குரூப்-II-ற்கு கல்வித் தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். எந்த டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். குரூப்-II-ற்கு வயது வரம்பு கிடையாது. ஆனால் மூன்று நிலைகளில் தேர்வுகள் நடக்கும். அவைகள் முறையே முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு.
முனிசிபல் கமிஷனர், உதவி வணிகவரி அலுவலர், மண்டல வருவாய் அலுவலர், சார்பதிவாளர், கூட்டுறவு சார்பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உதவி லேபர் ஆஃபீசர் போன்ற பணியிடங்கள் பெரும்பான்மை மக்களுக்குத் தெரிந்த கவர்ச்சிகரமான குரூப்-II உயர் பதவிகள். இதில் ஏதேனும் ஒரு பணியிடத்தைப் பெற்றுவிட்டால் அடுத்தடுத்த பதவி உயர்வுகள் எளிதாக அமைந்து விரைவில் குரூப்-I நிலையை எட்டிவிடலாம். அதனால்தான் இப்பதவிகளுக்கு மூன்று நிலை தேர்வுகள் இருக்கின்றன.
Add Comment