Home » Home 22-03-23

வணக்கம்

உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு, உலகம் எதிர்பார்த்ததினும் மோசமான எல்லையை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பது போலத் தெரிகிறது. உக்ரைனியக் குழந்தைகளை (போர்க்களமாக அறிவிக்கப்பட்டுள்ள எல்லைப் பகுதிகள் சிலவற்றில் வசிப்பவர்கள்) வலுக்கட்டாயமாக ரஷ்ய வீரர்கள் நாடு கடத்தி, தம் தேச எல்லைக்குள் இழுத்துச் சென்று இருக்கிறார்கள். அப்படிக் கட்டாய நாடு கடத்தலுக்கு உட்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை பதினாறாயிரத்தைத் தாண்டும் என்று சொல்கிறார்கள்.

இது சந்தேகத்துக்கு இடமின்றி ஒரு போர்க்குற்றம். இதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிரான கைது உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரவிட்டிருப்பது சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம்.

யாரும் உடனே புதினைக் கைது செய்யப் போவதில்லை; அதற்கெல்லாம் வாய்ப்பும் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் யுத்தம் தொடங்கிய நாள் முதல் இது ஓர் அநியாயப் போர்; அத்துமீறல் என்று கருதும் பெரும்பான்மை மனித குலத்துக்கு ஒரு சிறிய ஆறுதலான அறிவிப்பு என்பதில் ஐயமில்லை.

இது ஒரு புறம் இருக்க, பிராந்தியத்தில் பறந்த ஆளில்லா அமெரிக்க ட்ரோன் விமானமொன்றை ரஷ்யா சுட்டு வீழ்த்தியிருக்கிறது. இது அபாயம். ஏனெனில், நேற்று வரை அமெரிக்கா உக்ரைனுக்கு உதவி வந்ததே தவிர நேரடியாக ரஷ்யா மீது எந்தத் தாக்குதலும் தொடுக்கவில்லை. ரஷ்யாவும் உக்ரைனிய இலக்குகளை மட்டுமே தாக்கி வந்ததே தவிர, அதன் உதவி நாடுகளைத் தொட்டதில்லை. ஆனால் மார்ச் 14ம் தேதி நடந்த இச்சம்பவம், அமெரிக்காவின் மீது ரஷ்யா நேரடியாகத் தாக்குதல் நடத்த ஆயத்தமாகிவிட்டது போன்ற ஒரு தோற்ற மயக்கத்தை உருவாக்கவே, ஐரோப்பியக் கண்டம் முழுதும் பதற்றம் எழுந்துள்ளது. இது ஒன்றுமில்லாமல் அடங்கிவிடுமானால் ஊருலகுக்கு நல்லது. சிக்கல் பெரிதானால் விளைவுகள் சிந்திக்கக்கூடியதல்ல. இப்பிரச்னையின் ஆழ அகலங்களை விரிவாக விவரிக்கும் கட்டுரை ஒன்றை இந்த இதழில் வினுலா எழுதியிருக்கிறார்.

இதனைப் போலவே இன்னொரு முக்கியமான கட்டுரை, அமெரிக்காவின் சிலிக்கன் வேலி வங்கி இழுத்து மூடப்பட்டதன் பின்னணி குறித்துப் பேசுகிறது. இலவசக் கொத்தனார் எழுதியிருக்கும் இக்கட்டுரை, நாற்பதாண்டுகால வரலாறுள்ள ஒரு வங்கி எப்படி நான்கே நாள்களில் மூழ்கிப் போகும் என்று தெள்ளத்தெளிவாக விளக்குகிறது.

மத்திய அமெரிக்க நாடான ஹண்டுரஸில் இருந்து அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக நுழைந்து, அவதிப்படும் லட்சக்கணக்கான சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை விவரிக்கும் ஆ. பாலமுருகனின் ‘எல்லை தாண்டும் பிள்ளைகள்’, இலங்கைப் பிரச்னையின் இன்றைய பரிமாணத்தை விவரிக்கும் ஸஃபார் அஹ்மதின் ‘மாற்றிப் போட்ட ட்யூனும் மாறாத அவலங்களும்’, அ. பாண்டியராஜனின் ‘தள்ளாடும் கல்வித்துறை; தடுமாறும் மாணவர்கள்’, சிவராமன் கணேசனின் ‘உளவுக்கு வந்த புறா’ என்று இந்த இதழெங்கும் நீங்கள் வாசிப்பதற்கு சுவாரசியமான படைப்புகள் பல உள்ளன.

