Home » கேம்லின் தாத்தா
ஆளுமை

கேம்லின் தாத்தா

சுபாஷ் டண்டேகர்

எழுபதுகளிலும் எண்பதுகளிலும் பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் மறக்க முடியாத விஷயம் ஒன்று உண்டென்றால் அது செவ்வக வடிவிலான மஞ்சள்நிறப் பெட்டி தான். அந்தத் தகரப்பெட்டியில் உள்ள பொருட்கள் சில. காம்பஸ், கவராயம் எனச் சொல்லப்படும் டிவைடர், கோணங்களை அளக்க உதவும் பிளாஸ்டிக் அளவீடுகள் (கோணமானி) இரண்டு. இது தவிர ஒரு சின்ன ஸ்கேல். மிகக்கூராகச் சீவப்பட்ட ஒரு பென்சில். ஒரு அழி ரப்பர். லப்பர் என்று தான் மாணவர்கள் சொல்வார்கள் அதை. பென்சில் தீட்ட உதவும் ஒரு ஷார்ப்னர். இவற்றில் காம்பஸ் தவிர மற்றவை அதிகம் உபயோகப்படுத்தப்படாதவை என்பதே உண்மை. ஆனாலும் இந்தச் சிறிய பெட்டி கொடுக்கும் பெருமிதம் சொல்லித் தெரியாது. பரீட்சை ஹால்களில் முதலில் எடுத்து வெளியில் வைக்கப்படும் பொருள் இது. அது தான் கேம்லின் ஜியாமெட்ரி பாக்ஸ்.

இந்தப் பெயரும் அந்தப் பெட்டியும் உடனடியாக நம்மைப் பால்யகாலத்திற்குக் கடத்திச் செல்லும் தன்மையுடையவை. இது மட்டுமல்ல…. அந்தக் காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கக்கூடிய இன்னொரு பொருள் கேம்லின் இங்க் பாட்டில். ஒரு இங்க் பில்லரில் அதை உறிஞ்சி பேனாவில் மெதுவாக அதைப் பாய்ச்சி விட்டு விரல்களில் ஒட்டி இருக்கும் மையைப் பின்னந்தலையிலும் நிஜாரின் பின்னாலும் தடவிக் கொள்ளாத சிறுவர் சிறுமியர் கிடையாது. இந்த இரண்டு பொருட்களையும் தயாரிக்கும் நிறுவனம்தான் கேம்லின்.

“ஜியாமெட்ரி பாக்ஸ் வைத்திருந்தால் பெரிய வகுப்புக்கு வந்துவிட்டோம் என்ற லேசான கர்வம் நமக்குள் வந்துவிடும்” என்கிறார் சிந்துஜா. “அந்தக் காம்பஸ், அதில் உபயோகிக்கும் மிகச் சிறிய பென்சில், அதைக் கூராக்கிக் கூராக்கி கடைசி வரை பயன்படுத்துவதில் ஒரு அலாதி இன்பம். அந்தச் செட் ஸ்கொயரை எதற்குப் பயன்படுத்துவது என்றே பல சமயம் தெரியாது. அந்த அரையடி ஸ்கேல் தொலைந்து போனால் அதை உபயோகப்படுத்துவோம். மற்றபடி அந்தப் பாக்ஸை இப்பொழுது நினைத்தாலும் மிக இனிமையான நினைவுகள் வந்துவிடும்”.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!