Home » ஆக்சிஜனும் ஓர் ஆழ் கடல் அரசியலும்
உலகம்

ஆக்சிஜனும் ஓர் ஆழ் கடல் அரசியலும்

வருடம் 2013. பேராசிரியர் ஆண்ட்ரூ ஸ்விட்மேன் தலைமையிலான குழு ஆய்வுப்பணிகளுக்காகக் கிளம்பியிருந்தது. அவர்கள் ஸ்காட்டிஷ் கடல் அறிவியல் சங்கத்தைச் சேர்ந்தவர்கள். அது உலகளவில் பெரிய, பழமையான கடல் ஆய்வு மையம். அவர்கள் சென்றிறங்கிய இடம், பசிபிக் பெருங்கடலின் கிளாரியன்-கிளிப்பர்டன் மண்டலம். ஹவாய்க்கும் மெக்சிகோவிற்கும் இடையில் இருக்கும் பரந்துபட்ட ஒரு கடலடி சமநிலம்.

அங்கு கோபால்ட், நிக்கல், மாங்கனீஸ் போன்ற தனிமங்கள் அதிக அளவில் கிடைப்பதால் பல நாடுகள் இப்பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகிறது. காரணம், இவை பேட்டரி தயாரிப்புகளுக்குப் பயன்படுத்தப்படுபவை.

கடலுக்கடியில் ஒளி புகமுடியாத, தோராயமாக 19,000 அடி ஆழத்தில் தங்கள் பணிகளைத் திட்டமிட்டிருந்தனர். ஆழ்கடலில் ஆக்சிஜன் எனப்படும் பிராணவாயுவின் அளவு எவ்வாறு குறைந்து கொண்டு போகிறது என்பது தான் ஆய்வின் நோக்கம். ஆனால் ஒவ்வொரு கிலோமீட்டராக அவர்கள் உள்ளே செல்லச் செல்ல அதன் அளவுகள் அதிகரித்துக்கொண்டே போனது.

இதைக் கவனித்த குழுவினர், ஆண்ட்ரூ ஸ்வீட்மேனுக்கு தகவல் தெரிவித்தனர். சற்று யோசித்த அவர், ஆக்சிஜன் அளவுகள் அதிகரிக்க வாய்ப்பேயில்லை. நமது கருவி தான் பழுதடைந்திருக்க வேண்டும். அவற்றை எடுத்து தயாரிப்பாளரிடம் அனுப்புங்கள் என்றார். அவர்களும் அப்படியே செய்தனர். அடுத்த அடுத்த வருடங்களில், சரிபார்க்கப்பட்ட கருவிகளைக் கொண்டு தொடரப்பட்ட ஆய்வுகளும் முன்பை போலவே அளவுகளைக் காட்டின. அவர்கள் அசரவில்லை, கருவிகள் மாற்றப்பட்டு சோதனை தொடர்ந்தது. மீண்டும் அதே மாதிரியான முடிவுகள். ஒருகட்டத்தில் விரக்தியடைந்த ஆண்ட்ரூ ஸ்விட்மேன், அந்த சென்சரை எடுத்துத் தூரப்போடுங்கள். இது தேறாது. நாம் புறப்படுவோம் என்றார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்