136. அண்டோனியா மைனோ காஷ்மீரிலிருந்து இந்திரா காந்தி டெல்லி திரும்பியதும், பிரதமர் சாஸ்திரியை சந்தித்தார். காஷ்மீரில் இருந்த நாள்களில் தனது செயல்பாடுகளை எல்லாம் பெருமையோடு விளக்கினார். தொடர்ந்து இந்தப் போரில் இந்தியா எப்படி வியூகம் வகுக்க வேண்டும் என்று ஆலோசனைகள் கூறும் ஓர் அறிக்கையை அவரிடம்...
வணக்கம்
மக்கள் புரட்சி என்றால் இப்படி இருக்க வேண்டும்.
சிறிதளவு வன்முறைகூட இல்லாமல், அகற்ற விரும்பிய அதிபரை அகற்றிக் காட்டியிருக்கிறார்கள் இலங்கை மக்கள். இனி வரப் போவது யார், என்ன செய்வார், எத்தகைய மாயம் நிகழும், அல்லது அப்படி ஏதாவது நிகழத்தான் செய்யுமா என்பதெல்லாம் பிறகு. இலங்கை மக்களின் இந்த அமைதிப் புரட்சி உலகுக்குச் சொல்லித் தரும் பாடம் இங்கே முக்கியமானது.
ஒருங்கிணைந்த நோக்கம், ஒருங்கிணைந்த செயல்பாடு இருக்குமானால் அமைதியான முறையிலேயே எந்த மலையையும் புரட்டலாம். எப்பேர்ப்பட்ட அராஜக ஆட்சியாளர்களையும் விரட்டி அடிக்கலாம்.
கவனியுங்கள். இது கட்சிகள் முன்னெடுத்த போராட்டமல்ல. இயக்கங்கள் நடத்திய புரட்சியல்ல. மக்கள் தீர்மானித்தது. தன்னியல்பாக அவர்களேதான் வீதிக்கு வந்து போராட ஆரம்பித்தார்கள். அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் பிறகு அவர்களோடு தம்மை இணைத்துக் கொண்டார்கள். இலங்கையின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவும் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கேவும் பதவி விலகிய அதிகாரபூர்வச் செய்தி இனி வரும்.
இது நிகழ்வதற்கு முன் நடந்த மொத்தச் சம்பவங்களையும் இந்த இதழில் ஸஃபார் அஹ்மத் காட்சிப்படுத்தியிருக்கிறார். கொழும்பு காலி முகத் திடலில் இருந்து புறப்பட்ட மக்கள் கூட்டத்துடன் பயணம் செய்து ஒன்பதாம் தேதி புரட்சி வெற்றி கண்ட கணம் வரை உடன் இருந்து பார்த்து எழுதியிருக்கிறார்.
இலங்கையில் கோட்டபாய ராஜபக்சவுக்குப் பதவி போகிறதென்றால் இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சன் பதவி விலகியிருக்கிறார். பொருளாதார மந்த நிலையில் சிக்கித் தவிக்கும் தேசத்தை மீட்க முடியாமல் தடுமாறிய ஜான்சன், மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்ததன் பின்னணியில் வேறு பல காரணங்களும் உள்ளன. அவற்றை விளக்கும் ந. ஜெயரூபலிங்கத்தின் கட்டுரையும், ஹாங்காங் இணைப்பின் இருபத்தைந்தாவது ஆண்டுக் கொண்டாட்டத்தை நிகழ்த்திய கையோடு சீனா மீண்டும் தைவானுடன் மல்லுக்கட்ட ஆயத்தமாவதன் வரலாற்றுப் பின்னணியை விவரிக்கும் பூவராகன் கட்டுரையும் இந்த இதழில் முக்கியமானவை.
சிறப்புப் பகுதி, முன்பே அறிவித்தது போல ‘டிவி சீரியல்களும் தமிழ்ப் பெண்களும்’. சுவாரசியம் மிக்க மூன்று கட்டுரைகள் இப்பகுதியில் இடம் பெறுகின்றன. கூடவே சிவசங்கரி வசந்தின் நகைச்சுவைக் கட்டுரை ‘டம்மி பீஸ் மார்க்கெட்’.
சிறப்புப் பகுதி சீரியல்கள் என்பதால் ‘வரலாறு முக்கியம்’ பகுதியில் தாலியைத் தொட்டிருக்கிறார் முருகு தமிழ் அறிவன். தாலி இல்லாமல் தமிழர் திருமணம் நடந்திருக்கிறது. ஆனால் தாலி இல்லாத சீரியல் ஏது?
