‘மேக் இன் இந்தியா, ஃபார் தி வேர்ல்ட்’ திட்டத்தின் கீழ், மாதம் ஐம்பதாயிரம் வேஃபர்களைத் தயாரிக்கப் போகிறது இந்தியா. வெனிலா, ஸ்ட்ராபெர்ரி, சாக்லேட் வேஃபர்கள் அல்ல. மெல்லிய சிலிக்கான் தகடுகள். இதன்மேல் டிரான்சிஸ்டர் உள்ளிட்ட மின்னணுக் கூறுகளை வைத்து சர்க்யூட்களைப் பொருத்திவிட்டால், சிப் (சில்லு)...
Author - வினுலா
“உக்ரைனியர்கள் தங்களை இன்னும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். ஐரோப்பிய, அமெரிக்க உதவிக்காகக் காத்திருப்பது எதிர்காலத்தில் உதவாது. அதனால் ரைன்மெட்டல் குழுமம் அவர்களுக்கென ஒரு ஆயுதத் தொழிற்சாலையைத் தொடங்கவுள்ளது” என்று சென்ற வருடம் ஒரு பேட்டி அளித்திருந்தார் ஆமின் பாப்பெர்ஜெர், ஜெர்மனியின்...
மழைப் பச்சை என்றொரு நிறம் உண்டு. என்று நனைந்தோம் என்று காய்ந்தோம் என்ற இடைவெளி தெரியாத இலைகளுக்கு மட்டும் சொந்தமான நிறம் இது. இப்படியான மழைக்காட்டில் மட்டுமே வாழும் ஜீவன்களும் தனித்துவம் வாய்ந்தவை. கூரிய மூக்கும், எலி போன்ற உடலும், அணில் போன்ற வாலும் கொண்டு, மரங்களில் வாழும் ட்ரீ ஷ்ரூவ்கள்;...
“தனது அடையாளத்துடன் இருக்கும்போது மனிதனின் சுயரூபம் வெளிவராது. அவனுக்கு ஒரு முகமூடியைக் கொடுங்கள், உங்களுக்கு உண்மைகளைச் சொல்வான்” என்றார் புகழ்பெற்ற கதாசிரியர் ஆஸ்கார் வைல்ட். இணையத்தின் வழியே அந்த முகமூடியை வழங்கி, உண்மைகளை வெளிக்கொண்டு வந்தவர் ஜூலியன் அசான்ஞ். முகமூடிக்குள் வெகுநாள்...
“அண்ணா, கார்ல ஏறுங்க அண்ணா.” “இல்ல தம்பி, நீங்க முதல்ல ஏறுங்க.” “உங்களுக்கு முன்னாடி எப்டிங்கண்ணா, நீங்க முதல்ல ஏறுங்க.” “சரி வாங்க தம்பி, ரெண்டு பேருமே ஏறுவோம்.” ரஷ்ய அதிபர் புதினும், வட கொரிய அதிபர் கிம்மும் இப்படித்தான் பேசியிருப்பார்கள். கதிரவன்...
தேர்தல் முடிவுகள் சிலசமயம் திடுக்கிட வைப்பது சரிதான். ஆனால் தேர்தல் அறிவிப்பின் மூலமே திடுக்கிட வைத்தவர் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோனாக மட்டும்தான் இருப்பார். தேர்தல் ஆண்டு என்று பெயர் சூட்டுமளவு, இந்த ஆண்டுமுழுவதும் உலகின் ஏதாவதொரு நாட்டில் தேர்தல் நடந்துவருகிறது. தாமாக முன்வந்து இந்தப்...
கன்னித் தீவு தொடர்கதையாகத் தொடர்கிறது, ரஷ்யா மீதான அமெரிக்காவின் தடைகள். இம்முறை ஜி7 மாநாட்டையொட்டி, செமிகண்டக்டர்கள் போன்ற இன்னும் பல முக்கியத் தொழில்நுட்பப் பொருட்கள் மீது சிறப்புத் தடைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. கூடவே சீனா, மத்தியக் கிழக்கு நாடுகளின் வங்கிகளும், மின்னணு நிறுவனங்களும்...
கறை நல்லது என்கிறது கறை நீக்கும் திரவத்தை உருவாக்கிய நிறுவனம். போர் நல்லது. எதிரியை நீக்கிப் பாதுகாப்பாக வாழப் போர் ஒன்றுதான் வழி என்கிறது, போர் செய்யும் அரசாங்கம். இவற்றில் தவறேதும் இருப்பதாகத் தெரியவில்லை அல்லவா? இதைப்போன்ற முரண்பட்ட விஷயங்களை நம்பவைத்து, முடிவில் தற்சார்பற்ற உண்மையை மறக்க...
தாடியும் தலைப்பாகையுமாகக் கருப்புநிற பி.எம்.டபிள்யு. காரில் வந்திறங்கியது அந்த மூவர் குழு. ஒரு மத நீதிபதி, ஒரு அரசு வழக்கறிஞர் மற்றும் அந்நாட்டின் உளவுத்துறைத் தலைவர். ஊருக்கு வெளியே அமைந்திருந்த அந்தச் சிறைச்சாலையின் கைதிகள், இவர்களை மட்டுமே சந்தித்தனர்- கடைசியாக. ஒவ்வொருவராக வரிசையில் வந்தனர்...
விறகுக் கட்டைத் தலையில் சுமக்கும் பெண்களும், சுள்ளி பொறுக்கும் சிறுமிகளும் இல்லாத ஊர்கள் உருவாகப் போகின்றன. சுயசார்பு என்பது பொருளாதாரத்தில் மட்டுமல்ல, மின்சாரத்திலும் நனவாகப் போகிறது. சூரிய ஒளி மற்றும் காற்றிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரம், உலகின் முப்பது சதவீத மின்சாரத் தேவையைப் பூர்த்தி...