Home » கரோலி பாபா கொடுத்த ஆப்பிள்
ஆன்மிகம்

கரோலி பாபா கொடுத்த ஆப்பிள்

குண்டான உருவம். அதைப் போர்த்தி சுற்றப்பட்ட கம்பளி. ஒருக்களித்துப் படுக்கவோ அல்லது சம்மணமிட்டு அமரவோ மெத்தை விரிக்கப்பட்ட ஒரு கட்டில். கேள்வி கேட்பவர்களுக்கு ஆழ்ந்த மௌனம். சினேகமாக ஒரு பார்வை. தோளில் ஒரு தட்டு. இவைதான் நீம் கரோலி பாபாவின் அடையாளங்கள். அற்புதங்களின் சங்கமம் என்று இவரைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள். ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ், பேஸ்புக்கின் மார்க் ஸுக்கர்பர்க், ஜூலியா ராபர்ட்ஸ் என அமெரிக்க பிரபலங்கள் வந்து தங்கி வணங்கிச் சென்ற ஆசிரமம் இவருடையதுதான்.

லக்ஷ்மன் தாஸ் என்ற பெயரில் 1900 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் பிறந்தவர் இவர். பதினொரு வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டது. தான் பிறந்ததன் நோக்கம் இதுவல்ல. கடவுள் என்னை வேறு விஷயங்களுக்காகப் படைத்திருக்கிறார் என்று உணர்ந்த அவர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். ஆஞ்சநேயரின் மீது மிகப் பெரிய பக்தி கொண்ட இவர், அவருடைய அவதாரமாகவே பார்க்கப்படுகிறார். தான் செய்வது எல்லாம் அற்புதம் என்பதையே அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஒரு முறை கான்பூர் நகரில் விழா ஒன்றில் கலந்து கொள்ள அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட அவர் அதற்கு முந்தைய நாள்வரை கைஞ்சி தம்மில் உள்ள தனது ஆசிரமத்தில் இருந்திருக்கிறார். இடையில் தூக்கம் வருகிறது என்று தனது அறையில் சென்று தாழிட்டுக் கொண்டுவிட்டார். மறுநாள் வெளியே வந்து வழக்கம்போல் அனைவரையும் சந்திக்க ஆரம்பித்து விட்டார். சில தினங்கள் கழித்து அந்த விழா அமைப்பாளர்கள் அங்கு வந்து அவருக்கு மரியாதை செய்தனர். அப்போதுதான் அவர் இங்கும் அங்கும் இருந்தது இரண்டு தரப்பினருக்கும் தெரிய வந்தது. அவரிடம் கேட்டபோது இருந்திருக்கலாம் எனக்குத் தெரியவில்லை என்று சொல்லிவிட்டாராம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!