விமலாதித்த மாமல்லன் சாஸ்திரி பவன் மரநிழலில் நின்றிருந்த பழைய மெட்டடார் வேனில் ஏறி அமர்ந்ததும் எல்லாரும் ஏறியாச்சா என்று தமக்குத்தாமே சன்னமாக வாய்விட்டுக் கேட்டுக்கொண்டபடி உள்ளே இருந்த நான்கைந்து பேரையும் ஒரு பார்வை பார்த்துக்கொண்ட கிரிதர், மடியில் இருந்த தோள் பையை அனிச்சையாகத் தொட்டுப்...
Author - விமலாதித்த மாமல்லன்
112. வடு ‘என்னது இந்திரா காந்திய சுட்டுட்டாங்களா.’ ஆபீஸில் யாரோ அவனிடம் சொன்ன செய்தியை அதிர்ச்சியில் சத்தமாக எதிரொலித்தான். நெஜமாவா. நெஜமாவே சுட்டுட்டாங்களா. உயிரோட இருக்காளா போய்ட்டாளா என்றான் நடைவழிக்கு அந்தப் பக்கமாக உட்கார்ந்திருந்த கேஷியர் விஸ்வநாதன். அவ்வளவுதான் வதந்தியா செய்தியா என்றே...
111 தத்து என்றாவது ஒருநாள் அந்த ஆயிரம் ரூபாய் கிடைத்தாலும் கிடைக்கலாம் என்று மனத்தின் ஒரு ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருந்த நப்பாசை, ரங்கன் துரைராஜை டிரைவ் இன்னில் பார்த்துத் திட்டித் தீர்த்ததுமே நிராசையாகிவிட்டது. ஆனால், அன்றிலிருந்து டிவி வாங்கியே தீருவது என்கிற வெறி உள்ளூர கனலத் தொடங்கிக் கண்ணில்...
நாயம்மாவிடம் வாய்கொடுத்து மீளமுடியாது என்பது அந்த வளாகத்திற்குப் புதிதாகக் குடிவந்தவர்களுக்குகூட சீக்கிரமே தெரிந்துவிடும். நாயைப் பற்றிப் பேச்செடுத்தால் போச்சு. அதுவரை, தானுண்டு தன் தெருநாய்களுண்டு மெய்ன்ரோட்டில் இருக்கிற தள்ளுவண்டிக்கடை உண்டு என்று தன்பாட்டுக்கும் போய்வந்துகொண்டிருக்கும் நாயம்மா...
110 பரிமாணம் கேஸ் அடுப்பு வந்து இறங்கியதில் அம்மா மகன் இருவருக்கும் சந்தோஷம் தாங்கவில்லை. ஆபீஸிலிருந்து அப்பாவின் பணம் வந்து, கட்டிலும் சைக்கிளும் வாங்கியதில், தரையோடு தரையாய்க் கிடந்த அவன் வாழ்க்கை உயர்ந்ததைப்போல கேஸ் அடுப்பில்தான் உண்மையிலேயே அம்மாவின் வாழ்வு உயர்ந்திருப்பதாக அவனுக்குத்...
109 காட்சிகள் ராம் வீட்டில் ராமசாமியைப் பார்த்துவிட்டு ஆட்டோவில் திரும்பும்போது ஷங்கர் ராமனிடம் இவன் கேட்டான், ‘எப்படி’ என்று. அவன் சொன்னான், ‘சான்ஸே இல்ல. ஒண்ணு இவர் ரொம்ப ரொம்ப ஜெனுயின் பர்சனா இருக்கணும், இல்லாட்டி கம்ப்ளீட்டா பொய்யான ஆளா இருக்கணும். இப்படி ஒருத்தர் இருக்கமுடியுமானு பிரமிப்பா...
108 நினைவுக்கு ‘படிக்கிறவா இதை ரொம்ப நாளைக்கு ஞாபகம் வெச்சிண்டிருப்பா. ரொம்ப நாளைக்கு இந்தக் கதையோட உங்களை ஐடண்டிஃபை பண்ணிப்பா.’ என்று வாய்விட்டுச் சொல்வதற்கு முன்பே சுந்தர ராமசாமியின் பெரிய முகம் பாராட்டு முறுவலுடன் விகசித்தது. அதைப் பார்த்ததே கதையைப் படித்துக் காட்டி முடித்திருந்த இவனுக்கு, ஜன்ம...
107 நகங்கள் ‘என்ன ரங்கன் எப்படி இருக்கீங்க.’ ‘ஃபைன். நீ எப்படி இருக்கே’ என்று பதிலுக்குச் சொல்லிவிட்டு, ‘நான் சொல்லலே இவன்தான் அது. வெரி டேலண்டட் ஃபெலோ. கொஞ்சம் துடுக்கா பேசுவான். ஆனா மனசுல ஒண்ணும் கிடையாது. நல்ல பையன்,’ என்றார் ரங்கன் துரைராஜ் தம் அருகில் அமர்ந்திருந்த, இவன் அதுவரை...
106 முகங்கள் கவி புதுசா ஒரு கட்டுரை எழுதிக்கிட்டு இருக்காம்பா. பிரமாதமா இருக்கு. தருமுக்கு என்னய்யா. அவனுக்கு இருக்கற தெறமைக்கு எவ்ளோ வேணா எழுதலாம். சண்டையை விட்டு ஒழிச்சுட்டு அவன் இது மாதிரி மட்டுமே எழுதலாம் இல்லையா. எதைப்பத்தி எழுதிக்கிட்டு இருக்கான். ஸ்ரீலங்கா பத்தி. இங்க யாருக்குமே தெரியாத பல...
105 அரசியலும் இலக்கியமும் நமக்கு என்ன தெரியும் என்று அவ்வப்போது உள்ளூர தோன்றினாலும் சிறுவயது முதலே எழுதுகிறான் என்கிற ஒன்றே இவனுக்கு எல்லாம் தெரியும் தோற்றத்தையோ அல்லது இவ்வளவு சிறிய வயதில் எவ்வளவு தெரிகிறது என்கிற வியப்பையோ பார்க்கிறவர்களிடம் உண்டாக்கியிருந்தது. அதை முதல் முதலில் வார்த்தைகளில்...