கமெண்ட்ஸ் பகுதியில் இருந்த சில பிரச்னைகள் இப்போது முற்றிலும் தீர்க்கப்பட்டுவிட்டன. இனி நீங்கள் உங்கள் கருத்துகளை அந்தந்தக் கட்டுரையின் இறுதியிலேயே தெரிவிக்கலாம். மெட்ராஸ் பேப்பரின் ஒவ்வொரு இதழும் பெறுகிற கவனமும் வரவேற்பும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதழை உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். அவர்களையும் சந்தா செலுத்தச் சொல்லுங்கள். இது உங்கள் பத்திரிகை.
சிறப்புப் பகுதி: தமிழ் சீரியல்களும் தமிழ்ப் பெண்களும்
உலகெலாம்
சிந்திக்கலாம்
தொடரும்
ஸ்ரீராகவேந்திரருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில், மந்த்ராலயம். தமிழகத்தின் முக்கியமான நகரங்களான சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்றவற்றிலிருந்து மந்த்ராலயத்தை அடையப் பன்னிரண்டிலிருந்து பதினேழு மணி நேரம் வரை ஆகும். நேரடியாகப் போகும் ரயில்கள் குறைவாக இருப்பதால் மும்பை செல்லும் ரயில்களை நம்பியே இருக்க...
யாருடைய ‘கைவண்ணம்’? விரல் ரேகைத் தடயவியலுக்கு அறிமுகம் தேவையில்லை. ‘ஃபாரன்சிக்’ என்ற சொல்லைக்கேட்டவுடனே நமக்கு நினைவுக்கு வருவது அதுதான். எண்ணற்ற வழக்குகள் இத்தடயவியல் முறையினால் தீர்க்கப்பட்டுள்ளன. சங்கரராமன் கொலை வழக்கு, ஆட்டோ ஷங்கர் வழக்கு, சுவாதி கொலை வழக்கு, கோவை தொடர் குண்டுவெடிப்புகள் எனப்...
vii. ஜப்பான் தன்னுடைய மண்ணின் மணம் வீசும் அதிகமான சண்டைக்கலைகளைத் தன்னுள்ளே கொண்ட நாடு என ஜப்பானைச் சொல்லலாம். சீனாவின் குங்ஃபூ ஒன்றிலிருந்து பலவாகப் பிரிந்ததைப் போலவே, ஜப்பானிலும் ஒரு சண்டைக்கலையிலிருந்து மற்றொன்று, அதிலிருந்து இன்னொன்று எனப் பிரிந்தன. ஒவ்வொன்றும் மெருகேறிச் சென்றன. காப்பதைத்...
7. வாழ்ந்து காட்ட வேண்டுமா? எல்லோரும் நல்லவரே என்று நாம் அடிப்படையாகக் கருதுவது நமது மனநிலையை நல்ல நிலையில் பேணுவதற்கு நல்லது. ஆனாலும் அது உண்மை இல்லை என்பதனைச் சில பேர் நமக்குப் புரிய வைக்க வேண்டும் என்பதில் அதீத அக்கறை காட்டுவர். அவர்களது நோக்கம் நல்லதல்ல என்பது எமக்குத் தெளிவாகவே தெரியும் போது...
37. சலுகை வலைகள், சமாளிக்கும் வழிகள் குளிர் மிகுதியாக உள்ள நாட்களில் நாம் தடிமனான சட்டை போடுகிறோம். சில மாதங்களுக்குப்பின் குளிர் குறைந்து வெய்யில் கூடிவிட்டால், மெலிதான அரைக்கை சட்டைகளுக்கு மாறுகிறோம். அதேபோல், அலுவலகத்துக்கு அணிகிற சட்டை வேறு, நண்பர்களோடு கொண்டாட்டம் என்றால் இன்னொரு சட்டை, ஏதாவது...
அந்த மனசு இருக்கே… குட்டிச்சாத்தானால் கூடுவிட்டுக் கூடு பாய முடியும் என்று பார்த்திருந்தோம். ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த வல்லுநர் போலவும் குட்டிச்சாத்தானால் உருமாற முடியும். இந்த வசதியை நாம் பல்வேறு விதங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம். நமக்கு உதவும் ஓர் அவதாரமாக கு.சாத்தானை இன்று மாற்றவிருக்கிறோம்...
குளிர் நீரும் குடி நீரும் கிழக்கு ஆப்பிரிக்காவில் கிரின்யகா மலையோரம் இருக்கும் நாடு, கென்யா. கிரின்யகா என்றால் பளீரிடும் மலை என்று பொருள். பனி உறைவிடமான சிகரம் கொண்ட மலை. கென்யாவின் தலைநகர் நெய்ரோபி, நெய்ரோபி என்றால் குளிர்நீரின் உறைவிடம். அப்படிப் பட்ட கென்யாவில் தான் தீராத தாகம். கென்யா பல...