இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்த வேட்பாளர் போலக் கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருந்த இகவின் அருகில் வந்தாள் மனைவி.
“என்னங்க, ஏன் இப்டி டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர்ல எதையோ லவட்டிக்கிட்டு வந்தவன் மாதிரி ‘ழே’ன்னு முழிச்சுட்ருக்கீங்க..? என்னாச்சு..?”
கையிலிருந்த ஏடிஎம் கார்டைக் காட்டினான் இக. “இதைப் போட்டு பணம் எடுக்கலாம்னு போனேன்டி. மிஷின் பணம் தரமாட்டேன்னுடுச்சு.”
“மிஷின்ல பணம் இருந்திருக்காது. வேற ஏடியெம் போக வேண்டியதுதானே..?”
“எனக்குத் தெரியாதா..? நாலஞ்சு ஏடியெம்ல ட்ரை பண்ணேன். எல்லாமே ‘ஸாரி’ன்னு கை விரிச்சிடுச்சுடி…”
“அப்ப, உங்க அக்கவுண்ட்ல பேலன்ஸ் இருந்திருக்காது…” சிரித்தாள் மனைவி.
Add Comment