கண்ணின் அருமை
கண்ணின் அருமை தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஐம்புலன்களில் மிக முக்கியமான புலன் இது. குறிப்பாகச் சொல்லப்போனால் நமது சுற்றுப்புறத்திலிருந்து வரும் தகவல்களில் கிட்டத்தட்ட 80 % தகவல்கள் கண்கள் மூலமாகத்தான் நமது மூளையை வந்தடைகின்றன. நமது மூளையில் பின்புறத்தில் விஷூவல் கார்டெக்ஸ் எனப்படும் அமைப்பு உள்ளது. இதுதான் விழித்திரையிலிருந்து வரும் தகவல்களைப் பெற்று, ஒருங்கிணைத்துப் பகுத்தறியச் செய்கிறது. நமது மூளையில் மற்றுமொரு முக்கியப் பகுதி அமிக்டலா என்பது. இதுதான் நமது உணர்வுகளை வெளிப்படுத்தும் பகுதியாகும். விஷூவல் கார்டெக்ஸும் அமிக்டலாவும் மிகவும் ஒன்றுக்கொன்று நெருக்கமாக வேலை செய்யக்கூடியவை. உதாரணத்திற்கு நமது மனத்துக்குப் பிடித்தமான ஒருவரைப் பார்க்கும்பொழுது நமது மனநிலை பரவசமடைவதற்கும், விசப் பூச்சி ஒன்றைப் பார்க்கும்பொழுது நாம் அஞ்சி நடுங்குவதற்கும் இந்த அமிக்டலாதான் காரணம். தற்பொழுது மேற்கூறிய விசயங்களை இணைத்துப் பாருங்கள். நமக்குக் கண் பார்வை இல்லையென்றால் இந்த மேற்கூறிய பரவச நிலையையோ அல்லது பய உணர்வையோ நமது மூளையால் நமக்கு உணர வைக்க முடியுமா?
Add Comment