Home » எனதன்பே எருமை மாடே – 3
எனதன்பே எருமை மாடே தொடரும்

எனதன்பே எருமை மாடே – 3

3. எல்லோரும் நல்லவரே

பொதுவாக அறிவுரை வழங்குவதென்றால் மக்களுக்கு மிகவும் பிடிக்கும். சிலர் நாம் கேட்கும் போது வழங்குவர். அப்படியான சந்தர்ப்பங்களில் வழங்கப்படும் அறிவுரைகள் நமக்குப் பிடிக்காவிட்டாலும் அவர்கள் மீது நாம் கோபப்படுவதில்லை. கேட்டதற்குக் கிடைத்த பலன் என்று சகித்துக் கொள்வோம். ஆனால் நாம் கேட்காமலே அறிவுரை வழங்குபவர்களே அதிகம். அவர்கள் மீது கோபம் வெறுப்பு போன்ற உணர்ச்சிகள் வருவது இயல்பு. ஆனாலும் நமக்கு வரும் கோபத்தினாலோ அல்லது வெறுப்பு உணர்ச்சியினாலோ பாதிக்கப் படுவது நாமே.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் எம்மால் அறிவுரை சொல்பவரின் வாயை அடைக்கும் படியான பதில் சொல்ல முடியாது. காரணம் இப்படி அறிவுரை வழங்கும் பரோபகாரிகளில் பலர் நமக்கு வேண்டியவராகவோ அல்லது மூத்த குடும்பத்து உறவினராகவோ இருப்பார்கள்.

இப்படியான தேவையற்ற அறிவுரைகள் கிடைக்கும் போது நாம் எருமை மாட்டின் மேல் மழை பெய்வது போன்ற நிலையைக் கடைப்பிடிக்க வேண்டும். வேண்டப்படாதவராக இருந்தாலும் அறிவுரை வழங்குபவரை வன்சொற்களால் தாக்கும் நோக்கம் அறவே இருக்கக் கூடாது. அவர் சொல்வதை நாம் கேட்டு நடக்கப் போவதில்லை. ஆகவே வன்சொற்களை உதிர்ப்பதால் நமக்குக் கிடைக்கப் போகும் கெட்ட பெயரை வாங்கிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அத்துடன் ஒருவர் மீது கடுமையான சொற்களை நாம் பயன் படுத்தும் போது நாமும் தேவையில்லாத மன உளைச்சலுக்கு உள்ளாவோம். அதனால் நமக்கு எவ்வித பிரயோசனமும் இல்லை. ஆகவே எப்படி நமக்குக் கிடைக்கும் இலவச அறிவுரைகளை எதிர் கொள்ளலாம் என்று பார்ப்போம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!