Home » பாதுகாப்பையா பணயம் வைப்பது?
இந்தியா

பாதுகாப்பையா பணயம் வைப்பது?

கச்சத்தீவு விவகாரம் மீண்டும் ஒரு முறை விவாதத்துக்கு வந்துள்ளது. இந்த விவகாரத்தில் இதுவரை அதிகம் பேசப்படாத பால்க் விரிகுடா, வாட்ஜ் பேங்க் விஷயங்களும் இம்முறை பொதுவெளியில் பேசு பொருளாகியுள்ளன. இந்தியப் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய திசையில் இவ்விவகாரம் தற்போது சென்று கொண்டுள்ளது.

கச்சத்தீவின் புவியியல் வரலாறு என்று பார்த்தால் புதிதாகத் தோன்றிய நிலப்பரப்புதான். சுமார் 500 வருடங்கள் இருக்கலாம். இந்தியத் தரப்பில் இருக்கும் வரலாற்றின் படி 1600-களில் எழுதப்பட்ட செப்பேடுகளில் இத்தீவு உள்ளது. இலங்கை அது தங்கள் நிலப்பரப்பு என்று வாதிட்டது. 1920-களிலேயே இந்த விவகாரம் இருந்தது.

நிலப்பரப்புகளை வரையறுத்து வரைபடமாக்கும் போது சுமூகத் தீர்வை எட்டமுடியவில்லை. அப்புறம் பேசிக் கொள்ளலாம் என்று தள்ளி வைக்கப்பட்டது. அவ்வப்போது பேச்சுவார்த்தைகள் நடப்பதும் தீர்வு காணப்படாமல் யாரும் சட்டப்படி சொந்தம் கொண்டாட முடியாத நிலப்பரப்பாகவே கச்சத்தீவு இருந்தது. இந்தியாவிடம் எத்தனை ஆவணங்கள் இருந்தாலும் அதை அனைவரும் ஒப்புக்கொண்டால்தான் சர்வதேசச் சட்டப்படி அது செல்லும்.

இந்திய பாகிஸ்தான் போரும், இலங்கைத் தமிழர்கள் விவகாரமும் கச்சத்தீவு சிக்கலுக்கு ஒரு தீர்வைக் கொணர்ந்தது. 1970-களில் அடுத்தடுத்துச் சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இலங்கையை பாகிஸ்தான் வான்வழிப் படைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் பொருட்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கச்சத்தீவை இலங்கைக்கு அளிக்கச் சம்மதித்தார். “தாரை வார்த்தார்” என்றே சொல்லப்பட்டாலும் உண்மை வேறு.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!