நான் இருபதிற்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் குழுமங்களில் இருக்கிறேன். அதனால் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் அறுநூறு மெசேஜ்களாவது வரும். பள்ளி முடித்து பேருந்தில் ஏறிய பிறகுதான் பொறுமையாக அவை எல்லாவற்றையும் பார்த்து தேவையான பதில்களை அனுப்புவேன்.
அந்த அறுநூற்றில் தனிப்பட்ட மெசேஜ்கள் பத்து இருப்பதே அரிது. அதிலும் என் கணவரது மெசேஜ் இருப்பது அரிதினும் அரிது. பொதுவாகவே என் கணவர் எனக்கு வாட்சப் மெசேஜ் அனுப்ப மாட்டார். தேவைப்படும் சமயங்களில் அழைத்துப் பேசி விடுவார். அதுவும் அவரது வேலை நேரம் என்றால் கால், மெசேஜ் எதுவும் கிடையாது. மீறி அனுப்பினால் அது குழந்தைகள் படிக்கும் பள்ளியிலிருந்து அவருக்கு வந்த அவசரத் தகவலாக மட்டும் தான் இருக்கும்.
அவசரத் தகவல் எல்லாம் தினமும் வருமா என்ன? ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வர வாய்ப்பிருக்கிறது. இப்படிப்பட்ட அவசரத் தகவல் வந்தால் மட்டும் நானும் அவசரமாகப் படித்து விடுவேன்.
மேனேஜினி!கேள்விப்படாத வார்த்தை பிரயோகம்!பலே!
விஸ்வநாதன்