பலருக்கும் குளியல் அறையில்தான் பாட வரும் என்று கேலியாகச் சொல்லுவார்கள். ஆனால், உண்மையிலேயே கழிப்பறையில் இருந்த போது தோன்றிய யோசனையானது இன்று பெரிதும் புகழப்படும் ஒரு செயலியாக வளர்ந்திருக்கிறது. அதைப் பற்றிப் பார்க்கலாம்.
ஆப்பிள் நிறுவனம் ஒவ்வோர் ஆண்டும் ஐபோனில் அதிகமாகப் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளின் பட்டியலை வெளியிடுவார்கள். அப்படி 2024ஆம் ஆண்டு இந்தியாவில் பதிவிறக்கம் செய்யப்பட்ட இலவசச் செயலிகளில் முதலாவது வந்த பெயரைப் பார்த்து ஆச்சரியப்பட ஒன்றுமேயில்லை – அது வாட்ஸ்அப். ஆனால் முதலாவதாக வந்த கட்டணச் செயலி எது தெரியுமா?
தைவானில் உருவாக்கப்பட்ட “ஃபாரஸ்ட்” (Forest: Stay Focused) செயலி. இந்த ஓர் ஆண்டு மட்டுமல்ல, வெளிவந்த 2016ஆம் ஆண்டிலிருந்து பல ஆண்டுகளாக 157 நாடுகளில் கட்டணச் செயலிகள் வரிசையில் அதிகமாகப் பதிவிறக்கம் செய்யப்பட்டதாக இருக்கிறது. கொரியாவின் பிரபலமான கே-பாப் இசைக்குழுவான பி.டி.எஸ் (BTS) உறுப்பினர்கள் இந்தச் செயலியின் விசிறிகள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
Add Comment