104 ஆண்களும் பெண்களும் ‘எனக்கு இது வேண்டாம்னு ப்ரெக்னெண்ட்டா இருந்தப்ப ஒரு நாள் கோவத்துல வயத்துல குத்திண்டேன். அதைக் கதையா எழுதி ஆனந்த விகடனுக்கு அனுப்பினேன்.’ ‘அடுத்த வாரமே பிரசுரிச்சுட்டு இருப்பானே. அல்வா கெடைச்சா மாதிரி’ ‘அடுத்த வாரமே இல்லே டூ வீக்ஸ்ல பப்ளிஷ்...
Author - விமலாதித்த மாமல்லன்
103 சந்திப்புகள் அம்பையை நேரில் தெரிந்த, சந்தித்தேயிருக்காத எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் மூலம் கேள்விப்பட்டதிலிருந்து, அவர் ரொம்ப வித்தியாசமானவர் என்கிற சித்திரம் இவனுக்குள் உருவாகியிருந்தது. அவர் தமிழ்நாட்டிலேயே இல்லை; டெல்லி பாம்பே என்று இருப்பவர் என்பதால் எழுத்திலிருந்து உருவான பிம்பம்...
102 தோரணங்களும் காரணங்களும் அடுத்த நாளே தேடிப்போய்ப் பார்க்கவேண்டிய அவசியமின்றித் தானாகவே வந்திருந்தான் வசந்தகுமார். அவன் இவனுடைய ஆபீஸுக்கு அத்தி பூத்தாற்போல எப்போதாவதுதான் வருகிறவன், அன்று பஷீரோடு TVS 50ல் வந்திருந்தான். அதை இவனுக்குக் காட்டத்தான் வந்திருக்கவேண்டும் என்பது, ‘இன்னும் என்னப்பா...
101 ஏய் தெருவுக்குத் தெரு விடுதலைப் புலிகள் ஆக்கிரமித்து இருந்த இந்திரா நகரில், வாட்டர் டேங்க் எதிரில் இருந்த பஸ் ஸ்டாப்பில் நின்று பேசிக்கொண்டிருந்த வசந்தகுமார் திடீரென்று , ‘ஏ என்னப்பா யாரோ ஒரு பொண்ணோட சுத்திக்கிட்டு இருக்கியாமே. காதலா’ என்றான் சிரித்தபடி. ‘ஆமாய்யா. ஃபிரெண்டுனு...
100 பாவாடை நிழலுக்குள் ‘நம்ப எஸ். வைத்தீஸ்வரனோட டாட்டர் சத்யாவோட கிளாஸ்மேட்டாம்பா’ என்று ஒற்றை வரியில் சொல்லிவிட்டுக் குழந்தைபோலச் சிரித்தான், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி மாதிரியே, புருவக்கூடலுக்குக் கீழே எல்லோரையும்போல பள்ளம் ஆகாமல், நேராகக் கோடிழுத்தாற்போல இறங்கும் தீர்க்கமான நாசி...
99 ஆமாவா பஸ்ஸின் பின்புறப் படிக்கட்டில் இவன் நின்றிருக்க, அதற்குப் பின்னால் இருக்கிற நீண்ட சீட்டில் இரண்டாவதாக அமர்ந்திருந்த நிமா சொன்னாள், ‘என் வேடிக்கையை மறைக்கறீங்க’ என்று. இவனுக்கு முதலில் அவள் என்ன சொல்கிறாள் என்றே புரியவில்லை. இவன் கையைப் பின்னால் இழுத்துவிட்டப் பிறகுதான், எதிரில்...
98 ஹீரோ ஓரிரு இலக்கியச் சிந்தனைக் கூட்டங்களில் தட்டுப்பட்ட, தன் புத்தக வெளியீட்டு விழாவில் பார்த்த முகத்தை பஸ்ஸில் பார்த்தது கொஞ்சம் பரபரப்பாக்கிவிட்டது. பெண்களை முன்பின் பார்க்காதவனோ பழகாதவனோ இல்லை என்றாலும் இந்தப் பெண் சற்றே வெட்கத்துடன் சிரித்ததைப்போலத் தோன்றியது வேறு ஆர்வத்தைக் கூட்டிவிட்டது...
97 ஆசனம் ‘பிரஸ்ஸில் இருக்கிறது’ என்று சில மாதங்களுக்கு முன்னால் மீட்சி 6ல் ‘முனியாண்டி’ என்கிற பெயரில் சாரு நிவேதிதா தன்னுடைய பைல்ஸ் பிரச்சனையை வைத்து எழுதியிருந்தான். படித்தபோதே ரொம்ப கெக்கரேபிக்கரே என்று இருப்பதாகப் பட்டது. அவனுக்கு பைல்ஸ் பிரச்சனை இருப்பதென்னவோ உண்மைதான்...
96 சாமானியன் பட்டையான கறுப்பு ஃபிரேம் போட்ட சோடாபுட்டி கண்ணாடியுடன் குண்டாகக் குள்ளமாய் சின்ன கறுப்பு மூட்டை போல இருப்பார் சுந்தா. கூர்கியான குஷாலப்பாவும் கறுப்புதான். ஆனால் கிரிக்கெட் வீரர் என்பதால் நன்கு உயரமும் அகன்ற மார்பும் திடமான தோள்களுமாய் முதல் பார்வைக்கே ‘அட யாரிது’ என்று...
95 எட்டடிக் குச்சு ‘என்ன உன் கதை எதாவது வந்துருக்கா’ என்று கேட்டுக்கொண்டே டாய்லெட்டில் இருந்து, கைக்குட்டையில் ஈரக் கைகளைத் துடைத்துக்கொண்டபடி ரேஞ்சுக்குப் போனார் மோகன். டேபிள் மீது இருந்த ஞானரதத்தை எடுத்துக் காட்டி, ‘இதுவா. பழசு. ரெண்டு மூணு மாசம் முன்ன வந்தது’ என்றபடி போய்...