ஒரு சாதாரண நாளில் கோயமுத்தூர் வடவள்ளியிலிருந்து ஈஷா யோகா மையத்தை முக்கால் மணி நேரத்தில் அடைந்துவிடலாம். ஆனால், மகா சிவராத்திரி அன்று முழுதாக ஆறு மணி நேரம் ஆனது.
முன்னும் பின்னும் பல மைல் தூரத்திற்கு இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள். நூற்றுக்கணக்கில் பேருந்துகளும் அணிவகுத்திருக்க, உலகெங்கிலும் இருந்து வந்திருந்த பக்தகோடிகளின் வெள்ளத்தில் மிதந்து, வெள்ளிங்கிரி மலைச்சாரலில் நடைபெற்ற மெகா சிவராத்திரிக் கொண்டாட்டத்தில் இம்முறை நாமும் கலந்து கொண்டோம்.
இசை, சொற்பொழிவு, நடனம் என முப்பது ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது ஈஷாவின் மகா சிவராத்திரி விழா. இந்த வருடத்தின் சிறப்பு விருந்தினர் நாட்டின் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர். துணை விருந்தினர்களாகத் தமிழக ஆளுநர் மட்டும் வந்தால் போதாது என நினைத்தார்களோ என்னவோ திரிபுரா மற்றும் பஞ்சாபையும் சேர்த்து மூன்று மாநில ஆளுநர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
புது வரவாக பூஜா ஹெக்டே, நிரந்தர உறுப்பினர் தமன்னாவைத் தவிரப் பெரியளவில் நட்சத்திர கூட்டம் இம்முறை கூடவில்லை (சரி, சந்தானம்.) என்றாலும் சில சின்னத்திரை பிரபலங்களையும் காண முடிந்தது.
Nice one Rajshri..
I dont agree with your last statement.