நடிகர் அஜித் கலந்துகொண்ட துபாய் கார் ரேஸ் குறித்து நாம் அறிவோம். கடந்த ஜனவரி 7 ஆம் தேதி அதே துபாயில் சரித்திர முக்கியத்துவம் கொண்ட வேறொரு சம்பவம்...
வணக்கம்
மெட்ராஸ் பேப்பர் தொடங்கிப் பதினொரு மாதங்கள் நிறைவடைந்து, பன்னிரண்டாவது மாதத்தில் அடியெடுத்து வைக்கிறோம். கண்மூடித் திறப்பதற்குள் ஓராண்டு நிறைந்துவிடும். ஒரு புறம் மகிழ்ச்சியாக உள்ளது. இன்னொருபுறம், நூற்றாண்டைத் தொட்டுக் கடந்த பத்திரிகைகளை எண்ணிப் பார்த்துப் பணிந்து நிற்கத் தோன்றுகிறது.
பத்திரிகை என்பது விளையாட்டல்ல. சீரான தரம், நீடித்த வாசகர் உறவு, படிப்படியான வளர்ச்சி இருந்தால் போதும் என்று எண்ணித்தான் தொடங்கினோம். கூடுதல் இலக்காக ஒன்றே ஒன்று சேர்ந்தது. தமிழில் புதிதாக எழுத வருவோருக்கு ஒரு பரந்துபட்ட களமாக இந்த இதழ் இருக்க வேண்டும் என்பதே அது. உண்மையில் நமது மகிழ்ச்சியின் ஆதாரப் புள்ளியாக அதுவே ஆகிப் போனது. மெட்ராஸ் பேப்பரில் நீங்கள் வாரம்தோறும் படிக்கும் எழுத்தாளர்களில் பெரும்பான்மையானவர்கள் எழுத்துக்குப் புதியவர்கள். எழுதப் பயிற்சி பெற்று எழுத வந்தவர்கள். தமது ஆர்வத்தாலும் அக்கறையினாலும் இடைவிடாத முயற்சியினாலும் இன்று தேர்ந்த எழுத்தாளர்கள் ஆகியிருக்கிறார்கள்.
பெரும்பாலும் கேளிக்கை சார்ந்த செய்திகளாலும் கட்டுரைகளாலும் துணுக்குகளாலும் தமிழ் வார இதழ்கள் ஒரே முகம் காட்டத் தொடங்கி, அதனாலேயே சரிய ஆரம்பித்த சமயத்தில் ஆழமான சர்வதேசப் பிரச்னைகளையும் சமூகப் பிரச்னைகளையும் தொட்டுப் பேசும் இதழாக மெட்ராஸ் பேப்பர் வெளிவரத் தொடங்கியது. உலகெங்கும் பரவி வசிக்கும் நமது எழுத்தாளர்களும் செய்தியாளர்களும் அந்தந்தப் பிராந்தியத்தின் மக்களை பாதிக்கும் பிரச்னைகளை விரிவாக விளக்கி எழுதினார்கள். தமிழர்கள், இந்தியர்கள், அயல்நாட்டு மக்கள் என்று ஒரு வசதிக்குச் சொல்லிக்கொள்கிறோம். உண்மையில் மனித குலத்தை பாதிக்கும் பிரச்னைகள் என்பவை எப்போதும் எங்கும் பொதுவானவையே அல்லவா?
ஓர் இணையப் பத்திரிகையை சந்தா செலுத்தி வாசிக்கும் வழக்கம் அநேகமாக யாருக்கும் இராது என்று இதனைத் தொடங்கும்போது பலபேர் எச்சரித்தார்கள். அச்சிதழ்களாகப் பல்லாண்டுகளாக வெளி வந்துகொண்டிருக்கும் சிலவற்றின் ஆன்லைன் எடிஷன்களுக்கே அயலகச் சந்தாதாரர்கள் குறைவு என்றும் சொன்னார்கள். இந்த உலகில் ஒரு குண்டூசியைக் கூட நீங்கள் விலையின்றிப் பெற இயலாது என்னும்போது ஒரு பத்திரிகையை அவ்வாறு வாசிக்கத் தருவது கூட்டம் சேர்க்க உதவுமே தவிர, கூர்ந்த வாசகர்களை உருவாக்காது என்று கருதினோம். அதனால்தான் மிகக் குறைந்ததொரு சந்தாவினை நமது இதழுக்கு நிர்ணயித்தோம்.
இதழ் பிடித்துப் போனால் ஒவ்வொரு வாசகரும் தம்மால் இயன்ற அளவுக்குப் புதிய சந்தாதாரர்களைக் கொண்டு வந்து சேர்ப்பார்கள் என்று மனப்பூர்வமாக நம்பினோம். அந்நம்பிக்கையே இன்றுவரை எங்களை இலக்கை நோக்கிச் செலுத்திக்கொண்டிருக்கிறது.
வாசகர்களாகிய உங்களிடம் நாங்கள் அன்போடு வேண்டுவது இதனைத்தான். இதழைக் குறித்த உங்கள் கருத்துகளை வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ளுங்கள். அது நமது பத்திரிகை இன்னும் சிறப்பாக வெளிவர உதவும். உங்களுக்குப் பிடித்த இப்பத்திரிகையை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து அவர்களையும் சந்தாதார்களாக்குங்கள். அது இந்தப் பத்திரிகை நீடித்து வெளிவர உதவும்.
