Home » சிபில் ஸ்கோர் : நவீன சித்ரகுப்தன் பேரேடு
நிதி

சிபில் ஸ்கோர் : நவீன சித்ரகுப்தன் பேரேடு

சிபில் ஸ்கோரில் வெளிப்படைத்தன்மை இல்லை என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டியிருக்கிறார். இதனால், வாடிக்கையாளர்களின் கடன் விவரங்களில் குழப்பம் இருப்பதாக கார்த்தி பேசியிருக்கிறார்.

மனிதரின் பாவ புண்ணியக் கணக்குகளை சித்திரகுப்தன் குறித்துவைப்பதாக நம்பிக்கையுண்டு. சிபில் ஸ்கோர், அதன் நவீன வடிவம் எலாம். வங்கிகளும், நிதி நிறுவனங்களும் சிபில் ஸ்கோரை முன்னிட்டே கடன் வழங்குவது பற்றி முடிவு செய்கின்றன. ஆனால் அதன் சமச்சீரற்ற – வெளிப்படைத் தன்மையற்ற முறையினால் நடுத்தர வகுப்பு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது அவர் குற்றச்சாட்டு.

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது சிபில் [ Credit Information Bureau (India) Limited]. இந்நிறுவனம் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் அனைத்துக் கடன் தொடர்பான செயல்பாடுகளின் பதிவுகளைப் பராமரிக்கும் ஒரு கடன் தகவல் நிறுவனம் (Credit Information Company). வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள், தங்களது வாடிக்கையாளர்களின் கடன் தகவல்களை இந்நிறுவனத்திற்கு வழங்குகின்றன. (சமீபத்தில் டிரான்ஸ்யூனியன் சிபில் லிமிடெட் என்று பெயர் மாற்றமும் செய்யப்பட்டிருக்கிறது.)

இந்தத் தகவல்களின் அடிப்படையில் இந்நிறுவனம், கடன் தகவல் அறிக்கையினை மாதந்தோறும் வெளியிடுகிறது. வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் பெற்றிருக்கும் கடன் சார்ந்த மதிப்பெண்ணும் அளிக்கிறது. இந்தக் கடன் மதிப்பெண் இந்நிறுவனத்தின் சுருக்கப் பெயரோடு சேர்த்து சிபில் ஸ்கோர் என்று வழங்கப்படுகிறது. கடன் கேட்பவரின் சிபில் கடன் மதிப்பெண்ணே முதன்மைத் தகுதி. கடன் வழங்கும் வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், தங்களிடம் கடனுக்கு விண்ணப்பம் செய்வோரை சிபில் ஸ்கோர் அடிப்படையிலேயே பரிசீலிக்கின்றன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!