Home » இன்றில்லையேல் என்றுமில்லை!
உலகம்

இன்றில்லையேல் என்றுமில்லை!

“இஸ்ரேலிய மக்களை எல்லாம் முட்டாள்கள் என்று நினைக்கிறார் அதிபர் நெதன்யாகு. ஃபிலடெல்பியா காரிடரில் இஸ்ரேலியப் படையை நிறுத்துவதெல்லாம் பெரிய ஏமாற்று வேலை” என்கிறார் இலாய் அல்பாக், காஸாவில் பிணைக்கைதியாக இருக்கும் லிரி அல்பாகின் தந்தை.

காஸாவின் கிழக்கில் அமைந்துள்ள எகிப்துடனான எல்லை தான் ஃபிலடெல்பியா காரிடர் எனப்படுகிறது. காஸாவிலிருந்து எகிப்திற்குச் செல்லும் ஒரே வழியான ராஃபா பாதை அமைந்துள்ள இடம். ஒன்பது மைல் நீளமும், நூறு மீட்டர் அகலமும் கொண்ட இந்த நிலத்துண்டு இஸ்ரேல் மீதான போர் ஆரம்பிக்கும் முன்னர்வரை எகிப்து மற்றும் பாலஸ்தீனியர்களின் வசம் இருந்தது. இப்போது இஸ்ரேலியப் படை இதைக் கைப்பற்றியதோடு, போர் முடிவுக்கு வந்தாலும் அங்கிருந்து விலக மாட்டோம் என்கிறது. பேச்சுவார்த்தைகளில் ஜூலை மாதம் சேர்க்கப்பட்ட இந்தப் புதிய திருத்தம் தான், போர் நிறுத்தத்திற்குத் தடையாக உள்ளது; பிணைக்கைதிகளின் மீட்பிற்கும் முட்டுக்கட்டையாக இருக்கிறது என்கிறார் இலாய் அல்பாக். இஸ்ரேல் அதிபரின் இந்த பிடிவாதம், அவரது ஆட்சிக்கு ஆதரவு கொடுப்போரைச் சமாதானப்படுத்துவதற்கே என்ற உண்மையைப் போராட்டத்தின் போது தெரிவிக்கிறார்.

ஆறு இஸ்ரேலிய பிணைக்கைதிகளின் சடலங்கள், சென்ற வாரம் காஸாவின் ஒரு சுரங்கப் பாதையிலிருந்து கண்டெடுக்கப்பட்டன. சிலமணி நேரம் முன்புதான் அவர்கள் கொல்லப்பட்டிருந்தனர். அவர்களை விட்டுச்செல்லும் அவசரத்தில் ஹமாஸ் படையினர் அவர்களைக் கொன்றிருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது. இந்தக் கோபத்தின் விளைவே, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் போராடி வருவதன் காரணம். நாள்கணக்காகத் தொடரும் இந்தப் போராட்டம், இதுவரை இஸ்ரேல் காணாத ஒன்று. போர் நிறுத்தம் அறிவித்து, பிணைக்கைதிகளை முதலில் மீட்க வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கை. இனியும் அவர்கள் அதிபரின் ஏமாற்று வார்த்தைகளை நம்பத் தயாராக இல்லை என்பதையே இது உணர்த்துகிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்