முதல்நிலைத் தேர்விற்குப் படிப்பதைத் தெரிந்துகொண்டால் முதன்மைத் தேர்வு தன்னால் வசமாகிவிடும். எனவே முதல்நிலைத் தேர்விற்கு படிப்பது எப்படி என்று பார்ப்போம்.
ஆண்டுத் திட்டம் விட்டதுமே இந்த மாதத்தில் தேர்வு வரப்போகிறது என்பது தெரியும். ஆனாலும் அறிவிப்பு வந்த பிறகே படிக்க ஆரம்பிப்போம். தேர்வுத் தேதி வரைதான் படிப்போம். இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட ஒருசில மாதங்கள் அவ்வளவு முக்கியமானது. வெடிக்கப்போகும் பட்டாசு நமத்துவிடாமல் கதகதப்பாக இருக்க வேண்டிய காலம். வெடிக்கப் போகும் வண்ண வாணவேடிக்கையின் கனவோடு இருக்க வேண்டும்.
எல்லாத் தேர்விற்கும் அடிப்படை, பாடநூல் கழகத்தின் சமச்சீர் புத்தகங்கள் தான். அதை முதலில் சேகரித்து வைக்க வேண்டும். கல்லூரி முடித்ததும் இருபத்தொரு வயதில் வேலைக்கு வந்துவிடும் திட்டமிட்ட இளைஞர்கள் தங்கள் பாடப் புத்தகத்தையே சேர்த்து வைத்திருப்பார்கள். இது முப்பது வயதிற்கு மேல் படிக்க வருபவர்களுக்கானது.
Add Comment