Home » Archives for விமலாதித்த மாமல்லன் » Page 14

Author - விமலாதித்த மாமல்லன்

Avatar photo

தொடரும் நாவல்

ஆபீஸ் – 16

16 அறையும் வீடும் மாலையில் ஆபீஸ் விட்டதும், அத்தனை டிராபிக்கிலும் பறக்காத குறையாக டிரைவ் இன்னை பார்க்கப் பாய்ந்தது அவனுடைய சைக்கிள். சைக்கிளைப் பூட்டியபடியே உள்ளே பார்த்தான். ரங்கன் துரைராஜ் அவனைப் பார்த்துக் கையைத் தூக்கிக் காட்டினார். எப்போதும் போல அவர் அருகில் அமர்ந்து, அவ்வளவு கும்பலிலும்...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 15

15 புளூபெல் எழுத்தில் மட்டும் என்றில்லாமல்  எல்லாவற்றிலும் தான் எல்லோரையும்விட ஒரு அடி முன்னால் இருக்கவேண்டும் என்கிற முனைப்பு, எப்படியோ சிறு வயதிலேயே அவன் அடி மனதில் விழுந்துவிட்டிருந்தது. எல்லோரையும்விட எல்லாவற்றிலும் தான் குறைவாக இருக்கிறோம் என்பதால் உண்டானதாகக்கூட இருக்கலாம். ஆபீஸ் வராந்தாவில்...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 14

உள்ளூர எப்படி இருந்தாலும் சைக்கிளில் ஒரு காலும் பிளாட்பாரத்தில் ஒரு காலுமாக, குர்த்தாவும் ஜீன்ஸும் தாடியுமாக சூரியன் மறைந்த மஞ்சள் வெயில் வெளிச்சத்தில் பார்க்கப்பார்க்கத் தான் ரொம்பவும் அம்சமாக இருப்போம் என்று தோன்றிற்று. 14. ஒரு சைக்கிளின் கதை அவன் அப்பா DOS ஆக இருந்ததால், டைப் IIIல் கிடைத்திருந்த...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 13

புபி புபி என்று தியானம் செய்துகொண்டு இருந்தவன் கடைசியில் கல்கியின் நினைவைப் போற்றுவதற்காக நடத்தப்படும் போட்டியின் மூலம் எழுத்தாளனாக அறிமுகமானதை என்னவென்று சொல்வது. 13. விபரீதங்கள் என்னாச்சு. மெமோக்கு ரிப்ளை ரெடி பண்னிட்டியா என்றார் சாவித்ரி மேடம். ரெடியாகிக்கிட்டு இருக்கு… என்று சொல்ல...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 12

உன்னைப் பற்றி என்னவென்று நீ எண்ணிக்கொண்டிருக்கிறாய். ஆஃப்ட்டர் ஆல் நீ ஒரு எல்டிசி. 12 ரெட் லைட் அடுத்து இரண்டாவது சனிக்கிழமையும் ஞாயிறுமாக வந்ததில் ஆபீஸையே மறந்துவிட்டிருந்தான். திங்கட்கிழமை கால் வைக்கும்போதுதான் வெள்ளிக்கிழமை கிளம்பும்போது நடந்ததே நினைவுக்கு வந்தது. எதற்கும் சீக்கிரம் போய்விடலாம்...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 11

நம்மிடமிருந்து வித்தியாசமாக இருக்கிற எதையுமே அவ்வளவு சுலபத்தில் ஏற்றுக்கொள்ள முடியாமல் வினோதமாகப் பார்க்கிற பைத்தியக்கார உலகம்தானே இது. 11 இருந்து செஞ்சிட்டுப் போ கணையாழிப் பரிசில் ஓரிரு நாட்கள் மிதந்துகொண்டு இருந்தான். என்ன பரிசு வாங்கி என்னவாக இருந்தாலும் இங்கே நீ தபால் குமாஸ்தாதான் என்று...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 10

ப்ராக்டிகலா யோசி. உனக்குப் பிடிச்ச காரியம் எழுதறது, இல்லையா. தமிழ்ல எழுதி மட்டுமே பொழைக்க முடியுமா. கசடதபறல ஆரம்பிச்சாலும் இன்னைக்கு குங்குமம் விகடன் குமுதத்துக்கு எழுதற பாலகுமாரன் மாதிரி உன்னால கமர்ஷியலா எழுதமுடியுமா… 10 கூச்சம் டிரைவ் இன் கூடப் புழுங்கியது. எங்கோ வெறித்தபடி காபி...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 9

இதுகளுடன் சேர்ந்தால் சத்தியமாக எழுத்து போய்விடும். இலக்கியத்தை எடுத்துவிட்டால் ‘தான்’ என்ன? 9 ஆபீஸ் டைம் ஆபீசை விட்டு வெளியில் வந்தவனுக்கு என்ன செய்வது எங்கே போவதென்று தெரியவில்லை. இப்படி ஒரு பிரச்சனை இதுவரை அவன் வாழ்நாளிலேயே வந்ததில்லை. செய்வதற்கு எதாவது இருப்பவனுக்குதானே இங்கே போகவேண்டும் அங்கே...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 8

எல்லாத்தையும் ஒட நொறுக்கு கொளுத்துனு வானம்பாடிகள் மாதிரி மடக்கிப்போட்டுக் கவிதைனு எழுதி கைத்தட்டல் வாங்கறது ஈசி. ஆனா சொசைட்டில இருக்கற இந்த இம்பேலன்ஸோட ஆரிஜின் எது. மனுஷ மனசுல அது எப்படி ப்ளே பண்றதுனு டீப்பா ஸ்டடி பண்ணிப் புரிஞ்சிக்கப் பாக்கறதுதான் சீரியஸ் ரைட்டரோட வேலை. 8 வெட்டி ஆபீஸர் வேலை...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 7

சிவசுப்பிரமணி, மனசுல ஒண்ணும் வெச்சிக்காத.  ஏசி கூலாகிட்டாரு. ரெய்டு, நெனச்சா மாதிரி நடக்கலேனு அவருக்கு டென்ஷன். அவ்வளவுதான் வேற ஒண்ணுமில்லே. 7 கல்ல வாங்கு கல்ல வாங்கு ஏசி கத்திவிட்டுப் போனபின், கொஞ்ச நேரத்திற்கு அங்கிருந்த யாருமே அசையக்கூட இல்லை. சகஜ நிலைக்கு முதலில் வந்ததே சுகுமாரன்தான். என்ன...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!