Home » சட்டம் மீறினால் கட்டம்
சட்டம்

சட்டம் மீறினால் கட்டம்

பட்ஜெட் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக நாடாளுமன்றத்தில் பல சட்ட முன்வரைவுகளை முன்மொழிய மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. அவற்றில் மிக முக்கியமானது வெளிநாட்டவர்கள் இந்தியாவில் குடியேறுவது தொடர்பானது. இந்த புதிய சட்டத்தின் மூலமாகக் குடியேற்றம் தொடர்பான விதிகளைக் கடுமையாக்க முடிவு செய்திருக்கிறது மத்திய அரசு. அமைச்சரவையின் ஒப்புதலைப்பெற்ற பிறகு தற்போது நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்யவிருக்கிறார்.

வெளிநாட்டவர் சட்டம் 1946 (Foreigners Act 1946), கடவுச்சீட்டு தொடர்பான 1920ஆம் ஆண்டு சட்டம் (Passport Entry into India Act 1920), வெளிநாட்டினர் பதிவுசெய்வது தொடர்பான 1939ஆம் ஆண்டு சட்டம் ( Registrations of Foreigners Act 1939), குடியேற்றச் சட்டம் 2000 ஆகிய நான்கு சட்டங்கள் வெளிநாட்டவர்கள் இந்தியாவில் நுழைவது தொடர்பாக தற்போது நடைமுறையில் இருக்கின்றன. மத்திய அரசு முன்மொழியவிருக்கும் இந்த புதிய ‘குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம் 2025’ ஒருங்கிணைந்த சட்டமாகச் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!