இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்க மூன்று நாள் பயணமாக இந்தியா வந்தார். இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்தார். இந்தியாவும் இலங்கையும் பேசினால்...
வணக்கம்
இந்தப் பத்திரிகை வெளிவரத் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. நாளை ஆண்டு விழா.
தமிழில் எளிமையாகவும் தரமாகவும் பல்வேறு துறைகள் சார்ந்து ஆழமாகவும் எழுதத் தெரிந்த ஒரு புதிய தலைமுறைக்கான களமாகத் தொடங்கப்பட்டதுதான் மெட்ராஸ் பேப்பர். தமிழ் வார இதழ்களுக்கே உரிய கல்யாண குணங்கள் ஏதுமின்றி, ஒரு மாறுபட்ட அனுபவத்தை வாசகர்களுக்கு வழங்க நினைத்தோம். நினைத்ததைச் சரியாகவே செய்துகொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அளிக்கும் வரவேற்பின் மூலம் அறிகிறோம்.
இந்த ஐம்பத்து மூன்று வாரங்களில் சுமார் நாற்பது புதிய எழுத்தாளர்களை மெட்ராஸ் பேப்பர் தமிழுக்குத் தந்திருக்கிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள், இருபதுக்கு மேற்பட்ட சிறுகதைகள், பதினேழு உலகச் சிறுகதைகள், சற்றும் சமரசமற்ற உயர் தரத்தில் ஒரு நாவல் -
தவிர, நமது எழுத்தாளர்கள் பன்னிரண்டு பேரின் பதிமூன்று புத்தகங்கள் இந்த ஆண்டில் வெளியாகியிருக்கின்றன. எழுதக் கற்றுக்கொண்டு, ஓராண்டு முழுதும் எழுதி எழுதிப் பழகி, பிறகு பத்திரிகைக் கட்டுரைகள் எழுதத் தொடங்கி, அதில் தேர்ச்சி பெற்றுப் புத்தகமும் எழுதி வெளியிட்டிருக்கிறார்கள் என்பது இன்றைய தமிழ் பதிப்புச் சூழலில் சந்தேகமின்றி சாதனை. நல்ல எழுத்தை எப்போதும் கொண்டாடுவோம்.
நிற்க. நாளை (ஜூன் 1, 2023) மாலை இந்திய நேரம் 7 மணிக்கு மெட்ராஸ் பேப்பரின் ஆண்டு விழாக் கொண்டாட்டம் zoom வழியே நடக்கிறது. நூறு பேர் இதில் நேரடியாகக் கலந்துகொள்ள இயலும். பிறரும் நிகழ்ச்சியைக் கண்டு ரசிக்க ஸ்ருதி டிவி யூட்யூப் நேரலை செய்கிறது. நிகழ்ச்சியில் நேரடியாகக் கலந்துகொண்டு, நமது பத்திரிகையின் எழுத்தாளர்கள் / செய்தியாளர்களுடன் கலந்துரையாட விரும்புவோர் 8610284208 என்ற எண்ணுக்கு வாட்சப் செய்து zoom link பெறலாம்.
இந்நிகழ்ச்சியில் ‘கல்கி’ சீதா ரவி, ‘இந்து தமிழ் திசை’ ஆசிரியர் கே. அசோகன் இருவரும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்குகிறார்கள். ‘நேர்காணல் செய்யும் கலை’ என்ற தலைப்பில் பத்திரிகையாளர் எஸ். சந்திரமௌலியும் ‘எழுத்தில் நகைச்சுவை’ என்ற தலைப்பில் பத்திரிகையாளர் ரமேஷ் வைத்யாவும் சிறப்புரை ஆற்றுகிறார்கள். மெட்ராஸ் பேப்பர் இதுவரை செய்தவை குறித்து ஆசிரியரும் தொழில்நுட்ப ஆலோசகரும் உரையாற்றுவார்கள். பிறகு, ‘இனி என்ன செய்யலாம்?’ என்ற தலைப்பில் மெட்ராஸ் பேப்பர் ஆசிரியர் குழுவினருடன் வாசகர்கள் நேரடியாகக் கலந்துரையாடும் நிகழ்ச்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருகை தந்து உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் அளிக்கலாம்.
