Home » இட்லி to பூரி via கடப்பா
உணவு

இட்லி to பூரி via கடப்பா

மதியம் அரைத்த மாவு புஸுபுஸுவெனப் பொங்கியிருந்தது. அன்று அரைத்த மாவில் சுடும் இட்லிக்கென்று தனித்த ருசியுண்டு. இரவுணவுக்கு இட்லியும், சாம்பாரும் என எளிதாக முடிவு செய்திருந்தேன்.

‘இட்லி வேணாம்… எனக்குப் பூரிதான் சாப்பிடணும் போல இருக்கு…” என அன்று பார்த்து அடம்பிடித்தாள் மகள்.

“இவளுக்குன்னு ரெண்டு பூரிகூடப் போட்டுடலாம். தொட்டுக்க உருளைக்கிழங்கு வேணும்பா. அதுக்கு தனியா மசாலா, இட்லிக்குத் தனியா சாம்பார்னு எத்தனை தினுசு செய்யறது?” அத்தாட்டியிடம் புலம்பிக் கொண்டிருந்தேன். கால்மாட்டில் அமர்ந்த அர்ச்சுனனுக்கும், தலைக்கருகில் இருந்த துரியோதனனுக்கும் கன்வின்ஸிங்கான பதிலைக் கண்ணன் கூறியது போல, அத்தாட்டியும் நிச்சயமாக ஏதாவது உபாயம் சொல்லுவார் என்கிற நம்பிக்கையில்.

“உருளைக்கிழங்கு போட்டு கடப்பாவா செஞ்சிடலாம். ரெண்டுக்கும் ஒத்துப் போகும்.”

“கும்பகோணம் கடப்பாவா? கேள்விப்பட்டிருக்கேன் அத்தாட்டி. அது இட்டிலிக்கும் ஆகுமா? பூரிக்கு கெட்டி மசாலாவா இருந்தாத்தானே நல்லாருக்கும்.?”

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • இந்த ரெசிபியை இப்ப தான் அறிகிறேன்.பூரிக்கு ரொம்ப மேட்சா இருக்கும் என தெரிகிறது.நடுவே குட்டி கதையும் கூடுதல் சுவைதான்.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!