நவரத்தினங்களால் ஜொலிக்கும் பேரரசர் அக்பரின் அவை. அங்கிருந்தோரின் செவிகள் அதுவரை ருசித்திராத ஓர் இசை விருந்தை நுகர்ந்து கொண்டிருந்தன. அவர்தம் விழிகள் நிகழவிருக்கும் ஓர் அற்புதத்தை எதிர்நோக்கி. இசையரசர் தான்சேனின் தீப் ராகம், அங்கிருந்த அலங்கார விளக்குகளில் சுடரேற்றிய தருணத்தில் அவர்களெல்லாம் எத்தகையதோர் உணர்வு நிலையை அடைந்திருப்பர்? ‘
ஐந்நூறு ஆண்டுகளைக் கடந்து இரண்டாயிரத்து இருபத்து நான்காம் ஆண்டிற்கு வாருங்கள். டோக்கியோ நகரம். ஆசீர்வதிக்கப்பட்ட ஆயிரத்து நூறு பேர் மட்டுமே அந்த அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். திருத்தமாய் அலங்கரிக்கப்பட்டிருந்த மேடை. நடுநாயகமாய் நாவலரசர் முரகாமி. தனது இடது காலைத் தூக்கி வலது கால் மேல் போட்டு அவர் அமர்ந்திருந்த தோரணை காண்போரை வசீகரிப்பதாயிருந்தது. அந்த அரங்கிலிருந்தவர்களின் அகவுணர்வு, தான்சேன் நிகழ்த்திய அற்புதத்தைக் கண்ணுற்றோரின் அகவுணர்வை ஒத்திருந்தது.
அந்த வாசிப்பு நிகழ்விற்கெனப் பிரத்தியேகமாகப் பத்து நாள்கள் முன்பு எழுதிய சிறுகதையை முரகாமி தன் குரலிலேயே வாசிக்கத் தொடங்கினார்.அவரது குரலில் ஜனித்த வார்த்தைகள் அரங்கை வசியம் செய்யத் தொடங்கின. இதற்குத் தயாராக வந்திருந்த அவரது ரசிகர்கள் இன்னதென்று சொற்களில் விவரிக்க இயலாத ஓர் உயர் உணர்வு நிலையில் மிதக்கத் தொடங்கினர்.
“ஓவர் பில்டப்பா இருக்கே….?” நீங்கள் முரகாமியை வாசித்திராவிடின் இவ்வாறுதான் எண்ணத் தோன்றும். ஒருமுறை முரகாமியின் மாய உலகுகிற்குள் நீங்கள் சென்றுவிட்டால் இது மிகையல்ல என்று ஏற்றுக் கொள்வீர்கள். எப்படி நிகழ்கிறது இந்த மாயம்?
மிகச்சசிறப்பான கட்டுரை.
இந்த ஆளுமை பகுதியில் ஒரு தமிழ் எழுத்தாளரை இந்தளவு சிலாகித்து எழுதப்பட்ட கட்டுரையை இதுவரை பார்க்கவில்லை ஏனோ?
ஜெயகாந்தனோ, அசோகமித்திரனோ , கி. ரா வோ, புதுமைபித்தனோ , எஸ். ராமகிருஷ்ணனோ , ஜெயமோகனோ ஹாருகி முரகாமியின் அழகியலுக்கு நிகரானவர்கள்.
ஆளுமைக்கு கூடும் கூட்டம் தான் அளவீடெனில் தமிழ் எழுத்தாளர்கள் சபிக்கப்பட்டவர்கள்.