Home » போரின்றி அமையாது இஸ்ரேல்
உலகம்

போரின்றி அமையாது இஸ்ரேல்

ஹசன் நஸருல்லா

ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹஸன் நஸருல்லா கொல்லப்பட்டிருக்கிறார். லெபனானின் தலைநகரான பெய்ரூட் மீது செப்டம்பர் 28ஆம் தேதி இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். “எங்கள் நீண்டகால எதிரி கொல்லப்பட்ட பிறகு, உலகம் பாதுகாப்பான, வாழத் தகுந்த இடமாக மாறியிருக்கிறது” என்கிறார் இஸ்ரேலின் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகரி. உண்மையில் இதற்குப்பிறகு தான் பயப்பட ஆரம்பித்திருக்கிறது உலகம்.

இஸ்ரேலின் பல கட்டத் திட்டமிட்ட தாக்குதல் இது. எப்போதும் திரையில் மட்டுமே தோன்றும் ஹசருல்லாவைக் கொல்லக் குறிவைப்பதென்றால் சும்மாவா? முதலில் லெபனான் மக்கள் புதிதாக உபயோகிக்கத் தொடங்கியிருந்த பேஜர்கள் வெடித்தன. அடுத்தது ஆயிரக்கணக்கான வாக்கி-டாக்கிகள் வெடித்தன. இணையம், செயற்கைக்கோள் வரை இவர்கள் ஊடுருவ முடிந்தவர்கள். தொலைத் தொடர்பு சாதனங்களை உபயோகிக்க முடியாமல் போனது. இந்த நிலையில் லெபனானுக்குள் நுழைய இஸ்ரேலின் தரைப்படை தயாரானது. இதைத் தடுக்கும் வழிகளை ஹிஸ்புல்லா ஆலோசித்தேத் தீர வேண்டும். நேரில் சந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை. நேரம் பார்த்து தலைநகர் பெய்ரூட்டின் தெற்கிலுள்ள தாஹிர் பகுதியில், ஹிஸ்புல்லாவின் தலைமையகம் தாக்கப்பட்டது.

புஸ்வாணத்தை வரிசையாக வைத்துவிட்டு, ஒன்றன்பின் ஒன்றாக தீபாவளிக்குக் கொளுத்துவோமே? அது போலத் தான் வெடித்தன தாஹிரிலுள்ள அடுக்குமாடிக் கட்டடங்கள். ஒரே தெருவில் அடுத்தடுத்திருந்த கட்டடங்கள் வெடிக்க, ஒவ்வொன்றும் சாம்பல் நிறக் காளான் புகையாக மேலெழும்பியது. கட்டடக் குவியலோடு உள்ளிருந்தவர்களும் நொறுங்கினர். வான் தாக்குதலைக் கூட எதிர்பாராமலா ஹிஸ்புல்லாவின் தலைவர் பாதுகாப்பாகத் தங்கியிருப்பார்? இல்லை. அவர் இருந்தது என்னவோ, அடுக்குமாடியின் கீழ்தளத்திலிருந்த பதுங்கு குழியில் தான். ஆனால் அதுவரைக்கும் பாய்ந்து தாக்குமளவு, பிரத்யேக குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளது இஸ்ரேல். ஒரு டன் எடையுள்ள இந்தக் குண்டுகள், ஆறு மீட்டர் கான்கிரீட்டையும் துளைத்து தாக்கக்கூடியது. இதுபோன்ற எண்பத்தைந்து குண்டுகள் இந்தக் காரியத்தைச் செய்து முடித்துள்ளன. இவை மக்கள் குடியிருப்பு பகுதிகளில் தடை செய்யப்பட்டிருப்பவை. இதுவரை இஸ்ரேல் எந்த தடையை மதித்திருக்கிறார்கள்?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!