Home » டயட் எப்படி தோன்றியது?
வரலாறு முக்கியம்

டயட் எப்படி தோன்றியது?

உணவு என்பது தவிர்க்க இயலாதது. உயிர்வாழப் பிறந்த எவரும் உணவில்லாமல் இருக்க முடியாது. ஏனெனில் உடலுக்குத் தேவையான, இயங்குவதற்குத் தேவையான சக்தி உணவில் இருந்தே கிடைக்கிறது. உடல் எப்போதும் வளரவும், இயங்கவும் காரணமான வளர்சிதை மாற்றத்திற்கான சக்தி உடல் ஏற்றுக் கொள்ளும் உணவிலிருந்தே பெறப்படுகிறது. உடலுக்குக் கிடைக்கும் சக்திதான் உடல் இயங்கவும், அதன் ஆதாரமான மூளை இயங்கவும், சிந்திக்கவும், பாடல் கேட்கவும், கிரிக்கெட் விளையாடவும், இசை பயிலவும் உதவுகிறது. காதடைக்கும் அளவுக்குப் பசி இருக்கும் போது, எவராவது இசை கேளேன், கிரிக்கெட் விளையாடேன் என்றெல்லாம் நமக்கு அறிவுரை வழங்கினால் நமக்கு எப்படிப் பற்றிக் கொண்டு வரும்? எனவே உடல் இயங்க ஆதாரம் உணவு. இதே உணவு உடலுக்குப் பிரச்னை ஆகுமா? ஆகும்.

ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி கேள்விப்பட்டிருக்கிறோமல்லவா? உடல் இயங்கவும், அதன் ஆதாரமான சிந்தனை சீராக இருக்கவும் அடிப்படைத் தேவையான உணவு மிகும் போது, அதற்கும் எதிர் வினையை உடல் செய்கிறது. உடல் எடை கூடுகிறது. நடந்தால் மூச்சு வாங்குகிறது. நீரிழிவு நோய் வருகிறது. உடல் திணறுகிறது. சகலமும் பாதிக்கிறது. மருத்துவரிடம் போனால் உணவை அளவோடு உண்ணுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள் என்கிறார்.

இப்படி அதிக உணவு பிரச்னையாகிறது என்று மனிதன் அறிந்து கொண்டது எப்போது? உணவை முறைப்படுத்தி உண்ணும் முறையாகிய டயட் என்னும் உணவுக்கட்டுப்பாடின் மூலம் நோய்களைக் களைய அல்லது குறைக்க முடியும் என்ற சிந்தனை எழுந்தது எப்போது? டயட் என்னும் உணவுக் கட்டுப்பாட்டின் கதை, வியப்பான செய்திகள் அடங்கியது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!