கோப்பைப் புயல்
பின்னணிப்பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார். நாற்பது வருடங்களுக்கும் மேலாக, மூன்று தலைமுறைகளுக்கு இசையை வழங்கிய அவரது குரல் காற்றோடு கலந்தது...
புயலுக்கு அப்பால்
ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். 1971 கிறிஸ்துமஸ் தினத்தன்று அன்றைய கனேடியப் பிரதமர் பியேர் ட்ரூடோவிற்க்கு ஒரு மகன் பிறந்தார். அவர்தான்...
‘தம்பி, அக்கா ரோஸ்மில்க் வாங்கித் தரேன்டா’ என்று சொல்லிக் காரியம் சாதிப்பதெல்லாம் பூமர்கள் காலம். ஆரஞ்சு, நீலம், இளம்பச்சை எனப் பல...
சக்கரங்கள் இல்லாமல் ஓடு தளத்தில் சிராய்த்து கொண்டே சென்ற ஒரு விமானம் அங்கிருந்த ஒரு சுவரின் மீது மோதி வெடிக்கிறது. 179 பேர் இறந்துவிட, இருவர் மட்டும்...
ஈத் மீலாத் மஜீத்! சிரியாவில் கூறப்படும் கிறிஸ்துமஸ் வாழ்த்து. மின் விளக்குகளாலான கிறிஸ்துமஸ் மரத்தின் உச்சியை அலங்கரிக்கிறது ஒரு நட்சத்திரம்...
நுட்ப பஜார்
பலருக்கும் குளியல் அறையில்தான் பாட வரும் என்று கேலியாகச் சொல்லுவார்கள். ஆனால், உண்மையிலேயே கழிப்பறையில் இருந்த போது தோன்றிய யோசனையானது இன்று பெரிதும்...
தொடரும்
1 மிதப்பு எக்மோர் ஸ்டேஷனின் பிரதான வாயில் எதிரில் சவாரியை இறக்கிவிட்டுக் கிளம்பப் பார்த்த டிரைவரிடம், இடதுகாலைத் தார் ரோட்டிலும் வலதுகாலைப் பெடலிலும் வைத்தபடி, ‘பார்சல் புக்கிங் எங்க’ என்று கேட்டான், முரட்டுக் கதர் குர்த்தாவும் அதற்கு சம்பந்தமேயில்லாத டிராக் ஸூட்டும் அணிந்திருந்த அவன். பெரிய ஆள்...
139. பையனா? பொண்ணா? விமானப் பயணத்தின்போதே, இந்திராதான் அடுத்த பிரதமர் என்பதை முடிவு செய்துவிட்டார் காமராஜ். ஆர்.வெங்கட்ராமனிடம், “அந்த அம்மாவுக்குப் பல உலக நாடுகளின் தலைவர்களைத் தெரியும்! அவங்க அப்பாவோட இந்த நாடு முழுக்கவும், இந்தியாவுக்கு வெளியிலயும் நிறைய பயணம் செய்திருக்காங்க! சுதந்திரப்...
ஏரிகளை நிறைக்கும் கண்ணீர் கிளிமஞ்சாரோ மலை. பூமத்தியரேகையை ஒட்டிய கடற்கரை. பசுமையான சமவெளிப்பகுதி. அடர்ந்த காடுகள். ஆழமான ஏரிகள். இவை உள்ள, தான்சென்யகா உள்ளடக்கிய பகுதியே தான்சேனியா. உங்கள் கண்களுக்குப் பச்சைப்பசேலென்ற அழகான நாடு. ஆனால் மக்கள் தொகையில் பாதிக்கு மேல் குடிநீர் இன்றி அலைகிறார்கள். ஒரு...
x. அமெரிக்கா பல நாட்டவரின் திறமைகளை உள்வாங்கி ஊக்குவிக்கும் அமெரிக்கா, பல நாடுகளின் சண்டைக்கலைகளையும் பாராட்டி ஊக்குவித்து வளர்த்தது. ஜப்பானிய, கொரிய, சீன, பிலிப்பைனிய சண்டைக்கலைகளை உள்வாங்கி அதில் அப்படியே தேர்ச்சி பெற்றும், அமெரிக்கப் பயிற்சிக்கு ஏற்றபடி அவற்றை மாற்றி வடிவமைத்தும் தன்...
10. இடுக்கண் வருங்கால் நகுக “இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்ப தில்.” இது திருக்குறள் 621. இதன் மூலம் திருவள்ளுவர் சொல்ல வருவது என்னவென்றால். துன்பம் வரும் வேளையில் மகிழ்வுடன் இருக்க வேண்டும். அதுவே அத்துன்பத்தை வெல்வதற்கான சிறந்த வழியாகும் என்பதே. இதற்குப் பதில் சொல்வது போலக்...
பூசலார் கதை கம்ப்யூட்டர்களின் மெமரி அதிகரித்துவிட்டது. ஸ்மார்ட்ஃபோனில் கூட 256 ஜீபி சாதாரணமாகிவிட்டது. ஆனால் நமக்குத்தான் எல்லாமே மறந்துபோகிறது. சென்ற தலைமுறை நினைவில் வைத்துக்கொண்ட அளவில் பாதி கூட இப்போது நம்மால் இயல்வதில்லை. ”எத்தனை ஃபோன் நம்பர் உங்களுக்கு ஞாபகத்துல இருக்கு…?” என்று...