மெட்ராஸ் பேப்பர் குறித்த உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். அது இதழை இன்னமும் மேம்படுத்த உதவும். பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரை செய்யுங்கள். அவர்களையும் சந்தாதாரர்களாக்குங்கள். இன்னும் சுவாரசியமான பல கட்டுரைகளுடன் மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.

உலகைச் சுற்றி

உலகம்

போனது பதவி, வருகிறது தேர்தல்

ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். 1971 கிறிஸ்துமஸ் தினத்தன்று அன்றைய கனேடியப் பிரதமர் பியேர் ட்ரூடோவிற்க்கு ஒரு மகன் பிறந்தார். அவர்தான்...

உலகம்

கோலாகல கோலா!

‘தம்பி, அக்கா ரோஸ்மில்க் வாங்கித் தரேன்டா’ என்று சொல்லிக் காரியம் சாதிப்பதெல்லாம் பூமர்கள் காலம். ஆரஞ்சு, நீலம், இளம்பச்சை எனப் பல...

நம்மைச் சுற்றி

நம் குரல்

உறவும் உட்பொருளும்

நடிகர் அஜித் கலந்துகொண்ட துபாய் கார் ரேஸ் குறித்து நாம் அறிவோம். கடந்த ஜனவரி 7 ஆம் தேதி அதே துபாயில் சரித்திர முக்கியத்துவம் கொண்ட வேறொரு சம்பவம்...

சுற்றுலா

ராணுவம் இல்லாத நாடு

கொடைக்கானலிலுள்ள பாம்பார் அருவியில் ஒரு பெண் தன்னந்தனியாக ஆட்டம் போடும் விளம்பரம் எண்பதுகளில் மிகப் பரவலாகப் பேசப்பட்டது. நாற்பது வருடங்கள் கடந்தும்...

நம் குரல்

மரபை மீறாதீர்கள்

தமிழ்நாடு ஆளுநர் சட்டமன்றத்துக்கு வருகிறார் எனில் நிகழ்ச்சி நிரலில் அவர் வெளிநடப்பு செய்வதும் உண்டென்பது சமீப கால வழக்கமாகியுள்ளது. ஒவ்வோராண்டும்...

நம் குரல்

மறக்கக் கூடாத பிரதமர்

பணத்தின் மதிப்பை அறிந்த ஒரே இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங். இந்தியாவின் பிரதமராக இருந்தோரைப் பட்டியலிட்டால் நேருவுக்குப் பிறகு, நாம் இந்தியராகப்...

நுட்பக் கோட்டை

அறிவியல்

அறிவு நகரமாகும் அதிரடி அரசியல் நகரம்

பீகாரில், அப்துல் கலாம் அறிவியல் நகரம் இந்த வருடம் திறக்கப்பட்டுவிடும் என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாட்னாவில் அமையவுள்ளது இந்நகரம். இந்தியாவின்...

வாழ்வும் வழிபாடும்

ஆன்மிகம்

காசு, கார்டு, கடவுள்

ஸ்ரீராகவேந்திரருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில், மந்த்ராலயம். தமிழகத்தின் முக்கியமான நகரங்களான சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்றவற்றிலிருந்து...

தமிழ்நாடு

வடிவமைப்பு நாங்கள்தான்; ஆனால் வரைபடம் இல்லை!

புதியதாகக் கட்டப்பட்டுள்ள பாம்பன் ரயில் பாலம் பாதுகாப்புக் குறைபாடுகளுடன் கட்டப்பட்டிருக்கிறது என்று ஆய்வு முடிவு வந்திருக்கிறது. மடித்த வலது கையில்...

தமிழ்நாடு

பாசிசமும் பாயசமும்

“மதச்சார்பற்ற, ஊழலற்ற அரசியல் தான் எங்கள் நிலைப்பாடு. கரப்ஷன் கபடதாரிகளின் மோடி மஸ்தான் வேலை எங்களிடம் எடுபடாது” என்று தமிழக வெற்றிக்...

தமிழ்நாடு

லைக் போட்டு கமென்ட் போட்டு மன்னிச்சுருங்க

யூட்யூபர் இர்ஃபான் மீண்டும் சர்ச்சையில் சிக்கி மீண்டும் மன்னிப்பு கேட்டிருக்கிறார். லைக் போடுங்க, கமென்டு போடுங்க, சப்ஸ்க்ரைப் பண்ணுங்க என்று...

தமிழ்நாடு

முதல்வர் ஆசையும் முப்பத்து மூன்று நிபந்தனைகளும்

மொத்தம் முப்பத்து மூன்று நிபந்தனைகள். அதில் பதினேழு நிபந்தனைகளைக் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு, காவல்துறை சார்பில் தமிழக வெற்றிக் கழக...

