பொன்னியின் செல்வன் பூங்குழலி கதாபாத்திரம் ஓட்டும் பாய்மரப்படகு ஞாபகம் இருக்கிறதா? பஞ்ச பூதங்களில் ஒன்றான காற்றின் விசையைக் கொண்டியங்கும் அற்புதக் கண்டுபிடிப்பு (படகைச் சொன்னேன்). நிலக்கரி, எரிவாயு போன்று சுற்றுசூழலுக்குப் பங்கமின்றி, இயற்கையோடு இணைந்த தொழில்நுட்பம் கூடியது. இவற்றின் பக்கம்...
Author - வினுலா
இம்மாதம் 15-ஆம் தேதி மீண்டும் ஒரு விமான நிலையம் தாக்கப்படுகிறது. ஒரு ஆண்டுக்கு முன் உக்ரைன் தலைநகர் கீவில் நடந்ததுபோல. இம்முறை சூடானில். தலைநகர் கார்ட்டூம் விமான நிலையத்திலிருந்து கரும்புகை பேரலையாய் எழும்புகிறது. மக்கள் மறைவிடங்களைத் தேடி ஒளிகிறார்கள். இராணுவத் தளம் மற்றும் அதிபர் மாளிகை துணை...
ரஷ்யப் போர் விமானி: “ப்ரெஸ்ட் டவர், இது Ka-52. புறப்பட தயாராக ஓடுதளம் 27ல் உள்ளது. அவசரப் புறப்பாடு. அனுமதி வேண்டும்.” ப்ரெஸ்ட் டவர்: “Ka-52, புறப்பட அனுமதிக்கிறோம். ஓடுதளம் 27, 30 நாட்ஸில் காற்றின் வேகம் 90. எச்சரிக்கை, சுகோய் விமானம் தரையிறக்கத்தில் உள்ளது.” அனுமதி கிடைத்தவுடன்...
மன்னராட்சியோ மக்களாட்சியோ… நோக்கம் ஒன்றுதான். தத்தம் நாடுகளை பாதுகாத்துக் கொள்வது. வலிமையும், வாய்ப்பும் அமைந்தால் அடுத்த நாட்டையும் வளைத்துப் போட்டு விடுவது. பல்லிருக்கிறவன் பாதுஷா மட்டுமா சாப்பிடுவான்? நேட்டோ கூட்டணியில் 31வது நாடாக இணைந்திருக்கிறது பின்லாந்து. இது ஒரு வரலாற்று...
உங்கள் இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்டு, சீட் பெல்ட்களை இறுக்கிக் கட்டிக் கொள்ளுங்கள். நாம் நுழையப்போவது உக்ரைன் போர்க்களத்துக்குள். இடம்: உக்ரைனுக்குள் இருக்கும் ரஷ்ய இராணுவத்தளம் ரஷ்யப்படைகளுக்கு எரிபொருள் மற்றும் வெடிகுண்டுகளின் தட்டுப்பாடு இருப்பதை முன்பே பார்த்தோம் இல்லையா? ஒருவழியாக இன்னும்...
உக்ரைன் – ரஷ்யப் போர் இன்னும் முடிந்தபாடில்லை. இன்னும் நீட்டிக்கவே இருபுறமும் அணிகள் கைகோத்து உதவிபுரியத் தொடங்கியுள்ளன. பகைவனுக்குப் பகைவன் நண்பன் என்கிற ரீதியில், உலக நாடுகள் ஒன்றுசேரும் முயற்சியில் பகிரங்கமாக ஈடுபட்டு வருகின்றன. இவை இந்தப் போருக்காக மட்டும் கைகோக்க நினைக்கவில்லை. பிற்காலப்...
அமெரிக்க MQ-9 ரக ஆளில்லாத ட்ரோன் விமானம் மார்ச் 14ஆம் தேதி, கருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானது. ரஷ்யாவின் இரண்டு Su-27 ரகப் போர் விமானங்களே இந்த ட்ரோனை வீழ்த்தியதாக, அமெரிக்கா மார்ச் 16ஆம் தேதி வீடியோ ஆதாரங்களோடு குற்றம் சாட்டியுள்ளது. ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்துவரும் ரஷ்யா உக்ரைன் போர்...
மாதவிடாய்க் கால விடுப்பைச் சட்டப்பூர்வமாக்கிய நாடுகளில் சமீபத்தில் ஸ்பெயினும் இணைந்திருக்கிறது. இதையடுத்து இந்தியாவிலும் இச்சட்டத்தை அமல்படுத்தக் கோரிக்கைகளும் விவாதங்களும் அதிகரித்து வருகின்றன. இது சாத்தியப்படுமா..? விளைவுகள் பெண்களுக்கு உதவியாக அமையுமா அல்லது கூடுதல் சுமையாகுமா..? மாதவிடாய்...
ஒருநாள் யானைக்குத் தாயாக இருந்து பார்த்தால் எப்படி இருக்கும்? சாத்தியமில்லாதது ஒன்றுமில்லை. துபாரேவுக்குப் போனால் அது நடக்கும். நன்கு குளிப்பாட்டி, வெயிலில் தலைகாய வைத்து, வயிறார ஊட்டிவிட்டு, அப்படியே தோளில் போட்டு உலவிக்கொண்டே குழந்தைகளைத் தூங்க வைப்போமில்லையா? இதைத்தான் நீங்கள் அங்கு வளரும்...