தென்கிழக்கு ரஷ்யாவில் ஆரம்பித்து உக்ரைனுக்குக் கிழக்கே போகிறதொரு இரயில் பாதை. ரஷ்யாவின் ரஸ்தோவ், டகன்ரோக் நகரங்களை, உக்ரைனின் மரியுபோல், டோனெஸ்க் நகரங்களோடு இணைக்கும். இவ்விரு நாட்டின் எல்லை நகரங்களிவை. எல்லாமே ரஷ்யாவுடையது என்றானபிறகு, இனி எல்லைகள் எதற்கு? அங்கிருந்து கொஞ்சம் வோல்னோவாகா, ரோஸிவ்கா...
Author - வினுலா
உக்ரைனில் போர் நடக்கிறது. வாழ்வாதாரம் இழந்து மக்கள் வறுமையில் தவிக்கிறார்கள் என்று அனுதாபப்படுகிறது உலகம். அங்கோ ரியல் எஸ்டேட் சந்தை உச்சத்தைத் தொடும் நிலையிலிருக்கிறது. வீட்டுமனை, அடுக்குமாடிக் குடியிருப்புகள் என்று சொத்துகளின் விலை கூடிக்கொண்டே போகிறது. எப்படி முரண்படுகின்றன இந்தப் போரும்...
தேசியகீதம் முழங்க, ரஷ்யாவின் மூவர்ணக்கொடி கம்பத்தில் தவழ்ந்தேறியது. வலதுகைச் சட்டையில் ஜீ முத்திரையோடு வரிசையில் சிறுவர் சிறுமியர். தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்த நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். எவரது உதடும் அசையவில்லை. ஒரு சிறுமி தன் இருகாதுகளையும் பொத்திக் கொள்கிறாள். அவமானத்தால் கேமரா வேறுதிசை...
‘உலகமே உன்னை எதிர்த்தாலும், துணிந்து நில்’ என்பார்கள். இத்தகைய துணிச்சலுடையவர் கிம் ஜோங்-உன், வடகொரிய அதிபர். இவருக்குச் சற்றும் சளைக்காதவர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின். வடகொரியா உருவாக உறுதுணையாக இருந்தது அன்றைய சோவியத். அதற்கான நன்றிக்கடனைச் செலுத்தும் சந்தர்ப்பம் இப்போது அமைந்துள்ளது வட...
இருநூறு ரூபாய் விலைக் குறைப்பு – இந்திய சமையல் எரிவாயுவிற்கு. அடுத்து பெட்ரோல் என்ற ஆசையிருந்தால், மனத்தைத் தேற்றிக் கொள்ளுங்கள். இப்போதைக்கு வாய்ப்பில்லை இந்தியர்களே! உக்ரைன் – ரஷ்யப் போரின் புண்ணியத்தில், நமக்கு விலையேறாமல் இருந்ததே பாக்கியம். ஐரோப்பிய நாடுகளின் திண்டாட்டத்தைப்...
கொந்தளிப்பு நல்லதல்ல. மனத்திற்கும் சரி, விமானத்திற்கும் சரி… வெளிப்படும் நேரம் விமானம் மட்டுமல்ல, வாழ்க்கையும் சரிந்துவிடும். சீராகப் பறந்து கொண்டிருந்தது வாக்னர் படையின் ஜெட் விமானம் திடீரென்று மேலும், கீழும் உயரத்தை மாற்றுகிறது. பின்பு செங்குத்தாகப் பூமிக்குப் பாய்ந்து, தற்கொலை செய்து கொள்கிறது...
கொசுவச் சட்டையின்(டி ஷர்ட்) கழுத்துப்பட்டை ஊதா நிறத்தில் இருக்க வேண்டும். இரு கைகளிலும், பாக்கெட்டிலும் ஊதா நிறக் கால்பந்து வரைந்திருக்க வேண்டும். மேல்பகுதியில் வெள்ளை நிறம் பிரதானமாக தொடங்க, கீழே இறங்க இறங்க, வெளிர் மஞ்சள் நிறத்தில் முடிய வேண்டும். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரையொட்டிய ஆடைத்...
“வலதுபுறம், 40 டிகிரி. பிட்சும்க்கி, இது உன்னுடைய நேரம்.” கண்முன் இருக்கும் கணினித் திரையைப் பார்த்தே, வழிகாட்டுகிறார் விட்ச். திரையில் ஒரு திறந்த வெளியில் குண்டுவெடித்துக் கரும்புகை மேலெழும்புவது தெரிகிறது. உற்றுப்பார்த்துச் சேதங்களைக் குறித்துக் கொள்கிறார். அடுத்தத் தாக்குதலுக்கு...
“என் விரல் நகங்களை ஒவ்வொன்றாகப் பிடுங்கி எடுக்கும்போது, வலியும் தாங்க முடியாதபடி அதிகரித்துக் கொண்டே போனது.” கண்கள் கலங்கிவிட, பேசுவதைச் சில வினாடிகள் நிறுத்துகிறார் மினென்கோ. “அப்போது எனக்கிருந்த ஒரே ஆசை, இறந்துபோன என் கணவருடன் சீக்கிரமாகச் சென்றுசேர வேண்டும் என்பதே.”...
மூன்று மில்லியன் டாலர் லஞ்சப் பணம். கையும் பணமுமாகக் கைதானது – உக்ரைனின் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, சீவலொத் கன்யாஸிவ். நீதிமன்றத்திற்கு உள்ளேயே அலுவலகம் ஒன்றை வைத்திருக்கிறார். நாடு முழுவதுமிருந்து வந்து குவியும் லஞ்சப்பணத்தை, முறையே கணக்கு வைத்துக் கொள்வதற்கு. லஞ்சம் வாங்குவதை ஆதாரத்தோடு...