கடவுளைப் பார்க்க முடியுமா? புராணக் கதைகளிலெல்லாம் கடவுள் நேரில் வந்து வரம் தருகிறாரே? வானத்திலிருந்து இடி போல அசரீரியாகக் குரல் கொடுக்கிறாரே? ஊரில் சில பேர் இறந்து போனவர்களைப் பார்த்ததாகச் சொல்வதுண்டு. இறைவனை யாராவது பார்த்திருக்கிறார்களா? இந்தக் கலியுகத்தில் அது சாத்தியமா? சாத்தியமாகியிருக்கிறது...
Author - காயத்ரி. ஒய்
டோக்கியோவில் உள்ள ஒரு கல்லூரியில் சீனாவின் ஜாக் மா (அலிபாபா நிறுவனர்) வருகைதரு பேராசிரியராகப் பொறுப்பேற்கிறார் என்கிற செய்தி கடந்த வாரம் பல வர்த்தகப் பத்திரிகைகளின் பக்கங்களை நிறைத்திருந்தன. மாபெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியம் ஒன்றை நிறுவி, வளர்த்து, உலகப் பெரும் நிறுவனங்களுள் ஒன்றாக்கிய ஒருவர் பாடம்...
ஏப்ரல் இரண்டாவது சனிக்கிழமைக்கு முன்தினம் புனித வெள்ளி. மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை. அடிக்கும் வெயிலுக்கு ஊட்டி போகலாம், கொடைக்கானல் போகலாம், ஏலகிரிக்காவது போகலாமெனப் பிள்ளைகள் பிடுங்கி எடுத்தனர். ‘அங்கெல்லாம் ஏற்கனவே போயாச்சு. அதோட எக்ஸாமெல்லாம் முடிஞ்சு லீவு விட்டுருக்கறதுனால ஒரே கூட்டமா...
சிவபெருமான் அபிஷேகப் பிரியர். எல்லா ஆலயங்களிலும் ஆண்டு முழுவதும் எம்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படும். ஆனால் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அபிஷேகம் செய்யப்படும் கோவில் ஒன்று இருக்கிறது! வேறு எந்தக் கோயிலிலும் சேர்த்துக் கொள்ளப்படாத தாழம்பூவால் ஸ்வாமிக்கு அலங்காரமும் செய்யப்படுகிறது! இராமநாதபுரம்...
மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்திருக்கிறது கோவிட். சென்ற வருடம் முழுக்க அதை மறந்திருந்தோம் அல்லது அதைப் பற்றி நினைக்க விரும்பாமல் ஒதுக்கி வைத்திருந்தோம். இப்போது பயப்படவோ பதற்றம் கொள்ளவோ தேவையில்லை என்றாலும் திரும்ப அதைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. கொரோனா மீண்டும்...
ஐஸ்க்ரீம்! என்ன ஒரு ருசி? உதட்டில் பட்டவுடன் கரையும் மென்மை, சிலிர்ப்பு. கலர் கலராகக் கவிழ்ந்திருக்கும் அரைக் கோளப் பந்துகள். அதைச் சுவைக்காமல் சுட்டெரிக்கும் கோடையைக் கடந்து விட முடியுமா? ஐஸ்க்ரீம் சாப்பிடுகிறவர்களுள் எத்தனைப் பேருக்கு அதன் வரலாறு தெரியும்? எதற்குத் தெரியவேண்டும் என்பீரானால்...
அண்ணாநகர் டவருக்கு ஒரு சரித்திரச் சிறப்பு உண்டு. சென்னையின் அடையாளங்களுள் அது ஒன்று. கடந்த 2011ம் ஆண்டு அந்த டவரில் ஏற அனுமதி நிறுத்திவைக்கப்பட்டது. டவர் மூடப்பட்டது. காரணம், மேலே ஏறிக் குதித்து தற்கொலை செய்துகொண்டுவிடுகிறார்கள் என்பதுதான். இனி அப்பிரச்னை இல்லை. ஆளுயர இரும்புக்கம்பிகள் போடப்பட்டு...
சாகசமும் சாந்நித்தியமும் அருகருகே இருக்குமா? இருக்கும். இந்தியாவின் இரண்டாவது பெரிய சிவன் சிலை அமைந்துள்ள முர்தேஷ்வருக்கு வாருங்கள். மங்களூருக்கு அருகில் அரபிக் பெருங்கடலோரம் இருக்கிறது இந்தக் கோயில். கோயிலின் ராஜகோபுரம் இருநூற்று முப்பத்தெட்டு அடியில் இருபது அடுக்குகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது...