Home » Home 22-03-2023

வணக்கம்

சென்ற வாரம் மகளிர் தினச் சிறப்பிதழுக்கு நீங்கள் அளித்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியளித்தது. சென்ற இதழின் பல கட்டுரைகளின் சுட்டிகளை யார் யாரோ, யார் யாருக்கோ வாட்சப்பில் அனுப்பி வாசிக்கச் சொல்லிப் பரிந்துரை செய்திருந்தது தற்செயலாகத் தெரிய வந்தது. நமக்கே அப்படிச் சில forward குறுஞ்செய்திகள் வந்தபோது அம்மகிழ்ச்சி, மன நிறைவாக மலர்ந்து அமர்ந்தது. ஒரு பத்திரிகையின் வளர்ச்சி என்பது இத்தகைய வாசகர்களின் எண்ணிக்கை பெருகுவதில்தான் உள்ளது.

இந்த இதழில், கோகிலா எழுதியிருக்கும் ‘ஈழ அகதிகளும் ஓட்டை வாளி உதவிகளும்’ மிக முக்கியமான கட்டுரை. தமிழ்நாட்டில் உள்ள அகதி முகாம்களில் வசிக்கும் ஈழத் தமிழர்களின் தீவிரமான பிரச்னைகளைப் பேசுகிற இக்கட்டுரை, அரசு செய்ய வேண்டிய மிகச் சரியான நிவாரணம் எதுவென்பதையும் சுட்டிக்காட்டுகிறது.

இஸ்ரேல் என்றால் கலவரம், குண்டு வெடிப்பு, போர் என்று நம் மனத்தில் பதிந்து போயிருக்கும். இப்போதும் அங்கே கலவரம்தான். ஆனால் பல்லாண்டு காலப் பாலஸ்தீனியருடனான பிரச்னையல்ல விஷயம். இஸ்ரேலிய அரசாங்கம் புதிதாகக் கொண்டு வந்திருக்கும் சில நீதித் துறை சார்ந்த சட்டத் திருத்தங்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை உண்டாக்கியிருக்கின்றன. உள்நாட்டில் மட்டும்தானா என்றால் இல்லை. பல்வேறு உலக நாடுகளும் இஸ்ரேலைத் தொடர்ந்து கண்டித்து வருகின்றன. நட்புறவைத் துண்டித்துக்கொள்ளும் எல்லைக்கே சில தேசங்கள் சென்றிருக்கின்றன. மத அடிப்படைவாதிகளின் கைப்பாவையாகிவிட்டது இன்றைய இஸ்ரேலிய அரசு. அதற்கு அவர்கள் கொடுத்துக்கொண்டிருக்கும் விலையும் மிகப் பெரிதே. இஸ்ரேலின் இன்றைய இப்பிரச்னையின் வேர் வரை அலசி ஆராய்கிறது ஸஃபார் அஹ்மத் எழுதியிருக்கும் ‘இடியாப்பச் சிக்கலில் இஸ்ரேல்’.

பல்வேறு அரபு தேசங்களில் இன்று பெண்களின் நிலை எவ்வாறு உள்ளது? நஸீமா ரஸாக் எழுதியுள்ள ‘ஷேக்கம்மாக்களின் உலகம்’ அடிப்படைவாதம் ஆளும் தேசங்களில் வசிக்கும் நவீனகாலப் பெண்களின் வாழ்க்கையைப் படம் பிடிக்கிறது.

நம் நாட்டில் சமீபத்தில் நடந்த சில வட மாநிலத் தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. மோடியின் பல நிர்வாகத் தோல்விகள் தேசமெங்கும் பரவலான கண்டனங்களைப் பெற்றாலும் தொடர்ந்து அவர்களால் எப்படித் தேர்தல்களில் மட்டும் வெற்றி காண முடிகிறது? அலசுகிறது பாண்டியராஜனின் கட்டுரை.

பெண்களுக்கான மாதவிடாய்க் கால விடுப்பு ஸ்பெயினில் சட்டபூர்வமாகியிருக்கிறது. வேறு பல நாடுகளில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளதுதான் இது. ஆனால் இந்தியாவில் இன்னும் இல்லை. இங்கே அது நடக்குமானால் அது பெண்களுக்கு சாதகமாக இருக்குமா, சுமையை மேலும் கூட்டுமா என்று வினுலா எழுதியுள்ள கட்டுரை ஆராய்கிறது.

இந்த இதழில் நீங்கள் பொருட்படுத்தி வாசிக்க இன்னும் பல அருமையான கட்டுரைகளும் உள்ளன. படித்துவிட்டு உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.

