64 மொழி அதுவரை அவன் போயிருந்த அதிகபட்ச தூரமே ஹைதராபாத்தாகத்தான் இருந்தது. அதுகூட அப்பா LTCயில், பெரியப்பா கட்டியிருந்த வீட்டின் கிருகப்பிரவேசத்திற்காக அழைத்துக்கொண்டுபோனதுதான். மராட்டிக்காரராக இருந்தாலும் அப்பாவுக்கும் அவனைப்போலவே இந்தி தெரியாது என்றாலும் பிறந்தது கடப்பா என்பதாலோ என்னவோ தெலுங்கு...
Author - விமலாதித்த மாமல்லன்
63 நிலவரம் டைப்பிங் சீட் பாக்கறீங்களா. டைப்பிங் தெரியாதே. டைப்…பிங்… தெரியாதா. டைப்பிங் தெரியாம ஈரோட்ல எல்டிசியா என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க. ஃபைல் ரெக்கார்டிங். அந்த ஆபீஸ் திறக்கப்பட்டே இன்னும் முழுதாக நான்கு வருடங்கள் முடியவில்லை என்பதை ஏசி அறைக்கு வெளியில் இருந்த பலகையே கொட்டை...
62 மாற்றம் நான்காவது சம்பளக் கமிஷனை அறிவிக்கக்கோரி நடந்த மத்திய அரசு ஊழியர்கள் ஊர்வலத்தில், இவன் முஷ்டியை உயர்த்தி எழுப்பிய கோஷம், முன்னடத்திச் சென்றுகொண்டிருந்த பாரம்பரிய இடதுசாரி இயக்கத் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த P & T தோழர்கள் சிலரை புதிய குரலாய் இருக்கிறதே, யாரது என்று திரும்பிப் பார்க்க...
61 கொலை ‘தபால் ஆபீஸ்ல கொலையாம்’ என்றார் ஏசி டூட்டி பார்க்கிற சிப்பாய். ‘எங்க எங்க’ என்றான் இவன். ஏசி சிப்பாய் சொன்னதைக் கேட்ட அதிர்ச்சியில், டிஓஎஸ் திறந்த வாயை மூடவில்லை. எங்கே ஏன் எப்படி யார் என்று அதற்குள் உள்ளே இருந்து வந்து அவரிடம் விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்...
60 மலை கோயம்புத்தூர் சைக்கிள் பயணத்தின்போது உண்டானதைவிட, அதைப்பற்றிக் கேட்கிற அத்தனைப் பேரும் வாயடைத்து நின்று விதவிதமாகப் பாராட்டியதில் உண்டான மகிழ்ச்சி அளப்பரியதாக இருந்தது. இது என்ன அவ்வளவு பெரிய விஷயமா. ஒருவர் விடாமல் ஏன் இதை இவ்வளவு பெரிதாகச் சொல்கிறார்கள் என்று சமயத்தில் தோன்றவும் செய்தது...
59 சைக்கிள் பயணம் வண்டி, அகலமாக நாற்சந்திபோலிருந்த பெருந்துறைக்கே அப்போதுதான் வந்திருந்தது. இன்னும் இருட்டக்கூட இல்லை. எதிரில் தெரிந்த சாலை ஏற்ற இறக்கங்களுடன் காற்றில் படபடக்கும் வேட்டியைப்போல இருந்தது. கிளம்பி ஒரு மணி நேரம் ஆகியிருந்தாலே அதிகம். அதற்குள்ளாகவே கால் வலிக்கத் தொடங்கிவிட்டது...
58 பேச்சு இந்த மாசம் செவன் சாமுராய் என்றார், வந்திருந்த தபாலைப் பிரித்துப் பார்த்த சிதம்பரம். ஏற்கெனவே பாத்திருக்கேன். செம படம் என்றான். நல்லதா போச்சு. படத்தை அறிமுகப்படுத்திப் பேச ஆள் கிடைச்சாச்சு என்று சொல்லி சிரித்தார். நானாவது பேசறதாவது. ஆளவிடுங்க என்றான். வாய் ஓயாம எப்படிய்யா இந்த...
57 வேட்டை ‘உங்கள ரெண்டு எம்.எல் தோழர்கள் தேடிக்கிட்டு இருக்காங்க’ என்று முன்னும் பின்னுமாக அவன் பெயரைச் சேர்த்துச் சொன்னான் தேவிபாரதி. சிகரெட் பிடித்தபடி, ஆபீஸுக்குப் பக்கத்தில் இருந்த பொட்டிக்கடைக்கு அருகில், பொத்தல் குடைபோல் இலைகளைவிட மொட்டைக் கிளைகளே அதிகமாக இருந்த சிறிய மரத்தின்...
56 அவரவர் உலகம் ‘எப்பவுமே ஆர்க்யுமெண்ட்ல ஜெயிக்கிறது அப்படி ஒண்ணும் முக்கியமில்லே’ என்று எம்கேஎஸ் சொன்னது மறுநாள் காலை ஆபீசில் உட்கார்ந்திருக்கையிலும் உள்ளே எதிரொலித்துக்கொண்டு இருந்தது. அவருக்கு நவீன இலக்கியம் தெரியாது; ஐன்ஸ்டீன்வரை பேசினாலும் பெரியாரிஸ்ட் நாத்திகர்; தன்னிடம் அன்பாக...
55 புகைச்சல் ஈரோடுக்கு வந்து ஊரோடு ஒத்து ஆற்றோடு போகத்தொடங்கியபின், காலையில் எழுந்தால் மாமி மெஸ் இட்லி சட்னி சாம்பார், பேப்பர் ரோஸ்ட் – இதில் வியப்பான விஷயம் என்னவெனில், வீட்டுப் பாங்கில் உணவளிக்கும் இது போன்ற மாமி மெஸ்களில், பட்டாளத்திலிருந்து திரும்பிய சிப்பாய் போல துவண்டிருக்கிற தோசைதான்...