கீவ்வின் புறநகர்ப் பகுதி. ஊழியர்கள் இருவர் ஆரஞ்சு நிற மேலங்கியோடு ஒரு ரஷ்யக் கல்வெட்டைக் கருவியைக் கொண்டு சுரண்டிக் கொண்டிருந்தார்கள். பத்து நிமிடத்தில் கல்வெட்டு வெறுங்கல்லானது. அவசரமாய் அங்கிருந்து நகர்ந்தார்கள். இரண்டாம் உலகப் போரில் சோவியத்தின் வெற்றியைப் பறைசாற்றும் நினைவுச்சின்னம் அது...
Author - வினுலா
ஜல்லிக்கட்டுப் போராட்டம் – அன்றைய சூழலில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானதா? உண்மையில் தமிழனின் கலாசார அடையாளத்தை மீட்டெடுக்க உருவெடுத்தது. ஊழல், விவசாயம், சுற்றுச்சூழல், இன்னபிற அதிருப்திகள் இருந்தபோதும் அமைதிகாத்த தமிழகம், தம் அடையாளத்தை அழிக்க முற்பட்டவுடன் வெகுண்டெழுந்தது அல்லவா...
தனது பசியைத் தணிக்கத் துரத்துகிற புலி, தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடுகிற மான். ஓட்டம் நீளநீள இருவருமே களைப்படைகிறார்கள். தனது அந்தஸ்தைக் காப்பாற்றப் புலியும், உயிரைக் காத்துக்கொள்ள மானும் ஓடுவதை நிறுத்த முடியவில்லை. மானுக்கு தூரத்திலிருந்து ஆதரவுகள் திரள, களத்தில் இப்போது புலியும் மானும் மட்டும்...
இதுவும் கடந்து போகும் என்று போரையும் கடக்கின்றனர் உக்ரைனியர்கள். காலங்காலமாக ஆக்கிரமிப்புகளை சந்தித்து வரும் இவர்களுக்கு மனோதிடத்தைக் கொடுக்க முயல்வது கலை. ஆம். டைட்டானிக் திரைப்படத்தில் படகு மூழ்கும் வேளையிலும், இசைக்கருவிகளை வாசித்து மக்களை உற்சாகப்படுத்துவார்களே அதுபோல. மேடைச் சிரிப்புரை, இசை...
பொன்னியின் செல்வன் பூங்குழலி கதாபாத்திரம் ஓட்டும் பாய்மரப்படகு ஞாபகம் இருக்கிறதா? பஞ்ச பூதங்களில் ஒன்றான காற்றின் விசையைக் கொண்டியங்கும் அற்புதக் கண்டுபிடிப்பு (படகைச் சொன்னேன்). நிலக்கரி, எரிவாயு போன்று சுற்றுசூழலுக்குப் பங்கமின்றி, இயற்கையோடு இணைந்த தொழில்நுட்பம் கூடியது. இவற்றின் பக்கம்...
இம்மாதம் 15-ஆம் தேதி மீண்டும் ஒரு விமான நிலையம் தாக்கப்படுகிறது. ஒரு ஆண்டுக்கு முன் உக்ரைன் தலைநகர் கீவில் நடந்ததுபோல. இம்முறை சூடானில். தலைநகர் கார்ட்டூம் விமான நிலையத்திலிருந்து கரும்புகை பேரலையாய் எழும்புகிறது. மக்கள் மறைவிடங்களைத் தேடி ஒளிகிறார்கள். இராணுவத் தளம் மற்றும் அதிபர் மாளிகை துணை...
ரஷ்யப் போர் விமானி: “ப்ரெஸ்ட் டவர், இது Ka-52. புறப்பட தயாராக ஓடுதளம் 27ல் உள்ளது. அவசரப் புறப்பாடு. அனுமதி வேண்டும்.” ப்ரெஸ்ட் டவர்: “Ka-52, புறப்பட அனுமதிக்கிறோம். ஓடுதளம் 27, 30 நாட்ஸில் காற்றின் வேகம் 90. எச்சரிக்கை, சுகோய் விமானம் தரையிறக்கத்தில் உள்ளது.” அனுமதி கிடைத்தவுடன்...
மன்னராட்சியோ மக்களாட்சியோ… நோக்கம் ஒன்றுதான். தத்தம் நாடுகளை பாதுகாத்துக் கொள்வது. வலிமையும், வாய்ப்பும் அமைந்தால் அடுத்த நாட்டையும் வளைத்துப் போட்டு விடுவது. பல்லிருக்கிறவன் பாதுஷா மட்டுமா சாப்பிடுவான்? நேட்டோ கூட்டணியில் 31வது நாடாக இணைந்திருக்கிறது பின்லாந்து. இது ஒரு வரலாற்று...
உங்கள் இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்டு, சீட் பெல்ட்களை இறுக்கிக் கட்டிக் கொள்ளுங்கள். நாம் நுழையப்போவது உக்ரைன் போர்க்களத்துக்குள். இடம்: உக்ரைனுக்குள் இருக்கும் ரஷ்ய இராணுவத்தளம் ரஷ்யப்படைகளுக்கு எரிபொருள் மற்றும் வெடிகுண்டுகளின் தட்டுப்பாடு இருப்பதை முன்பே பார்த்தோம் இல்லையா? ஒருவழியாக இன்னும்...
உக்ரைன் – ரஷ்யப் போர் இன்னும் முடிந்தபாடில்லை. இன்னும் நீட்டிக்கவே இருபுறமும் அணிகள் கைகோத்து உதவிபுரியத் தொடங்கியுள்ளன. பகைவனுக்குப் பகைவன் நண்பன் என்கிற ரீதியில், உலக நாடுகள் ஒன்றுசேரும் முயற்சியில் பகிரங்கமாக ஈடுபட்டு வருகின்றன. இவை இந்தப் போருக்காக மட்டும் கைகோக்க நினைக்கவில்லை. பிற்காலப்...