மெட்ராஸ் பேப்பரின் வாசகர்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற அன்புடன் அழைக்கிறோம்.
நாளை மாலை விழாவில் சந்திப்போம்.
நம்மைச் சுற்றி
நாடு முழுவதும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்குப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் அமைச்சரவை ஒப்புதல்...
உலகைச் சுற்றி
ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்று இன்றைக்குச் சரியாக மூன்று மாதங்கள் ஆகின்றன. மூன்றில் இரண்டு பலத்துடன் அவரது கட்சி பாராளுமன்றத் தேர்தலில்...
சிரியாவில் எங்கு பார்த்தாலும் வெடி வெடிக்கிறது. இரண்டாவது முறை விடுதலை அடைந்ததைப் போல, நாடு முழுவதும் கொண்டாட்டங்கள். சிரிய அதிபர் பஷார் அல்...
மேலும் ரசிக்க
தொடரும்
135. இரண்டாம்இடம் யாருக்கு? பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தியிடம் தனது அமைச்சரவையில் அவரும் இடம்பெற வேண்டும் என்று கேட்டபோது, அவர் தன் தந்தையை இழந்த சோகத்தைக் காரணம் காட்டி தனக்கு விருப்பமில்லை என்றார். அப்படிச் சொல்லிவிட்டாலும், சாஸ்திரி விடுவதாக இல்லை. ‘அமைச்சரவையில் இந்திரா காந்தி...
36. அட்டை மேல் அட்டை சில மாதங்களுக்கு முன்னால், CC Geeks என்று அழைக்கப்படும் கிரெடிட் கார்டு (கடன் அட்டை) விரும்பிகளைப்பற்றிய கட்டுரையொன்றைப் படித்தேன். அதில் ஒருவர் தன்னிடம் 51 கடன் அட்டைகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். எதற்காக இத்தனை கடன் அட்டைகள்? ஒன்றோ, இரண்டோ போதாதா? ‘என்னுடைய...
மூன்று முகம் ப்ராம்ப்ட்டின் பஞ்ச பூதங்களை சென்ற அத்தியாயத்தில் அறிமுகப்படுத்திக்கொண்டோம். ப்ராம்ப்ட்டின் நீளமும் விரிவும் நாம் குட்டிச்சாத்தானிடம் செய்யச் சொல்லும் செயலைப் பொருத்ததே. வெள்ளத்தனைய மலர் நீட்டம் என்பது போல. செயலின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு ப்ராம்ப்ட்களை மூன்று விதங்களாகப்...
6. அன்புச் சுரண்டல்கள் மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய நாவல்களில் ஒன்று பாத்துமாவின் ஆடு. இந்நாவலின் நாயகனிடம் அவரது குடும்பத்தினர் எப்போதும் ஏதோ ஒரு காரணம் சொல்லிப் பணம் கேட்பார்கள். இந்நாவல் எழுதப்பட்ட காலம் பல வருடங்களுக்கு முன்னதாக இருந்த போதிலும் உறவுகள் அன்பின் பெயரால்...
கண்டமாக்கினாலும் கண்டுபிடிக்கப்படும் தோராயமாக, ஆறு ஆண்டுகளுக்குமுன் சென்னையை அதிரவைத்த வழக்கிது. பொங்கல் கொண்டாட்டங்கள் முடிந்து சில தினங்களே கடந்திருந்தன. பெருங்குடி குப்பைக்கிடங்கின் சுகாதாரப்பணியாளர்கள் குப்பைகளைத் தரம் பிரித்துக்கொண்டிருந்தனர். அப்போதுதான் அந்தக் கோணிமூட்டை அவர்களின் கவனத்தைக்...
vi. இந்தியா இந்தியாவின் பழமையான சண்டைக்கலை மற்போர். தமிழகத்திலும் ஆயுதமில்லா சண்டைக்கலைகளுள் பழமையானது மற்போர். ஆமூர் மல்லனை சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி என்னும் அரசன் வீழ்த்தியதைச் சொல்லும் புறநானூற்றுப் பாடலில் மற்போர்க் காட்சி உள்ளது. ஒரு காலை மார்பின் மீது வைத்து அழுத்தியும் இன்னொரு காலை...