தூசி என்று நாம் சொல்வதை ஆங்கிலத்தில் டஸ்ட் என்று சொல்வார்கள். இவை மிகச் சிறிய துகள்கள். இந்தத் தூசிகளும் திறன் கொண்டதாக முடியுமா? ஆம். இப்படியான திறனுள்ள தூசியினை ஸ்மார்ட் டஸ்ட் என்று சொல்வார்கள்.
ஸ்மார்ட் டஸ்ட் எனும் பெயர் தொண்ணூறுகளின் பிற்பகுதியில், அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாநிலத்தில் பேர்க்கலி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கிறிஸ்தோபர் பிஸ்டர் அவர்களால் உருவாக்கப்பட்டது. ஸ்மார்ட் டஸ்ட் உண்மையில் தூசியே அல்ல. ஆனால் தூசி போன்ற சிறிய துகளாக உள்ள ஒரு கருவி. ஆங்கிலத்தில் microelectromechanical systems (MEMS) என்று சொல்லப்படும் சென்சர் போன்ற கருவியாகும். இதன் அளவு ஒரு மில்லிமீட்டரை விடச் சிறிதாக இருக்கலாம்.
அடிப்படையில் இவை ஒரு சென்சர் போன்ற கருவியே. அளவில் தூசி போன்று சிறியதாக இருப்பதால் இவற்றை எங்குமே அனுப்பக் கூடியதாக இருக்கும். இவை சேகரிக்கும் தகவல்களை வயர்லெஸ் மூலமாக ஒரு கணினிக்கு அனுப்பும் திறன் வாய்ந்தவை. முக்கியமாகத் தகவல்கள் அனுப்புவது மட்டுமே இந்த ஸ்மார்ட் டஸ்ட்களின் பயன்பாடு.
Add Comment