விருந்து

நம் குரல்

மறக்கக் கூடாத பிரதமர்

பணத்தின் மதிப்பை அறிந்த ஒரே இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங். இந்தியாவின் பிரதமராக இருந்தோரைப் பட்டியலிட்டால் நேருவுக்குப் பிறகு, நாம் இந்தியராகப்...

மருந்து

  • தொடரும்

    குடும்பக் கதை தொடரும்

    ஒரு குடும்பக் கதை – 137

    137. கனிந்த காதல் சோனியா காந்தியின் இயற்பெயர் எட்விக் ஆன்டோனியா அல்பினா மைனோ. 1946 டிசம்பர் 9ஆம் தேதி இத்தாலியில் சுமார் 3000 பேர் வசிக்கும் விகென்சா என்ற ஒரு சின்ன ஊரில் பிறந்தார். இத்தாலிய சர்வாதிகாரியான முசோலினியின் பரம விசிறியான ஸ்டெஃப்னோ மைனோ – பாவ்லா மைனோ தம்பதியரின் மகள். இரண்டாம் உலகப்...

    Read More
    தொடரும் பணம்

    பணம் படைக்கும் கலை – 38

    38. சேமிப்பும் முதலீடும் அன்றைய அரசர்கள் தங்களுடைய செல்வத்தையெல்லாம் கருவூலம் என்கிற இடத்தில் நிரப்பிவைத்தார்கள். அதன்பிறகு, தேவை உள்ளபோது அதிலிருந்து கொஞ்சங்கொஞ்சமாக எடுத்துச் செலவழித்தார்கள். கருவூலம் என்பது உண்மையில் ஒரு மிகப் பெரிய, பாதுகாப்பு நிறைந்த அறைதான். பின்னாட்களில் அந்த இடத்தைப்...

    Read More
    தடயம் தொடரும்

    தடயம் – 8

    அடியொற்றிச்செல்லும் அறிவியல் எழுபதுகளின் தொடக்கம். ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் மாநிலவாசிகள் வெளியே படுத்துறங்கவே அஞ்சிய காலமது. அப்படி உறங்கிய பலர் அதன்பின் விழிக்கவே இல்லை. சரியாக, காதுக்குக்கீழேயுள்ள கழுத்துப்பகுதியில் சுத்தியல் போன்ற ஆயுதத்தால் தாக்கப்பட்டு இறந்திருந்தனர். சந்தேகமில்லை. சைக்கோ...

    Read More
    எனதன்பே எருமை மாடே தொடரும்

    எனதன்பே, எருமை மாடே – 8

    8. உதவியா? உபத்திரவமா? அலுவலகம் ஒன்றில் ஓர் ஊழியர் பிசியாக வேலை செய்து கொண்டு இருக்கிறார். அவரது மேலாளர் அவரிடம் வந்து “எனக்கு ஒரு ரிப்போர்ட் அவசரமாகத் தேவை அதனை இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் செய்து தர முடியுமா?” என்று கேட்கிறார். “ஓகே சார்” என்று சொல்லி விட்டுத் தான் செய்து கொண்டிருந்த வேலையை...

    Read More
    குட்டிச்சாத்தான் வசியக் கலை தொடரும்

    குட்டிச்சாத்தான் வசியக்கலை – 08

    நல்லநேரம் “தொடர்ந்து ஜிம்முக்குப் போவது”. “தினமும் பத்துப் பக்கங்களாவது வாசிப்பது”. “கார்போஹைட்ரேட் உணவுகளைத் தவிர்ப்பது”. ”ஆன்லைனில் கண்டதையெல்லாம் வாங்காமல் இருப்பது”. மேற்சொன்னவை டாப் டென் பட்டியலில் இருக்கும் நியூ இயர் ரெஷல்யூஷன்களில் சில. ஆனால் இவை ஏட்டளவில் மட்டுமே இருந்துவிடுகின்றன. எனவே...

    Read More
    தொடரும் நைல் நதி அநாகரிகம்

    நைல் நதி அநாகரிகம் – 8

    உயர்வுக்கு உடலைப் படி அனைவருக்கும் நல்ல உடல் நலம். அதுதான் ஐக்கிய நாடுகள், உலக சுகாதார மையம் ஆகிய நிறுவனங்களின் தாரக மந்திரம். ஆனால் மற்ற ஆப்பிரிக்க நாடுகளைப் போல கென்யாவிலும் தொற்றுநோய்களும் நீரில் இருந்து பிறக்கும் நோய்களுக்கும் குறைவே இல்லை. சராசரி மனிதனின் ஆயுட்காலம் 57 வயது. ஆயிரம் பேருக்கு...

    Read More
    error: Content is protected !!