தமிழ்நாடு

நின்று நிலைத்த ஒலி

திமுகவின் அதிகார்பூர்வ நாளேடான முரசொலியின் முன்னாள் ஆசிரியர், முரசொலி செல்வம் (83) உடல் நலக்குறைவு காரணமாகக் கடந்த பத்தாம் தேதி காலமானார். இவர்...

  • தொடரும்

    இலக்கியம் சக்கரம்

    சக்கரம் – 1

    1 மிதப்பு எக்மோர் ஸ்டேஷனின் பிரதான வாயில் எதிரில் சவாரியை இறக்கிவிட்டுக் கிளம்பப் பார்த்த டிரைவரிடம், இடதுகாலைத் தார் ரோட்டிலும் வலதுகாலைப் பெடலிலும் வைத்தபடி, ‘பார்சல் புக்கிங் எங்க’ என்று கேட்டான், முரட்டுக் கதர் குர்த்தாவும் அதற்கு சம்பந்தமேயில்லாத டிராக் ஸூட்டும் அணிந்திருந்த அவன். பெரிய ஆள்...

    Read More
    குடும்பக் கதை தொடரும்

    ஒரு குடும்பக் கதை -139

    139. பையனா? பொண்ணா? விமானப் பயணத்தின்போதே, இந்திராதான் அடுத்த பிரதமர் என்பதை முடிவு செய்துவிட்டார் காமராஜ். ஆர்.வெங்கட்ராமனிடம், “அந்த அம்மாவுக்குப் பல உலக நாடுகளின் தலைவர்களைத் தெரியும்! அவங்க அப்பாவோட இந்த நாடு முழுக்கவும், இந்தியாவுக்கு வெளியிலயும் நிறைய பயணம் செய்திருக்காங்க! சுதந்திரப்...

    Read More
    தொடரும் நைல் நதி அநாகரிகம்

    நைல் நதி அநாகரிகம் – 10

    ஏரிகளை நிறைக்கும் கண்ணீர் கிளிமஞ்சாரோ மலை. பூமத்தியரேகையை ஒட்டிய கடற்கரை. பசுமையான சமவெளிப்பகுதி. அடர்ந்த காடுகள். ஆழமான ஏரிகள். இவை உள்ள, தான்சென்யகா உள்ளடக்கிய பகுதியே தான்சேனியா. உங்கள் கண்களுக்குப் பச்சைப்பசேலென்ற அழகான நாடு. ஆனால் மக்கள் தொகையில் பாதிக்கு மேல் குடிநீர் இன்றி அலைகிறார்கள். ஒரு...

    Read More
    சண்டைக் களம் தொடரும்

    சண்டைக் களம் – 10

    x. அமெரிக்கா பல நாட்டவரின் திறமைகளை உள்வாங்கி ஊக்குவிக்கும் அமெரிக்கா, பல நாடுகளின் சண்டைக்கலைகளையும் பாராட்டி ஊக்குவித்து வளர்த்தது. ஜப்பானிய, கொரிய, சீன, பிலிப்பைனிய சண்டைக்கலைகளை உள்வாங்கி அதில் அப்படியே தேர்ச்சி பெற்றும், அமெரிக்கப் பயிற்சிக்கு ஏற்றபடி அவற்றை மாற்றி வடிவமைத்தும் தன்...

    Read More
    எனதன்பே எருமை மாடே தொடரும்

    எனதன்பே எருமை மாடே – 10

    10. இடுக்கண் வருங்கால் நகுக “இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்ப தில்.” இது திருக்குறள் 621. இதன் மூலம் திருவள்ளுவர் சொல்ல வருவது என்னவென்றால். துன்பம் வரும் வேளையில் மகிழ்வுடன் இருக்க வேண்டும். அதுவே அத்துன்பத்தை வெல்வதற்கான சிறந்த வழியாகும் என்பதே. இதற்குப் பதில் சொல்வது போலக்...

    Read More
    குட்டிச்சாத்தான் வசியக் கலை தொடரும்

    குட்டிச்சாத்தான் வசியக் கலை – 10

    பூசலார் கதை கம்ப்யூட்டர்களின் மெமரி அதிகரித்துவிட்டது. ஸ்மார்ட்ஃபோனில் கூட 256 ஜீபி சாதாரணமாகிவிட்டது. ஆனால் நமக்குத்தான் எல்லாமே மறந்துபோகிறது. சென்ற தலைமுறை நினைவில் வைத்துக்கொண்ட அளவில் பாதி கூட இப்போது நம்மால் இயல்வதில்லை. ”எத்தனை ஃபோன் நம்பர் உங்களுக்கு ஞாபகத்துல இருக்கு…?” என்று...

    Read More
    error: Content is protected !!