மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூல்களை நாட்டுடைமையாக்கியுள்ளார் மு.க.ஸ்டாலின். தன்னுடைய பதிநான்கு வயதில் எழுத ஆரம்பித்தவர் கருணாநிதி...
வணக்கம்
வழக்கத்தினும் இந்த ஆண்டுக் கோடை ஒரு நவீன கவிதையாகவே காட்சி தருகிறது. வெளியே பத்து நிமிடங்கள் போய்விட்டு வீட்டுக்கு வந்தால் சிறிதுநேரம் ஒன்றுமே புரிவதில்லை. ஆணவமல்லாத ஏதோ ஒன்று கண்ணை மறைக்கிறது. ஐந்து நிமிடங்கள் அமைதியாகப் படுத்து எழுந்தால் சரியாகிவிடும் என்று பார்த்தால், படுக்கத்தான் முடிகிறதே தவிர, எழுந்திருக்க முடிவதில்லை. ஆனால் வெளியே போய்த்தான் தீர வேண்டியிருக்கிறது. வேலை பார்த்துத்தான் ஆகவேண்டியிருக்கிறது. நமது அன்றாடங்களை எப்படி நம்மால் தவிர்க்க முடியாதோ அப்படித்தான் இயற்கைக்கும்.
இந்தக் கோடையை நேர்த்தியாகச் சமாளித்து வாழ இந்த இதழில் உபயோகமான நூறு டிப்ஸ் தருகிறார் காயத்ரி. ஒய். படித்துப் பயன்படுத்துவதுடன் எடுத்து பத்திரப்படுத்தி வையுங்கள். மீண்டும் அடுத்த கோடைக்கு உதவும்.
கர்நாடகத்தில் சித்தராமய்யாவும் துருக்கியில் எர்டோகனும் கணிப்புகளைப் பொய்யாக்கித் தமது மக்கள் ஆதரவை உறுதி செய்திருப்பதே வாரத்தின் சிறப்புச் செய்திகள். இதில், எர்டோகன் தேர்தலில் வென்ற சூழல் முக்கியமானது. துருக்கித் தேர்தலே என்றாலும் உண்மையில் இது அமெரிக்க-ரஷ்ய பலப்பரீட்சையின் இன்னொரு மறைமுக வடிவம். இந்த இதழ் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது போல, எண்பதுகளின் பனிப்போர் இப்போது வேறொரு முகம் கொண்டு மீண்டும் அரங்கேறத் தொடங்கியிருப்பது கண்கூடு. துருக்கி தேர்தல் முடிவுகளை முன்வைத்து (என்னதான் மே 28 அன்று இறுதிப் பரீட்சை இருந்தாலும்) ஸஃபார் அஹ்மத் எழுதியிருக்கும் கட்டுரை, உலகம் எதிர்கொள்ளவிருக்கும் அடுத்தக்கட்ட அரசியல் நெருக்கடிகளின் களம் என்னவாக இருக்கப் போகிறது என்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறது.
வினுலா எழுதியுள்ள ‘அடையாளங்களை அழித்தொழிப்போம்’ இன்னொரு மிக முக்கியமான கட்டுரை. தொடக்க காலம் முதலே உக்ரைனின் கலாசார-பண்பாட்டு வேர்களை நாசம் செய்யும் முயற்சியில் ரஷ்யா இதுவரை என்னவெல்லாம் செய்திருக்கிறது என்பதை இக்கட்டுரை துல்லியமாகப் படம்பிடிக்கிறது. ஓர் இனத்தை வேரறுப்பது என்பதன் முதல்படி, அதன் பண்பாட்டு அடையாளங்களை அப்புறப்படுத்துவதேயாகும். காலம் காலமாக ரஷ்யா இதனை ஒரு செயல்திட்டமாகவே முன்வைத்து இயங்கி வருவதைத் தோலுரிக்கும் இக்கட்டுரையை நீங்கள் உலகின் பல ஏகாதிபத்திய-கோலோச்சு சக்திகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். மிக நிச்சயமாக, இக்காலக்கட்டத்தின் மாபெரும் அச்சுறுத்தல் அமெரிக்காவோ வட கொரியாவோ அல்ல; ரஷ்யாதான் என்பது புலப்படும்.
வட கொரியா என்றதும் அதன் சமீபத்திய உளவு சாட்டிலைட் முயற்சியைக் குறித்துப் பேசாதிருக்க முடியாது. தென் கொரியாவைக் கண்காணிக்க என்று வட கொரிய அதிபர் போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போய்விடுவார். உண்மை அதுவல்ல. தெற்காசியப் பிராந்தியத்தின் நிரந்தரத் தலைவலியாக உருவெடுப்பதை ஒரு செயல்திட்டமாக வைத்துக்கொண்டு இயங்கிவரும் வட கொரியாவின் இந்த உளவு சாட்டிலைட் அமெரிக்காவின் கோபத்தை வலுவாகக் கிளறிவிட்டிருப்பது திண்ணம். இது குறித்த விரிவான கட்டுரை ஒன்றைச் சிவராமன் கணேசன் எழுதியிருக்கிறார்.
