வாங்கிக்கொண்டு அங்கே இங்கே பார்க்காமல் திரும்பி வந்துவிடுவோமா? நமக்குக் கட்டுப்படியாகும் மாடல்களைப் பார்த்து, வாங்குவது ஒரு பக்கம் என்றால் ஓரக் கண்ணால் அங்கே இருக்கும் வெள்ளை மேடையில் பளப்பளக்கும் ஐபோன் வகையறாக்களைப் பார்த்துப்...
நண்பர் ஒருவரது தாத்தா, ஐம்பதுகளில் வெளியான ஒரு தமிழ் மாத இதழின் பதிப்பாளராக இருந்திருக்கிறார். இப்போது அவரது தாத்தாவும் இல்லை; அந்தப் பத்திரிகையும் இல்லை. நண்பர் தன் சொந்த ஆர்வத்தில் அந்தப் பத்திரிகையின் சில பழைய பிரதிகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தார். படித்துப் பார்த்தபோது மிகவும் வியப்பாக...
செல்லற்ற நல்லோர் என்று அநேகமாக இன்றைக்கு உலகில் யாருமில்லை. செல்போன் ஓர் அத்தியாவசியப் பொருளாகிவிட்டது. அதுவும் குறுந்தொழில் – சிறுதொழில் செய்பவர்களுக்கு அதுதான் அலுவலகமே. பல்போன தாத்தா, பாட்டிகளுக்கும் செல் அவசியம். அதுதான் வெளிநாட்டில் இருக்கும் அவர்களின் பேரன், பேத்திகளோடு பேசி, விளையாட...
குசேலன் திரைப்படத்தில் நடிகர் வடிவேலு ரொம்பக் கஷ்டப்பட்டு ரஜினியுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்வார். உயிரைப் பணயம் வைத்து எடுத்துக் கொண்ட அந்தப் படம் உள்ள செல்பேசி தொலைந்து போய் விட்டால் எப்படியிருக்கும்? 2008-இல் அந்தத் திரைப்படம் வந்த காலத்தில் இன்றுள்ள அளவுக்குப் பலரிடம் ஸ்மார்ட் போன்...