♠ கடுகு
இந்தக் கட்டுரையை படித்து முடித்தவுடன் மளமவென்று நகைச்சுவைக் கதை, கட்டுரைகள் எழுதிக் குவிக்கலாம் என்று நீங்கள் எண்ணினால் ஏமாந்துதான் போவீர்கள். காரணம் நகைச்சுவை எழுதுவது சுலபமல்ல. எண்பது சதவிகிதம் எழுத்தாளனுக்கு திறமை இருக்கவேண்டும் இருபது சதவிகிதம்தான் கற்று, கேட்டு, பயின்று, பார்த்து, ரசித்து, முயன்று தனது திறமையை அதிகரித்துக் கொள்ளமுடியும். இப்படி நான் எழுதிவிட்டதால் கட்டுரையைப் படிக்காமல் இருந்து விடாதீர்கள்! உங்களுக்கு இயற்கையாக அந்தத் திறமை இல்லை என்று நீங்களே முடிவு கட்டி விடாதீர்கள்.
நகைச்சுவை எழுதுவதும் ஜோக் எழுதுவதும் வெவ்வேறு, நகைச்சுவை கதை, கட்டுரையில் தனியாக ஜோக் இருக்காது, இருக்க வேண்டிய அவசியமில்லை. கட்டுரையில் வரும் கதாபாத்திரங்கள், அவர்களின் குண பேதங்கள், பெயர்கள், உரையாடல்கள், நிகழ்ச்சிகள் இவைகளில் நகைச்சுவை இழையோட வேண்டும். ஒட்டுமொத்தமாக நகைச்சுவை உணர்வை மனதில் எழுப்ப இவை உதவும்.
Add Comment