Home » சுட்ட பழம்: ஒலிம்பிக்கில் இந்தியர்கள்
விளையாட்டு

சுட்ட பழம்: ஒலிம்பிக்கில் இந்தியர்கள்

மனு பாக்கர், சரப்ஜோத் சிங்

2024ஆம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்ஸில் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் பதினைந்து பிரிவுகளில் உள்ளன. இந்த ஆண்டு துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இரண்டு வீரர்கள் இந்திய ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்திருக்கிறார்கள். ஒருவர் துருக்கி நாட்டைச் சேர்ந்த வீரர் யூசுப் டிகேக். துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் அணியும் எந்த பாதுகாப்பு உபகரணங்களும் அணியாமல் பங்கு பெற்று வெள்ளிப் பதக்கம் வென்ற அவருடைய பாணி அனைவரையும் கவர்ந்துள்ளது. இன்னொருவர் இந்தியாவைச் சேர்ந்த இளம் வீராங்கனை மனு பாக்கர். பாரீஸ் ஒலிம்பிக்சில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தைப் பெற்று பதக்கக் கதவைத் திறந்திருக்கிறார்.

துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் இந்தியா இதுவரை மூன்று வெண்கலப் பதக்கங்கள் வென்றிருக்கிறது. ஒலிம்பிக்ஸில் ஒரு விளையாட்டுப் போட்டியில் இந்தியா மூன்று பதக்கங்கள் பெற்றிருப்பது இதுவே முதல் முறை. ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மனு பாக்கர் மட்டுமே, இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் பெற்றுத் தந்திருக்கிறார். பாரீஸ் கோடைகால ஒலிம்பிக்சில் மொத்தம் முப்பத்திரண்டு விளையாட்டுகளில் முந்நூற்று இருபத்தொன்பது விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறவிருக்கின்றன. இவற்றில் இந்திய விளையாட்டு வீரர்கள் நுற்றுப் பன்னிரண்டு பேர் பதினாறு போட்டிகளில் அறுபத்திரண்டு பத்தகங்களுக்குப் போட்டியிடுகிறார்கள்.

பேட்மிண்டன் போட்டியில் பிவி சிந்து மூன்றாவது முறையாகப் பதக்கம் வென்று ஹாட்ரிக் சாதனை புரிவார் என்று எதிர்பார்க்கப்பட்டார். சர்வதேச அளவில் நாற்பதுக்கும் மேற்பட்ட பதக்கங்கள் வாங்கிக் குவித்திருக்கும் தீபிகா குமாரி வில்வித்தைப் போட்டியில் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டார். இந்த இருவருக்கும் இடையில் புகுந்து முன்னால் வந்து துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் பெற்று இந்தியர்களின் கவனத்தைத் திருப்பியிருக்கிறார் மனு பாக்கர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!