ட்விட்டரின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாகியிருக்கும் பெண்மணி குறித்து, அரிசியே பயன்படுத்தாத அண்ணாநகர் உணவகம் குறித்து, நாய் வளர்ப்போர் அதிகரித்திருக்கும் சூழலில் ஒரு நாயை வளர்க்க ஆகும் மொத்த செலவு என்ன என்பது குறித்து, காலாவதியாகப் போகிற இரண்டாயிரம் ரூபாய் நோட்டின் துர்மரணம் குறித்து, அனைத்து வெப் பிரவுசர்களிலும் உள்ள இன்காக்னிடோ வசதி ஏன் என்பது குறித்து - எது மிச்சம்?
எல்லா விதமான ருசிகளுக்கும் இடம் தரும் கட்டுரைகளுடன் இந்த இதழ் வெளியாகியிருக்கிறது. படித்துவிட்டு உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். இதழ் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரை செய்து அவர்களையும் சந்தாதாரர் ஆக்குங்கள்.
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.
நம்மைச் சுற்றி
சென்னை உணவுத் திருவிழா டிசம்பர் 20 முதல் 24ஆம் தேதி வரை மெரினா கடற்கரையில் நடைபெற்றது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தமிழ்நாடு...
உலகைச் சுற்றி
ஈத் மீலாத் மஜீத்! சிரியாவில் கூறப்படும் கிறிஸ்துமஸ் வாழ்த்து. மின் விளக்குகளாலான கிறிஸ்துமஸ் மரத்தின் உச்சியை அலங்கரிக்கிறது ஒரு நட்சத்திரம்...
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்த முயன்ற தென் கொரிய ஜனாதிபதியின் பதவியைப் பறித்தாகிவிட்டது. தர்மம் மீண்டும் நிலைநாட்டப்பட்டது. சுபம் போட்டுவிட்டு...
டிசம்பர் 20, வெள்ளிக்கிழமை நடந்த தென்கிழக்காசிய நாடுகள் கூட்டமைப்பான ஆசியான் சந்திப்பில் மியான்மர் நாட்டுக்கான தங்கள் திட்டத்தை மறுபரிசீலனை...
ஆயபயன்
தொடரும்
136. அண்டோனியா மைனோ காஷ்மீரிலிருந்து இந்திரா காந்தி டெல்லி திரும்பியதும், பிரதமர் சாஸ்திரியை சந்தித்தார். காஷ்மீரில் இருந்த நாள்களில் தனது செயல்பாடுகளை எல்லாம் பெருமையோடு விளக்கினார். தொடர்ந்து இந்தப் போரில் இந்தியா எப்படி வியூகம் வகுக்க வேண்டும் என்று ஆலோசனைகள் கூறும் ஓர் அறிக்கையை அவரிடம்...
யாருடைய ‘கைவண்ணம்’? விரல் ரேகைத் தடயவியலுக்கு அறிமுகம் தேவையில்லை. ‘ஃபாரன்சிக்’ என்ற சொல்லைக்கேட்டவுடனே நமக்கு நினைவுக்கு வருவது அதுதான். எண்ணற்ற வழக்குகள் இத்தடயவியல் முறையினால் தீர்க்கப்பட்டுள்ளன. சங்கரராமன் கொலை வழக்கு, ஆட்டோ ஷங்கர் வழக்கு, சுவாதி கொலை வழக்கு, கோவை தொடர் குண்டுவெடிப்புகள் எனப்...
vii. ஜப்பான் தன்னுடைய மண்ணின் மணம் வீசும் அதிகமான சண்டைக்கலைகளைத் தன்னுள்ளே கொண்ட நாடு என ஜப்பானைச் சொல்லலாம். சீனாவின் குங்ஃபூ ஒன்றிலிருந்து பலவாகப் பிரிந்ததைப் போலவே, ஜப்பானிலும் ஒரு சண்டைக்கலையிலிருந்து மற்றொன்று, அதிலிருந்து இன்னொன்று எனப் பிரிந்தன. ஒவ்வொன்றும் மெருகேறிச் சென்றன. காப்பதைத்...
7. வாழ்ந்து காட்ட வேண்டுமா? எல்லோரும் நல்லவரே என்று நாம் அடிப்படையாகக் கருதுவது நமது மனநிலையை நல்ல நிலையில் பேணுவதற்கு நல்லது. ஆனாலும் அது உண்மை இல்லை என்பதனைச் சில பேர் நமக்குப் புரிய வைக்க வேண்டும் என்பதில் அதீத அக்கறை காட்டுவர். அவர்களது நோக்கம் நல்லதல்ல என்பது எமக்குத் தெளிவாகவே தெரியும் போது...
37. சலுகை வலைகள், சமாளிக்கும் வழிகள் குளிர் மிகுதியாக உள்ள நாட்களில் நாம் தடிமனான சட்டை போடுகிறோம். சில மாதங்களுக்குப்பின் குளிர் குறைந்து வெய்யில் கூடிவிட்டால், மெலிதான அரைக்கை சட்டைகளுக்கு மாறுகிறோம். அதேபோல், அலுவலகத்துக்கு அணிகிற சட்டை வேறு, நண்பர்களோடு கொண்டாட்டம் என்றால் இன்னொரு சட்டை, ஏதாவது...
அந்த மனசு இருக்கே… குட்டிச்சாத்தானால் கூடுவிட்டுக் கூடு பாய முடியும் என்று பார்த்திருந்தோம். ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த வல்லுநர் போலவும் குட்டிச்சாத்தானால் உருமாற முடியும். இந்த வசதியை நாம் பல்வேறு விதங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம். நமக்கு உதவும் ஓர் அவதாரமாக கு.சாத்தானை இன்று மாற்றவிருக்கிறோம்...