காஸா பகுதியில் தாக்குதலுக்கு முன்பு உடனே வெளியேறும்படி எச்சரிக்கும் பேம்ப்லட்களை விமானம் மூலம் தூவி தாங்கள் விதிப்படி நடப்பதாக காட்டிக் கொள்ள முயல்கிறது இஸ்ரேல். எங்கும் பாதுகாப்பில்லை. எல்லா இடத்திலும் குண்டு விழுகிறது என்பதே உண்மை. “வெளியேறாவிட்டால் நீங்களும் தீவிரவாதத்துக்கு துணை நின்றவர்களாகக் கருதப்படுவீர்கள” என்ற மிரட்டல் இருப்பதால் திரளான மக்கள் கிளம்பி பல மைல் தூரம் நடந்து வெளியேறுகிறார்கள்.
யவ்முன் எல்சையித் என்ற பெண் காஸாவில் பத்திரிகையாளராகப் பணியாற்றுகிறார். வெளியறும் அனுபவத்தை இப்படி விவரிக்கிறார். “உடைமைகள் அனைத்தையும் இங்கேயே விட்டுவிட்டு பல கிலோமீட்டர்கள் நடைப்பயணமாகச் செல்லவேண்டும். நாங்கள் சரணடைகிறோம் என்பதைச் சொல்லும் படி இரண்டு கைகளையும் உயர்த்தி அடையாள அட்டையைக் காண்பிக்க வேண்டும். ஏற்கெனவே இப்படி எச்சரிக்கையைப் பார்த்து வெளியேறும்போது குண்டுவீசித் தாக்கப்பட்டு மக்கள் இறந்ததை டி.வி.யில் பார்த்திருப்பீர்கள். அந்தப் பிணங்கள் வழிதோறும் அப்படியே சிதறிக் கிடக்கின்றன. யாரும் அதை அப்புறப்படுத்த முடியவில்லை. பறவைகளும் விலங்குகளும் பிணத்தைத் தின்னும் காட்சிகளைக் கடந்து குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டும். ஹமாஸை அழிப்பது இஸ்ரேலின் நோக்கமல்ல. அவர்கள் செய்வது இனப்படுகொலை. முந்தைய எல்லாத் தாக்குதல்களை விடவும் இஸ்ரேல் இந்த முறை மிகக் கொடூரமாகச் செயல்படுகிறது”.
Add Comment